March 28, 2019

3-ஜியார்டானோ புருனோ உருவான கதை


           3-ஜியார்டானோ புருனோ உருவான கதை

அன்பிற்கினியவர்களே,

திரைப்படத் துறையில்
பணிபுரியும் பலர்
என்னுடைய நண்பர்கள்-அதில்
திரைக்கதை வசனம்
எழுதுபவர்களில் மிகவும் திறமை
வாய்ந்த ஒருவர் என்னுடைய
நண்பர் அவரை போனில்
தொடர்பு கொண்டு பேசினேன்

நான் அவரிடம் ஜியார்டானோ
புருனோ என்பவருடைய
வாழ்க்கை வரலாற்றை
எழுதிக் கொண்டு வருகிறேன்
விசாரணைக் காட்சிகளை
திரைக்கதை வசனம் வடிவில்
எழுதலாம் என்று இருக்கிறேன்
சரியாக வருமா பார்த்துச்
சொல்லுங்கள் - நான் அந்த
கதையைச் சொல்கிறேன்
கேளுங்கள் என்றேன்

அவர் சொல் என்று
சொன்னவுடன் நான்
ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கை வரலாற்றை
எளிமையாக புரியும்படி
சொன்னேன்-அமைதியாக
கேட்டுக் கொண்டிருந்த அவர்
கதையை நான் சொல்லி
முடித்ததும் என்னிடம்
பேசத் தொடங்கினார்

திரைக்கதை வசனம்
எழுதும் போது எளிமையானதாக
இருப்பதை எடுத்து எழுத
வேண்டும் குடும்ப கதை
காதல் கதை எழுதினால்
எளிமையாக எழுதுவதற்கு
உதவிகரமாக இருக்கும்
வரலாற்றுக் கதையை
கற்பனையில் எழுதலாம்
உண்மை வரலாற்றுக் கதையை
அதுவும் ஜியார்டானோ புருனோ
போன்ற சிக்கலான வரலாற்றுக்
கதையை எழுதக் கூடாது

ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கை வரலாறு என்பது
சிக்கலான கதை அதற்கு
சரியான விதத்தில் திரைக்கதை
வசனம் எழுதவில்லை என்றால்
கதை காமெடி படமாகிவிடும்
ஏற்கனவே கொல்லப்பட்ட
ஜியார்டானோ புருனோவை
மீண்டும் கொன்றதாகி விடும்

ஆரம்பத்தில் திரைக்கதை
வசனம் எழுத ஆரம்பிப்பவர்கள்
எளிமையான கதையாக
எடுத்து எழுத வேண்டும்
இதைப்போன்ற கதைகளை
தேர்வு செய்வது என்பது
தவறாக முடிந்து விடும்
என்று அவர் சொல்லிக்
கொண்டிருக்கும் போதே
நான் சரி நீங்கள் எதுவும்
சொல்ல வேண்டாம் நான்
எழுதுகின்ற கதையை
உங்களுக்கும் அனுப்புகிறேன்
படித்துப் பாருங்கள் என்று
கோபத்துடன் போனை
வைத்து விட்டேன்

ஆனால் யோசித்து பார்த்ததில்
அவர் சரியாகத் தான்
சொன்னார் நான் கோபப்பட்டது
தான் தவறு என்று உணர்ந்தேன்

திரைக்கதை வசனம்
சரியாக அமையவில்லை
என்றால் ஜியார்டானோ
புருனோ என்ற புரட்சியாளரின்
வாழ்க்கை வரலாறு
நகைப்புக்கு இடமாகிவிடும்
எனவே, திரைக்கதை வசனம்
சரியாக அமைய வேண்டும்
என்று பெரு முயற்சி
எடுத்து விசாரணைக்
காட்சிகளை எழுதினேன்

