July 11, 2019

பரம்பொருள்-பதிவு-39


                   பரம்பொருள்-பதிவு-39

" கடவுளை கடவுள் என்ற
இடத்தில் வைத்துப்
பார்க்கக்கூடிய
நிலையில் இல்லாதவர்கள் ;
கடவுளின் தெய்வீகத்
தன்மையை உணர்ந்து
பார்க்கக்கூடிய
நிலையில் இல்லாதவர்கள் ;
கடவுளுடைய புனிதத்
தன்மையை அறிந்து
பார்க்கக்கூடிய
நிலையில் இல்லாதவர்கள் ;
கடவுளுடைய உண்மை
ஆற்றலைத் தெரிந்து
பார்க்கக்கூடிய
நிலையில் இல்லாதவர்கள் ;
இவர்கள் அனைவரும்
கடவுள் என்றால் என்ன
என்பதை உணராத
நிலையில் இருப்பவர்கள் "

" இவர்கள் தான் தாங்கள்
வணங்கும் புதிய கடவுளை
உண்மையான கடவுள்
என்று நினைத்துக் கொண்டு
தங்களுடைய புதிய கடவுளை
புதிய மதத்தின் மூலம்
வியாபாரம் செய்பவர்கள் "

" புதிய கடவுளை
புதிய மதத்தின் மூலம்
வியாபாரம் செய்து பிழைக்க
வந்தவர்களான இவர்கள்
கடவுளை வணங்குகிறோம்
என்று கூறிக்கொண்டு
ஆடிக் கொண்டும் ;
பாடிக் கொண்டும் ;
பேசிக் கொண்டும் ;
கூத்தடித்துக் கொண்டும் ;
கும்மாளமிட்டுக் கொண்டும் ;
செய்யும் செயல்களை
தங்களுடைய செயல்களோடு
நிறுத்திக் கொள்ளாமல் ;
இந்த நாட்டில் பிறந்த
மதமான இந்து மதத்தையும் !
இந்து மதத்தின்
வழிபாட்டுத் தலங்களையும் !
இந்து மதத்தின்
கடவுள் சிலைகளையும் !
இந்து மதத்தின்
புனித நூல்களையும் !
இந்து மதத்தின்
புனித குறியீடுகளையும் !
இழிவு செய்து இந்து
மதத்தை அழிக்கும் தவறான
செயல்களைச் செய்து 
தங்களுடைய புதிய
மதத்தை குறுக்கு வழியில்
நிறுவுவதற்கான தப்பான
செயலைச் செய்து
கொண்டு இருக்கிறார்கள் "

" இவ்வாறு தப்பான
செயல்களைச் செய்து
கொண்டிருக்கும்
இவர்களுடைய செயல்களைத்
தடுத்து தப்பானவர்களை
அழிப்பதற்கு- சிவநாமம்
ஒன்றே போதும் என்பதையும் ;
அந்த சிவநாமமே தீமையை
அழித்து நன்மையைக்
கொடுக்கும் என்பதையும் ;
அந்த சிவநாமமே இவ்வுலகில்
உள்ள தேவையற்றவைகள்
அனைத்தையும் அழிக்கும்
வல்லமை படைத்தது
என்பதையும் ;
உணர்ந்திருந்த சிவநேசர்
சிவநாமத்தை நாள் தவறாமல்
நேரம் தவறாமல் உச்சரித்துக்
கொண்டே இருந்தார் "

" இந்து மதம்; சைவநெறி ;
சிவநாமம்; ஆகியவற்றின்
மேல் அன்பும் ; மதிப்பும் ;
மரியாதையும் வைத்திருந்த
சிவநேசர் சிவனடியார்கள்
மீதும் அதே அன்பும்;
மதிப்பும் ; மரியாதையும்;
வைத்திருந்தார் "

" ஞானக்குழந்தையான
திருஞான சம்பந்தருக்கு
தெய்வத் தாயாகிய
உமாதேவியார் ஞானப்பாலை
அருளியதையும் - அதை
திருஞானசம்பந்தர்
உண்டதையும்
கேள்வியுற்ற சிவநேசருக்கு
திருஞானசம்பந்தர் மேல்
வார்த்தைகளால் வார்க்க
முடியாத பக்தி உண்டாகியது ;"

