March 11, 2019

திருக்குறள்-பதிவு-123


                   திருக்குறள்-பதிவு-123

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
" நடிக்க வேண்டிய
அவசியம் எங்களுக்கு
இல்லை "

" நாங்கள் பிரச்சினையை
தீர்ப்பதற்காக வந்தோம் ;
நீங்கள் பிரச்சினையை
தீர்க்க வேண்டும்
என்ற நோக்கத்துடன்
வந்ததாகத் தெரியவில்லை ; "

" பிரச்சினையை மேலும்
மேலும் வளர்க்கும்
விதத்தில் பேசிக்
கொண்டிருக்கிறீர்கள் "

" ஜியார்டானோ
புருனோவை
மதத்துடன் தொடர்புபடுத்தி
மதப் பிரச்சினையை
பெரிசு பண்ணாமல்
அமைதியை நிலைநாட்ட
என்ன செய்ய வேண்டுமோ
அதை யோசியுங்கள்
அதை பேசுங்கள் "

ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள் :
" அமைதியை எந்த
வகையில் நிலை நாட்ட
வேண்டும் – என்று
நீங்கள் நினைக்கிறீர்கள் "

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
" சிலையை வாட்டிகனைப்
பார்ப்பது போல் அமைப்பது
அமைதியின்மையைத்
தான் ஏற்படுத்தும் "

" மேலும், மேலும்
பிரச்சினை ஏற்படத்
தான் வழிவகுக்கும் "

" ஜியார்டானோ
புருனோவினுடைய
சிலையை வாட்டிகனைப்
பார்ப்பது போல்
அமைக்காமல்
சூரியனை பார்ப்பது
போல் அமைக்க வேண்டும் "

" இது தான் பிரச்சினையை
தீர்ப்பதற்கான ஒரே வழி "

ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள் :
" சூரியனை நோக்கி
வைப்பதால் ஒரு பயனும்
இல்லை - அதனால் தான்
நாங்கள் வாட்டிகன்
நகரத்தைப் பார்ப்பது
போல் ஜியார்டானோ
புருனோவின் சிலையை
நிறுவ இருக்கிறோம் "

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
" அவசரத்தில் எடுக்கப்படும்
முடிவுகள் அவதியைத்
தான் கொண்டு வரும் "

ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள்
" இது அவசரத்தில்
எடுக்கப்பட்ட முடிவு அல்ல
யோசித்து எடுத்த முடிவு
இந்த முடிவில் எந்தவித
மாற்றமும் இல்லை "

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
" நீங்கள் உங்கள் முடிவை
மாற்றிக் கொள்ளவில்லை
எனில் அது எத்தகைய
விளைவுகளை
ஏற்படுத்தும் என்பதை
யோசித்துப் பார்த்தீர்களா "

ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள்
 "நாங்கள் எதையும் பார்க்க
துணிந்து விட்டோம்
எதைக் கண்டும்
அஞ்ச மாட்டோம் "

" நாங்கள் சிலையை
வாட்டிகன் நகரத்தை
நோக்கித் தான்
அமைப்போம் "

" நாங்கள் சிலையை
மாற்றி அமைக்க
மாட்டோம் என்று
சொன்னால்……………………….? "

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
" நாங்கள் மாற்றி
அமைப்போம் "

ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள்
" உங்களால் முடியாது "

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
" ஏன் முடியாது "

ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள் :
" உங்களால்
ஒரு உயிரைத் தான்
கொல்ல முடியும் ;
எந்த ஒன்றையும்
ஆக்கவோ - மாற்றி
அமைக்கவோ
உங்களால் முடியாது "

" மாற்றி அமைக்க
வேண்டும் என்று
நீங்கள் எப்போதோ
முடிவு எடுத்து
இருந்தால் கிறிஸ்தவ
மதத்தில் சீர்திருத்தம்
கொண்டு வந்து
கிறிஸ்தவ மதத்தை
மாற்றி அமைத்து
இருப்பீர்கள் "