ஒவ்வொரு விசாரணைக்
காட்சியும் வித்தியாசமான
திரைக்கதையுடன் அமைத்தேன்
ஜியார்டானோ புருனோ
உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட
17-02-1600 அன்று வரை
அனைத்து விசாரணைக்
காட்சிகளையும் மிகுந்த
கவனத்துடன் எழுதினேன்
17-02-2019 பல்வேறு தடைகளுக்கு
மத்தியில் ஜியார்டானோ
புருனோவை உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட காட்சிக்கான
பதிவையும், வீடியோவையும்
பதிவு செய்து விட்டேன்

அன்றைய நாளில் இரவு
10.30 மணிக்கு எனக்கு
ஒரு போன் கால் நான்
கோபப்பட்ட திரைக்கதை
வசனம் எழுதும் என்
நண்பர் நான் உன்னிடம்
கொஞசம் பேச வேண்டும்
என்றார்- பேசுங்கள் என்றேன்

அவர் பேசினார்
“ உன்னுடைய திரைக்கதை
வசனத்தால் எழுதப்பட்ட
ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கை வரலாறு
அனைவருக்கும் பிடிக்கும்”

“அதைப்போல ஜியார்டானோ
புருனோவை யாருக்கெல்லாம்
பிடிக்காதோ அவர்களை
எல்லாம் அழைத்து வந்து
நீ எழுதிய திரைக்கதை
வசனம் கொண்ட ஜியார்டானோ
புருனோ வாழ்க்கை வரலாற்றை
படிக்கச் சொன்னால்
ஜியார்டானோ புருனோவை
பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கும்
அதற்குக் காரணம் திரைக்கதை
வசனத்தில் நீ கையாண்டிருக்கும்
தமிழ் என்று அவர் சொன்ன
போது அவர் என் மேல் உள்ள
அன்பால் அவ்வாறு சொன்னார்
என்பதை உணர்ந்து கொண்டேன்

 “தன்னிடம் என்ன திறமை
இருக்கிறது என்பதை
கண்டுபிடிப்பதற்கு காலம்
பல வாய்ப்புகளை ஏற்படுத்திக்
கொடுக்கிறது ! - அந்த
வாய்ப்புகளை பயன் படுத்திக்
கொண்டு தன்னிடம்
என்ன திறமை இருக்கிறது
என்பதை கண்டு பிடித்து
செயல்படுத்தத் தெரிந்தவனால்
மட்டுமே மக்கள் மனதில்
இடம் பிடிக்கவும் முடியும் ;
இந்த உலகத்தையே தன்னை
நோக்கி திரும்பிப் பார்க்க
வைக்கவும் முடியும்;-தன்னிடம்
என்ன திறமை இருக்கிறது
என்பதை கண்டு பிடிக்க
முடியாதவன் இந்த உலகத்தை
பார்த்தவாறு இருக்க வேண்டியது
தான் என்ற ரகசியத்தை
தெரிந்து கொண்டேன்

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்



March 27, 2019

2-ஜியார்டானோ புருனோ உருவான கதை



            2-ஜியார்டானோ புருனோ உருவான கதை

அன்பிற்கினியவர்களே,

ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டது 17-02-1600
என்று எனக்குத் தெரியும்.
28-01-2019 அன்று ஜியார்டானோ
புருனோவின் வாழ்க்கை
வரலாற்றை எழுதிக்
கொண்டிருந்த போது
ஜியார்டானோ புருனோவை
உயிரோடு எரித்த தேதி
இன்னும் 20 தினங்களில்
17-02-2019 அன்று வருகிறது
என்பதைத் தெரிந்து
கொண்டேன்.