"புத்த மதம் ; சமண மதம் ;
ஆகிய மதங்களை
இந்தியாவிலிருந்து களைந்து
வெளியேற்றுவதற்காக
திருஞானசம்பந்தர் எடுத்த
முயற்சிகள் - அதற்காக
திருஞானசம்பந்தர் நிகழ்த்திய
அற்புதங்கள் ஆகியவற்றை
கேள்வியுற்ற சிவநேசருக்கு
திருஞானசம்பந்தர் மேல்
அளவுகளால்
அளவிட முடியாத
அன்பு உண்டாகியது ;"

" இந்து மதம்; சைவநெறி ;
சிவநாமம் ; ஆகியவற்றை
மக்கள் மத்தியில் கொண்டு
செல்வதற்காகவும் - மக்கள்
அதனை ஏற்றுக் கொண்டு
பின்பற்றி உயர்வடைய
வேண்டும் என்பதற்காகவும்
திருஞான சம்பந்தர்
செய்த சேவையைக்
கேள்வியுற்ற சிவநேசருக்கு
திருஞான சம்பந்தர் மேல்
மதிப்புகளால்
மதிப்பிட முடியாத
மரியாதை உண்டாகியது ;"

" இதனால் சிவநேசர்
இந்து மதம் ; சைவநெறி ;
சிவநாமம்; மட்டுமல்லாமல்
திருஞானசம்பந்தருடைய
பக்தியையும் - அவருடைய
பெருமையையும்
இரவும், பகலும்
நினைத்துக் கொண்டிருப்பது ;
திருஞான சம்பந்தரை
தியானிப்பது; வணங்குவது ;
அவர் புகழ் பாடுவது ;
என்று தன்னுடைய
வாழ்க்கையை ஓட்டினார் "

" சிவநேசர் கடவுள் மேல்
கொண்ட உண்மையான
பக்தியினாலும் - அவர்
செய்த தவப் பயனாலும்
அவருக்கு ஒரு
பெண்குழந்தை பிறந்தது ;
பெண் குழந்தை பிறந்த
சந்தோஷத்தை கொண்டாடும்
விதமாக ஏழைகளுக்கு
ஏராளமான உடைகளையும்,
பெரும் நிதிகளையும்
வாரி வாரி வழங்கினார் ;"

" மேலும், முறைப்படி செய்ய
வேண்டிய பத்துநாள்
மறைவிதிச் சடங்குகள்
அனைத்தையும் செய்து
முடித்து அந்த பெண்
குழந்தைக்கு பெயர் சூட்டினார் "

" அந்தப் பெண்ணின்
பெயர் தான்………………………………………….?
அந்தப் பாவையின்
பெயர் தான்…………………………………………? "

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 11-07-2019
//////////////////////////////////////////////////////////

July 09, 2019

பரம்பொருள்-பதிவு-38


                  பரம்பொருள்-பதிவு-38

“ பக்தி வெள்ளம்
கரைபுரண்டு ஓடிக்
கொண்டிருந்த
திருமயிலாப்பூர்
என்னும் இடத்தில்
வாணிபத்தின் மூலம்
இந்த உலகத்திற்கு
தேவையானவற்றை
வாரி வழங்கிக்
கொண்டிருந்த
செல்வமிகு
வணிகர் குலத்தில்
பிறந்தவர் சிவநேசர் “

“அவர் பலமரக்கலங்களை
தன்னிடம் வைத்து
வாணிபம் செய்தவர் ;
தேவையான
மரக்கலங்களை
தேவையான அளவிற்கு
கடலில் அனுப்பி
தேவையான அளவு
வாணிபம் புரிந்து
தேவைக்கு அதிகமான
செல்வங்களை குவித்து
அனைவரும் வியக்கும்
வகையில் வாணிபத்தில்
அரசராகத் திகழ்ந்தவர் ; “