" உங்களால் முடியாத
காரணத்தினால் தான்
இங்கு வந்து
மன்றாடிக் கொண்டு
இருக்கிறீர்கள் "

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
" நாங்கள் யாரிடமும்
சென்று மன்றாட
வேண்டிய அவசியம்
எங்களுக்கு இல்லை "

" மக்களின்
அமைதிக்காகத் தான்
நாங்கள் அமைதியாக
இருக்கிறோம் ;'

" இறுதியாக என்ன
சொல்ல வருகிறீர்கள் "

" சிலையை சூரியனைப்
பார்த்தவாறு
நிறுவப் போகிறீர்களா
இல்லையா "

" உங்களுடைய இறுதி
முடிவு தான் என்ன "

யார்டானோ புருனோ
ஆதரவாளர்கள் :
"எங்களுக்கு இறுதி
முடிவு என்ற
ஒன்று இல்லை ;
ஒரே முடிவு தான்
ஜியார்டானோ
புருனோவின் சிலையை
சூரியனைப் பார்த்தவாறு
அமைக்க மாட்டோம்"

" வாட்டிகன் நகரத்தைப்
பார்ப்பது போல் தான்
அமைப்போம் "

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
 "சூரியனைப் பார்ப்பது
போல் நாங்கள்
வைப்போம் "

ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள் :
" அது நாங்கள்
இறந்தால் தான்
நடக்கும் "

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  11-03-2019
//////////////////////////////////////////////


March 10, 2019

திருக்குறள்-பதிவு-122


                   திருக்குறள்-பதிவு-122

(ஜியார்டானோ
புருனோவின் கருத்துக்களால்
கவரப்பட்டு பின்பற்றுபவர்கள்
ஜியார்டானோ புருனோவின்
ஆதரவாளர்கள்

கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை ;
சர்ச்சுகள் ;
கிறிஸ்தவர்கள் ;
ஜியார்டானோ புருனோவின்
எதிர்ப்பாளர்கள்)

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :     
“ ஜியார்டானோ
புருனோவின் சிலையை
சூரியனை பார்ப்பது
போல் நிறுவுகிறோம் ;
என்று சொல்லிவிட்டு
தற்போது சிலையை
வாட்டிகன் நகரத்தைப்
பார்த்த வண்ணம்
அமைப்பது என்பது
எங்களை இழிவு
படுத்தும் செயல் ; “

ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள் :     
“ உண்மையைச் சொன்ன
ஜியார்டானோ
புருனோவை வாட்டிகன்
நகரம் உயிரோடு
எரித்தது இழிவான
செயலாக தெரியவில்லை “

“ஆனால் வாட்டிகன்
நகரத்தை நோக்கி
சிலையை நிறுவுவது
வாட்டிகன் நகரத்திற்கு
இழிவு படுத்தும்
செயலாக தெரிகிறது“

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
“ ஜியார்டானோ
புருனோவிற்கு வழங்கப்பட்ட
தண்டனை என்பது
காலத்தின் கட்டாயம் “

ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள் :
“எது காலத்தின் கட்டாயம்”

“உண்மைகளைச் சொன்ன
ஜியார்டானோ புருனோவை
உயிரோடு எரித்தது
காலத்தின் கட்டாயமா”

“காலத்தின் கட்டாயம்
என்பதற்கு உங்கள்
அகராதியில் இதுதான்
அர்த்தமா………………………? “

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
“உண்மைகளை
வார்த்தைகளில் சொல்ல
முடியாது - சில
உண்மைகளை புரிந்து
கொள்ள முயற்சி
செய்ய வேண்டும்”

ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள் :
“அன்பு, கருணை
என்று சொல்லிக் கொண்டு
நீங்கள் செய்து வரும்
செயல்கள் எத்தகைய
தன்மைகளைக் கொண்டவை
என்பதைத் தான்
இந்த உலகம் அறிந்து
கொள்ள முயற்சி
செய்து கொண்டிருக்கிறது”