ஜியார்டானோ புருனோவை
உயிரோடு எரித்துக் கொல்லும்
காட்சியைப் பற்றிய பதிவையும்
வீடியோப் பதிவையும்
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட நாளான
17-02-2019 அன்று பதிவிட
வேண்டும் என்று முடிவு
செய்து அதை என்னுடைய
நண்பர்களுக்கு போன் மூலம்
நான் எடுத்த முடிவை
அவர்களிடம் சொன்னேன்

அருமையான அமைப்பு இது
மாதிரி நாள் என்பது
யாருக்கும் அமையாது
நாங்கள் என்ன உதவிகள்
செய்ய வேண்டும் என்று
மட்டும் சொல்லுங்கள் என்ற
வார்த்தைகளை மட்டுமே
சொன்னார்கள்

நான் சொன்னேன் ஜியார்டானோ
வாழ்க்கையில் நடந்த எந்த
நிகழ்ச்சியையும் விடுவதற்கு
எனக்கு மனமில்லை அனைத்து
நிகழ்ச்சிகளையும் எழுதி
முடித்து விட்டு பிறகு
தான் அன்று எரிக்கும்
காட்சியை போடுவேன் என்றேன்
சரி என்றார்கள் இது
மாதிரியான ஒரு அமைப்பை
தவற விட்டு விடக்கூடாது
என்ற எண்ணம் மட்டுமே
என்னுடைய மனதில் இருந்தது

ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட அந்த தேதியில்
எப்படியாவது ஜியார்டானோ
புருனோ எரிக்கப்பட்ட பதிவையும்,
வீடியோ காட்சியையும் போட்டு
விட வேண்டும் என்று
முடிவு எடுத்தேன் பதிவு
செய்தது போக மீதமுள்ள
காட்சிகளை கணக்கில்
எடுத்துக் கொண்டு ஒரு
நாளைக்கு ஒரு பதிவு
என்று பதிவு இட்டால்
29-01-2019 முதல் 16-02-2019,
19 நாட்கள் வரை பதிவு
போட்டால் தான் 20 வது
நாளான ஜியார்டானோ
புருனோ உயிரோடு எரிக்கப்பட்ட
நாளான 17-02-2019 அன்று
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட பதிவையும்,
வீடியோ காட்சியையும்
போட முடியும்

ஒரு நாள் கூட தவறாமல்
பதிவு போட்டால் மட்டுமே
இது சாத்தியம் என்று
முடிவெடுத்து  கட்டுரையை
போட ஆரம்பித்தேன் அந்த
19  நாட்களில் 10 நாட்கள்
நான் தூங்காமல்
எழுதி முடித்து
விட்டு அலுவலகத்திற்கு
சென்ற நாட்கள்

என்னால் திட்டமிட்டபடி
குறிப்பிட்ட அந்த நாளில்
பதிவையும், வீடியோ
காட்சியையும் பதிவிட முடியும்
என்ற அசாத்திய துணிச்சலுடன்
எழுதத் தொடங்கினேன் அந்த
நாட்களில் எழுதிய அனைத்து
காட்சிகளும் முக்கியத்துவம்
வாய்ந்த காட்சிகள்
கதையை முடிக்க வேண்டும்
என்ற அவசரத்தில் கதையை
சுருக்கியோ - கருத்தையோ
காட்சிகளையோ குறைத்தோ
நான் எழுதவில்லை
விசாரணைக் காட்சிகள்
எந்த அளவுக்கு தரமானதாக
இருக்க வேண்டுமோ அந்த
அளவுக்கு தரமானதாக இருக்க
வேண்டும் என்ற நோக்கத்துடன்
சிறிது கூட தரம் குறையக்
கூடாது என்ற நினைப்புடன்
நான் பதிவுகளை எழுதினேன்.

