December 04, 2022

ஜபம்-பதிவு-912 மரணமற்ற அஸ்வத்தாமன்-44 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-912

மரணமற்ற

அஸ்வத்தாமன்-44

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

நான் சாஸ்திரங்களை

மட்டுமே கற்ற

பிராமணன் இல்லை

சாஸ்திரங்களுடன்

அஸ்திர வித்தைகளையும்

கற்றவன்

 

சாஸ்திரங்களை

மட்டுமே கற்ற

பிராமணணாக

மட்டுமே

இருந்திருந்தால்

பிராமணணுக்குரிய

வாழ்க்கையாக

மட்டுமே என்னுடைய

வாழ்க்கை இருந்திருக்கும்

அந்த வாழ்க்கையை

வாழ்ந்து முடித்து

இறந்திருப்பேன்

 

ஆனால் நான்

சாஸ்திரங்களை

மட்டுமல்ல

அஸ்திர வித்தைகளையும்

கற்றவனாக இருப்பவன்

அதனால்

அஸ்திர வித்தைகளைக்

கற்ற எனக்கு

மரணம் என்பது

இயல்பான ஒன்றாக

இருக்காது

போரில் தான்

என்னுடைய

மரணம் என்பது

இருக்கும்

 

அதுவும்

இன்னொருவரின்

கையால் தான்

இருக்கும்

 

அந்த மரணமும்

எனக்கு நல்ல

மரணமாக இருக்குமா

அல்லது

கொடுமையான

மரணமாக இருக்குமா

என்று தெரியவில்லை

 

ஆனால் ஒன்று

மட்டும் உறுதி

என்னுடைய

இறுதி வாழ்க்கையும்

இறுதி நாட்களும்

என்னுடைய மரணமும்

அஸ்தினாபுரத்தில்

தான் என்பது

நிச்சயிக்கப்பட்டு

விட்டது என்று

நினைக்கிறேன்

 

அதனால் தான்

காலம் என்னை

அஸ்தினாபுரம்

நோக்கி இழுக்கிறது

 

அஸ்வத்தாமன் :

தந்தையே

நீங்கள்

கவலைப்படாதீர்கள்

 

நான் அருகில்

இருக்கும் வரை

உங்களை யாராலும்

கொல்ல முடியாது

அதற்கு நான்

விட மாட்டேன்

 

நான் இல்லாத

நிலையில்

உங்களை

யாரேனும்

கொன்றால்

நான்

அவர்களை

சும்மா

விடமாட்டேன்

நான்

அவர்களைத்

துடிக்க துடிக்க

கொல்வேன்

 

உங்கள்

இறப்புக்கு

கண்டிப்பாக

நான் பழி

வாங்குவேன்

 

கிருபி :

என் அன்பு

மகனே

 

என்று கிருபி

அஸ்வத்தாமனை

அணைத்துக்

கொள்கிறாள்

 

கிருபி :

நம்முடைய ஏழ்மை

நீங்கி மகிழ்ச்சி

பொங்கும் என்ற

நம்பிக்கையில்

அஸ்தினாபுரம்

செல்கிறோம்

 

நம்முடைய

துன்பங்கள் நீங்கி

இன்பம் பொங்கும்

என்ற நம்பிக்கையில்

அஸ்தினாபுரம்

செல்கிறோம்

 

நம்முடைய

மகனுக்கு நல்ல

கல்வி கிடைக்கும்

என்ற நம்பிக்கையில்

அஸ்தினாபுரம்

செல்கிறோம்

 

உங்களுடைய

திறமை வெளிப்பட்டு

நீங்கள் உயர்ந்த

நிலை அடைவீர்கள்

என்ற நம்பிக்கையில்

அஸ்தினாபுரம்

செல்கிறோம்

 

நம்முடைய

வாழ்க்கையே

மாறப் போகிறது

என்ற நம்பிக்கையில்

அஸ்தினாபுரம்

செல்கிறோம்

 

துரோணர் :

உன்னுடைய

நம்பிக்கை வீண்

போகாது

 

வா செல்லலாம்

 

என்று துரோணர்

சொன்னவுடன்

 

துரோணர் கிருபி

அஸ்வத்தாமன்

அனைவரும்

அஸ்தினாபுரம்

நோக்கி

செல்லத்

தொடங்கினார்

 

அஸ்தினாபுரம்

நோக்கிய

அவர்களுடைய

பயணம்

தொடங்கியது

 

அஸ்வத்தாமன்

அஸ்தினாபுரம்

புறப்பட்டு விட்டான்

 

அன்பு நண்பனுக்கு

கிடைக்க வேண்டிய

அரியணையை

மீட்டுத் தருவதற்காக

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------04-12-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

//////////////////////

No comments:

Post a Comment