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
“இறந்தவருக்காக சிலை
வைக்கிறேன் என்று
சொல்லிக் கொண்டு
உயிரோடு இருப்பவர்களை
கொல்ல முயற்சி
செய்து கொண்டிருக்கிறீர்கள்”

ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள் :
“ கொல்வது; எரிப்பது ;
சாகடிப்பது ;
எல்லாம் எங்கள்
தொழில் கிடையாது “

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
“எங்களுடைய தொழில்
என்று சொல்கிறீர்களா”

ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள் :
“நாங்கள் அவ்வாறு
சொல்லவில்லை”


ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
“ஆனால் நீங்கள்
பேசும் பேச்சுக்கள் ;
செய்யும் செயல்கள் ;
ஆகியவற்றைப் பார்த்தால்
நீங்கள் அனைவரும்
அமைதியை விரும்புவதாக
தெரியவில்லையே”

ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள் :
“ நாங்கள் செய்யும்
செயல்களை
மேலோட்டமாக
பார்த்தால் எதுவும்
தெரியாது ;
ஆழ்ந்து பாருங்கள்
அதன் அர்த்தம் தெரியும் “

“ எதையும் ஆழ்ந்து
யோசிக்காத
காரணத்தினால் தான்
நீங்கள் தொடர்ந்து
தவறு செய்து
கொண்டிருக்கிறீர்கள்;”

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
“யார் தவறு செய்து
கொண்டிருப்பது”

ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள் :
“நீங்கள் தான் !
நீங்கள் தான் !
தொடர்ந்து தவறு செய்து
கொண்டிருக்கிறீர்கள் “

“ ஜியார்டானோ புருனோ
உயிரோடு இருந்தால்
உங்களுக்கு பாதிப்பு
என்ற காரணத்தினால்
அவரைக் கொன்று
தவறு செய்தீர்கள் “

“ ஜியார்டானோ
புருனோவின் சிலையை
வாட்டிகன் அருகில்
வைக்கக் கூடாது என்று
எதிர்ப்பு தெரிவித்து
தவறு செய்தீர்கள் “

“ இப்போது சிலையை
வாட்டிகன் நகரத்தை
நோக்கி வைக்கக்கூடாது
என்று எதிர்ப்பு தெரிவித்து
தவறு செய்கிறீர்கள் “

“அவருக்கு சிலை
வைக்கக்கூடாது
என்பதற்காக எத்தகைய
செயல்களை எல்லாம்
செய்யக் கூடாதோ
அதை எல்லாம்
செய்தீர்கள்”

“தவறு எல்லாம்
தொடர்ந்தாற்போல்
செய்து விட்டு தவறே
செய்யாதது போல்
நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்”

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  10-03-2019
//////////////////////////////////////////////


March 08, 2019

திருக்குறள்-பதிவு-121


                    திருக்குறள்-பதிவு-121

“ ஜியார்டானோ
புருனோவின் சிலை
அவர் உயிரோடு
எரிக்கப்பட்ட இடமான
காம்போ டி ஃபியோரி
(Campo dei Fiori)
என்ற இடத்தில் வைக்க
வேண்டும் என்று
அரசாலும் ஜியார்டானோ
புருனோவின்
ஆதரவாளர்களாலும்
முடிவு செய்யப்பட்டது “

“ கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்பட்டவருடைய
சிலையை வாட்டிகனுக்கு
அருதில் வைப்பது
என்பது  - தங்களை
இழிவு படுத்தும் செயல்
என்று கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை ;
சர்ச்சுகள் ; ஒட்டு
மொத்த  கிறிஸ்தவர்களும்
எதிர்த்தனர்  ; “

“ எதிர்ப்பானது
பேச்சு வார்த்தை
வாக்குவாதம், சண்டை
என்று சென்று
ஜியார்டானோ
புருனோவின் சிலை
வாட்டிகனுக்கு அருகில்
வைக்கலாம் - ஆனால்
சூரியனை பார்த்தவாறு
அமைக்கப்பட வேண்டும்
என்று முடிவு
செய்யப்பட்டு சிலை
வடிக்கப்பட்டது ”