17-02-2019 ஜியார்டானோ
புருனோ உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட அந்த நாளில்
காலை 03,00 மணிக்கு
எழுந்து ஏற்கனவே எழுதி
வைத்த பதிப்பை சரி
செய்து பதிவு செய்ய
முற்பட்டால் பதிவு
இடமுடியவில்லை.
தொடர்ந்து முயற்சி செய்தும்
பதிவிட முடியவில்லை,
காலை 03.00 மணி முதல்
06.00 மணி வரை எவ்வளவோ
முயற்சி செய்தும் என்னால்
பதிவிட முடியவில்லை

என்னுடைய நண்பர்கள் 06.00
மணிக்கு வெளியூரிலிருந்து
வந்தார்கள் அவர்களும்
தொடர்ந்து முயற்சி செய்தும்
பதிவிட முடியவில்லை
என்னுடைய நண்பர்கள்
அனைவரும் ஒரு விழாவிற்காக
சென்னை வந்திருந்தனர்- நேரம்
போய்க் கொண்டே இருந்தது
பதிவிட முடியவில்லை
இறுதியாக 08.30 மணிக்கு
FACE BOOK-ல் மட்டும் பதிவிட
முடிந்தது WHATSAPP-ல் பதிவிட
முடியவில்லை விழாவிற்கு
காரில் செல்லும் போது
WHATS APP ல் பதிவிட
முடிந்தது

ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட 17-02-1600-ஆம்
ஆண்டு சரியாக 17-02-2019
அன்று ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட பதிவையும்,
வீடியோ காட்சியையும்
பல்வேறு தடைகளுக்கு
இடையில் பதிவிட்ட போது
எது எப்போது - எங்கே
யார் மூலமாக வெளிப்பட
வேண்டுமோ அது - அந்த
நேரத்தில் அந்த இடத்தில்
அவர் மூலமாக வெளிப்படும்
அதை யாராலும் தடுக்க
முடியாது என்ற பிரபஞ்ச
ரகசியத்தை தெரிந்து கொண்டேன்

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்

March 26, 2019

1-ஜியார்டானோ புருனோ உருவான கதை

            1-ஜியார்டானோ புருனோ உருவான கதை

அன்பிற்கினியவர்களே !
நான் பல ஆண்டுகளாக
பல்வேறு இணையதளங்களில்
ஆன்மீகக் கட்டுரைகள் ;
சித்தர்கள் பாடல்கள் ;
இலக்கியங்களில் உள்ள
பாடல்கள் ; ஆகியவற்றிற்கு
விளக்கங்கள் 200 க்கும்
மேற்பட்ட தலைப்புகளில் எழுதி
இருக்கிறேன் - இந்து மதம்
கிறிஸ்தவ மதம் ஆகிய
இரண்டு மதங்களையும்
இணைத்து ஆய்வு செய்து
100 க்கும் மேற்பட்ட ஆய்வுக்
கட்டுரைகளையும் எழுதி
இருக்கிறேன் !

அதனைத் தொடர்ந்து
Whats app -ல் கலிலியோ
அவர்களின் வாழ்ககை
வரலாறை எழுதிக்
கொண்டிருந்தபோது வேறு
யாரேனும் சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது என்று
சொல்லி இருக்கிறார்களா என்று
தேடியபோது ஒருவர் சொல்லி
இருக்கிறார் அவரை உயிரோடு
எரித்து விட்டார்கள் அவருடைய
பெயர் ஜியார்டானோ புருனோ
என்ற விவரம் கிடைத்தது

அவரைப்பற்றிய தெளிவான
விவரங்கள் எதுவுமே
இணையதளங்களிலும் ;
புத்தகங்களிலும் ;
வீடியோக்களிலும் ; இல்லை
அவரை சிறையில் அடைத்து
7 வருடம் சித்திரவதை செய்து
உயிரோடு எரித்துக் கொன்றார்கள்
என்ற விவரம் மட்டுமே
தமிழ், ஆங்கிலம் ஆகிய
இரண்டு மொழிகளிலும்  நான்
தேடியவைகள் அனைத்திலும்
இருந்தன அவரைப்பற்றி
விவரங்கள் அனைத்துமே
அழிக்கப்பட்டிருந்தன ;

இருந்தும் மிகுந்த
பிரயாசைக் கிடையில்
சென்னையில் உள்ள முக்கியமான
நூலகங்கள் பலவற்றிற்கும் சென்று
அங்கு உள்ள புத்தகங்களைப்
படித்துப் பார்த்து அவைகளை
நகல் எடுத்தும் இணையதளத்தில்
முடிந்த அளவு Download செய்த
தகவல்களை அடிப்படையாகக்
கொண்டும் பல்வேறு வகையான
வரலாற்று Video க்களை
அடிப்படையாகக் கொண்டும்
எழுதப்பட்டவை தான் நீங்கள்
படித்த ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கை வரலாறு

ஆங்கில புத்தகங்களில் உள்ள
முக்கிய பகுதிகளை குறித்து
கொடுப்பேன் நண்பர்கள்
அனைவரும் அதை மொழி
பெயர்த்து கொடுப்பார்கள்
பின்னர் நான் அந்த
மொழிப்பெயர்ப்புகளையும்
புத்தகத்தையும் ஒப்பு நோக்கி
கருத்துக்களை உள் வாங்கிக்
கொண்டு டைப் செய்ய
ஆரம்பிப்பேன்

நான் ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கை வரலாற்றை ஆராய்ச்சி
செய்து ஏறத்தாழ 500 பக்கங்களுக்கு
மேல் டைப் செய்து வைத்திருந்தேன்
அந்த கருத்துக்களில் கிட்டத்தட்ட
160 பக்கங்கள் வரைதான்
பதிவு செய்திருப்பேன்

விசாரணைக் காட்சிகளும்
பெரும்பாலான முக்கியமான
காட்சிகளும் அதனுடைய
கருத்து சிதைந்து விடக்கூடாது
என்ற காரணத்திற்காக பத்து
நாட்கள் ஒரே இரவில் எழுதினேன்
அதாவது இரவு 09.00 மணிக்கு
தொடங்கி காலை 06.30 மணி
வரை முடித்து விட்டு தூங்காமல்
அலுவலகத்திற்கு சென்றிருக்கிறேன்
தொடர்ச்சியாக ஒரே இரவில்
டைப் செய்து விட்டு
அதை இரண்டு அல்லது
மூன்று பதிவுகளாக பிரித்து
பதிவு செய்தேன்

எண்ணிக்கையில் அடங்காத
புத்தகங்களை படித்து
அதில் குறிப்பிட்ட பக்கங்கள்
600 பக்கங்களுக்கு மேல்
புத்தகங்களிலிருந்து
நகல் எடுத்து இருக்கிறேன்
இணையதளத்தில் இருந்து
1000 க்கும் மேல் உள்ள
பக்கங்களை தரவிறக்கம்
செய்து Print எடுத்திருக்கிறேன்

ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கை வரலாறு மற்றும்
அதில் இடம்பெறும் விசாரணைக்
காட்சிகளை தமிழில் முதன்
முதலில் திரைக்கதை வசனம்
அமைத்து எழுதி இருக்கிறேன்

ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கை வரலாற்றை எனக்கு
எழுதுவதற்கு உறுதுணையாக
இருந்தவர்கள்

1,கிரிஷ் கிருஷ்ணா
இயக்குநர், இசையமைப்பாளர்
சென்னை

2.வெங்கட சுப்பிரமணி
Manager-வேலூர்

3.சையது ரியாஸ்
System Administrator-DUBAI

4.கார்த்தி
Visa Executive, சென்னை

5.சந்தோஷ குமார்
HR-Assistant. சென்னை

இவர்களுடைய அயராத
உழைப்பினாலும் உதவியினாலும்
ஒத்துழைப்பினாலும் உருவானது
தான் ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கை வரலாறு

இதை எல்லாம் கடந்து
நான் எழுதுவதற்கு எந்தவிதமான
எதிர்ப்பும் சொல்லாமல்
எந்தவிதமான தடங்கலையும்
செய்யாமல் எனக்கு என்றும்
உறுதுணையாக இருந்து
கொண்டிருக்கும் என்னுடைய
அன்பு மனைவி பிரதிபா
அவர்களுக்கும் என்னுடைய
நன்றியினைத் தெரிவித்துக்
கொள்கிறேன்