“ ஆனால் தற்போது
செதுக்கி வைக்கப்பட்டு
திறப்பு விழாவிற்காக
காத்துக் கொண்டிருக்கும்
ஜியார்டானோ
புருனோவின் சிலை
சூரியனைப் பார்த்தவாறு
இல்லாமல் ;
வாட்டிகன் நகரத்தை
நோக்கி பார்த்தவாறு
அமைக்கப்பட்டுள்ளது ; “

“ வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு தங்களை
எதிர்த்த ஜியார்டானோ
புருனோவின் சிலையை
நிறுவுவது என்பது
தங்களால் ஏற்றுக்
கொள்ள முடியாத
ஒன்று - என்று
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையும் ;
உலகில் உள்ள ஒட்டு
மொத்த கிறிஸ்தவ
மக்களும் ; எதிர்த்தனர்”

“ வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு வைக்கப்படும்
ஜியார்டானோ
புருனோவின் சிலை ஒட்டு
மொத்த கிறிஸ்தவர்களையும்
இழிவு படுத்தும்
ஒரு செயல்  ;
வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு - இந்த
சிலையை வைக்கக்கூடாது ;
என்று அனைத்து
கிறிஸ்தவர்களும்
போராட்டம் நடத்தினர் ; “

“ சூரியனை பார்ப்பது
போல் சிலையை
நிறுவுகிறோம் - என்று
சொன்னவர்கள் ;
இன்று சிலையை
வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு அமைத்தது ;
என்பது – ஒரு
ஏமாற்று வேலை ;
நயவஞ்சக செயல் ;
பித்தலாட்டத்தின் உச்சம் ;
நம்பிக்கை துரோகம் ;
என்று கிறிஸ்தவர்கள்
அனைவரும் தங்கள்
எதிர்ப்பை தெரிவித்தனர் ; “

“ சூரியன் என்பது
இருளை நீக்கி
ஒளியைத் தருவது ;
இருண்டு கிடக்கும்
வாட்டிகன் நகரம்
ஜியார்டானோ
புருனோவின் பார்வை
பட்டு ஒளிபெற
வேண்டும் என்ற நல்ல
நோக்கத்திற்காகவே ;
ஜியார்டானோ புருனோவின்
சிலை வாட்டிகன்
நகரத்தைப் பார்த்து
அமைக்கப்பட்டது ; “

“ ஜியார்டானோ
புருனோவின் சிலை
வாட்டிகன் நகரத்தை
பார்த்த வண்ணம்
தான் இருக்கும் ;
சூரியனைப் பார்த்த
வண்ணம் சிலையை
மாற்றி அமைக்க
முடியாது ; ‘

“ இதற்காக எங்கள்
உயிரையும் இழப்பதற்கு
நாங்கள் தயாராக
இருக்கிறோம் ;
என்றனர் ஜியார்டானோ
புருனோ ஆதரவாளர்கள் ; “

“ ஜியார்டானோ
புருனோவினுடைய
ஆதரவாளர்கள்
இவ்வாறு சொன்ன
காரணத்தினால்
சிறிய நெருப்பாக      
புகைந்து கொண்டிருந்த
பிரச்சினை - பெரிய
எரிமலையாக வெடிக்க
ஆரம்பித்ததது ;”

“ இரண்டு பிரிவினருக்கும்
வாக்குவாதங்கள் ;
பேச்சு வார்த்தைகள் ;
சண்டைகள் ;
உச்ச கட்டத்தை
அடைந்தன ; “

“ பேச்சு வார்த்தைகள்
பெரும்பாலும் ஒரு
குறிப்பிட்ட விஷயத்தை
மையமாக வைத்தே
பெரும்பாலும் இருந்தன “

“அந்த பேச்சுவார்த்தைகள்
நடந்த விதம்
இப்படித் தான்………………………?

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  08-03-2019
//////////////////////////////////////////////