என்னுடைய நண்பர் ஒருவர்
ஜியார்டானோ புருனோவின்
ஆத்மாவை 600 ஆண்டுகள்
கழித்து உயிரோடு உலவ
விட்டு இருக்கிறீர்கள் என்றார்
நான் சொன்னேன் இல்லை
600 ஆண்டுகளாக உலவிக்
கொண்டிருந்த ஜியார்டானோ
புருனோவின் ஆத்மாவை
அமைதி பெற
வைத்திருக்கிறேன் என்று !

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்

March 24, 2019

திருக்குறள்- பதிவு - 131

திருக்குறள்- பதிவு - 131

“ தான் வாழ்வதற்காகவும் ;
தன்னுடைய குடும்பம்
வாழ்வதற்காகவும் ;
தன்னுடைய சந்ததிகள்
வாழ்வதற்காகவும் ;
பணத்திற்காகவும் ;
பதவிக்காகவும் ;
அதிகாரத்திற்காகவும் ;
மானமிழந்து மண்டியிட்டு
கால்பிடித்து வாழ்பவர்கள்
மத்தியில் ,

“ கொள்கை என்றால்
என்ன என்று தெரியாமல்
தங்களுடைய
வாழ்வாதாரத்திற்காக
போராட்டம் நடத்துபவர்களை
சமூக விரோதிகள் என்றும் ;
தங்கள் உரிமைக்காக
போராடுபவர்களை
தீவிரவாதிகள் என்றும் ;
தேவையற்ற வார்த்தைகளை
பேசிக்கொண்டு ;
சுகபோகத்தில்
திளைத்துக் கொண்டு ;
கூத்தடித்துக் கொண்டு ;
கோட்டையைப் பிடித்து
விடலாம் என்று
பதவி ஆசை பிடித்து
அலைபவர்கள்
மத்தியில் ,

“ இருண்டு கிடந்த மக்கள்
உள்ளங்களில் பகுத்தறிவு
என்ற அறிவு விளக்கு
ஏற்றி - உண்மையான
பகுத்தறிவாதிகள்
வாழ்ந்த நாட்டில்
பகுத்தறிவு என்றால் என்ன
என்று தெரியாமல்
பகுத்தறிவுக்கு ஒவ்வாத
செயல்களைச் செய்து
கொண்டு - பகுத்தறிவு
என்ற போலியான
முகமூடியை அணிந்து
கொண்டு மக்களை
அடிமைகளாக வைத்து
ஆள நினைப்பவர்கள்
மத்தியில் ,

“ அரசியல் அதிகாரம் ;
பொருளாதார பாதுகாப்பு ;
ஆகியவற்றை பயன்படுத்தி
மதத்தின் பெயரால்
மக்களை ஏமாற்றி
ஆட்சி செய்து
கொண்டிருந்தவர்கள்
நாட்டுப்பற்று ,
மதப்பற்று ,
கடவுள் பற்று - ஆகிய
பற்றுகளை வைத்துக்
கொண்டு - மக்களிடையே
பகைமையை வளர்த்து ;
அமைதியின்மையை
ஏற்படுத்தி  ;
அதிகாரத்தை கைப்பற்றி ;
ஆட்சி செய்ய துடிப்பவர்கள்
மத்தியில் ,

“ தனக்காக வாழாமல்
இந்த சமுதாயத்திற்காகவே
வாழ்ந்து; ‘

“ சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது
என்று பைபிளில்
உள்ள கருத்துக்கு
எதிராக கருத்து சொன்ன
காரணத்திற்காகவும் ; “

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை நடைமுறைப்
படுத்தி வைத்திருக்கும்
அனைத்து பழக்க
வழக்கங்களிலும்
சீர்திருத்தம் கொண்டு
வர வேண்டும் என்று
சொன்ன காரணத்திற்காகவும் ; “

“சர்ச்சுகள் காலம் காலமாக
கடைபிடித்துவரும்
மதப் பழக்கங்களில்
மாற்றம் கொண்டு வர
வேண்டும் என்று சொன்ன
காரணத்திற்காகவும் ; ‘

“ இந்த உலகத்திலுள்ள
மக்கள் அனைவரையும்
அடிமைப்படுத்துவதற்கு
தேவையான முயற்சிகளை
செய்து கொண்டிருக்கும்
கிறிஸ்தவ மதம்
மனிதனை
அடிமைப்படுத்துவதற்கு
தேவையான முயற்சிகளை
செய்யக் கூடாது
அந்த முயற்சிகளை
நிறுத்த வேண்டும் என்று
சொன்ன காரணத்திற்காகவும் ; “

“ கல்வியும், விஞ்ஞானமும்
மதம் மற்றும் அரசியல்
தலையீடு இல்லாமல்
சுதந்திரமாக இருக்க
வேண்டும் என்று
சொன்ன காரணத்திற்காகவும் ; “

“ ஜியார்டானோ புருனோ
உயிருடன் எரித்துக்
கொல்லப்பட்டார் ; ‘

“ 17-02-1600-ஆம் ஆண்டு
ஜியார்டானோ புருனோ
உயிருடன் எரித்துக்
கொல்லப்பட்டதற்கு
நினைவாக ;
09-07-1889-ஆம் ஆண்டு
வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு அமைக்கப்பட்ட
ஜியார்டானோ
புருனோவின் சிலை ;
24-03-2019 இன்று வரை
வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு தான்
ஜியார்டானோ
புருனோவின் சிலை
நின்று கொண்டிருக்கிறது ‘

“ வாட்டிகன் நகரம் ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை ;
சர்ச்சுகள் ;
கிறிஸ்தவர்கள் ;
ஆக மொத்தம் உலகில்
உள்ள அனைத்து
கிறிஸ்தவர்களுக்கும்
வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு
இன்றளவும் நின்று
கொண்டிருக்கும்
ஜியார்டானோ புருனோவின்
சிலை ஒரு ஆறாத
வடுவாகத் தான்
இருந்து கொண்டிருக்கிறது
என்பது வரலாறு
பதிவு செய்து
வைத்திருக்கும் உண்மை ; ‘

“ ஜியார்டானோ புருனோ
என்ற நெருப்பை
நெருப்பால் எரித்த
கிறிஸ்தவர்கள்
ஜியார்டானோ
புருனோவின் பார்வை
என்ற நெருப்பால்
ஒவ்வொரு கணமும்
எரிந்து கொண்டு தான்
இருக்கிறார்கள் ; ‘

---------   இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  24-03-2019

“ஜியார்டானோ புருனோ
என்ற புரட்சியாளர்
கிறிஸ்தவர்களால்
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டாலும் ;
அவரை உயிரோடு
எரித்த அந்த நெருப்பு ;
இன்று வரை
அணையாமல் இருந்து ;
கோடிக்கணக்கான
ஜியார்டானோ
புருனோக்களை உருவாக்கிக்
கொண்டுதான் இருக்கிறது ;”

“ ஜியார்டானோ புருனோவை
கிறிஸ்தவர்கள் உயிரோடு
எரித்துக் கொன்ற
காட்சியை மீண்டும்
ஒருமுறை பாருங்கள்
புரட்சியின் வித்து
எங்கே விதைக்கப்படுகிறது
என்பது தெரியும் !! “

“ ஜியார்டானோ புருனோ
என்ற புரட்சியாளரின்
போராட்ட வாழ்க்கை
இத்துடன் நிறைவு
பெறுகிறது !! “