“ வாணிபத்தில்
கோட்டை கட்டி
வாழ்ந்து மிகப்பெரிய
செல்வந்தராகத்
திகழ்ந்தவர் ;
கண்டவர் மட்டுமல்ல
கேட்டவரும் வியந்து
வியக்கும் வண்ணம்
செல்வச் செழிப்பில்
திளைத்தவர் ;
கணக்கில்
அடங்கமுடியாத
செல்வத்திற்கு
உரிமையாளராக
விளங்கியவர் ;
கணக்கில் அடக்க
முடியாத
செல்வத்திற்கு
சொந்தக்காரராக
இருந்தவர் ;
கணக்கில் கொண்டு
வரமுடியாத
அளவிற்கு அளவற்ற
நிதிகளுக்கு தலைவராக
விளங்கியவர் ;”

“ அளவற்ற செல்வச்
செழிப்பில் திளைத்தாலும்
ஆணவத்தின்
சாயல் சிறிதும்
தன்னை அண்டாமல்
பார்த்துக் கொண்டவர் ;”

“ அவர் பொய்யையும்
மெய்யையும்
வேறுபடுத்தி
பிரித்து பார்க்கத்
தெரிந்தவர்  ;
உண்மையான தெய்வம்
சிவமே என்றும்
அவர் பாதமலர்
பணிதலே இப்பிறப்பை
கடக்க வழி
என்பதை புரிந்து
வைத்திருந்த
காரணத்தினால்
சிவநாமத்தை தவிர
வேறு எந்த ஒரு
நாமத்தையும்
உச்சரிக்காமல்
அனுதினமும்
சிவநாமத்தை
மட்டுமே உச்சரித்து
நமசிவய என்ற
ஐந்தெழுத்து
மந்திரத்தின்
உரு வடிவமாக
திகழ்ந்தவர் ;”

“சிவநாமத்தை
எந்நேரமும் உச்சரித்து
சிவனை எப்போதும்
தன்னுடைய சிந்தையில்
இருந்து அகற்றாதவர் ;”

“ சிவனை வணங்கும்
சிவனடியார்களுடன்
கலந்து சிவனை
நினைத்து
உள்ளம் உருகி
கண்ணீர் சிந்தி
பாடல்கள் பாடி
வாழ்ந்தவர் ;”

“ ஊர் விட்டு
ஊர் வந்த மதங்கள்
அனைத்தும்
இங்குள்ள மக்களை
அண்டி பிழைக்க
வந்த மதங்கள் ;
உண்மையை மறைத்து
மக்களை தவறான
கருத்துக்கள் மூலம்
மக்களுடைய
மனங்களை
மதத்தின் பெயரால்
அடிமைப்படுத்தி
வைத்திருப்பவை ;”

“ ஊர்விட்டு ஊர்
வந்த மதங்கள்
மக்களை வசியப்படுத்தி
மயக்கி வைத்திருக்கும்
மதங்கள் என்று
உணர்ந்திருந்த
சிவநேசர்
அத்தகைய போலியான
மதங்களை புறக்கணித்து
சைவநெறி வழுவாமல்
வாழ்ந்து வந்தவர்
தான் சிவநேசர் “

“ ஊர் விட்டு
ஊர் வந்தவை ;
நாடு விட்டு
நாடு வந்தவை ;
கண்டம் விட்டு
கண்டம் வந்தவை ;
ஆகிய மதங்கள்
அனைத்தும்
பொய் மதங்கள் ;
அவைகள் மனிதர்களை
ஏமாற்றி அடிமைப்
படுத்த வந்தவை ;
அந்த மதங்கள்
மக்களை வாழ்விக்க
வந்த மதங்கள்
அல்ல என்று
உணர்ந்தவர் ;”

“ உண்மையான மதம்
இந்து மதத்தின்
ஒரு பிரிவான
சைவ மதமே
மற்றவை எல்லாம்
அதற்கு சமனில்லா
மதமே என்று
சிந்தை தெளிந்தவர்
சிவநேசர் ;”

“ உண்மையான
சிவனுடைய
பக்தராக வாழ்ந்து
சிவனுக்காக
தன்னுடைய
வாழ்க்கையையே
அர்ப்பணித்தவர்
சிவநேசர் ;”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  09-07-2019
//////////////////////////////////////////////////////////


July 08, 2019

பரம்பொருள்-பதிவு-37


                  பரம்பொருள்-பதிவு-37

" உயிருள்ள கல்லானது
தேர்ந்தெடுக்கப்பட்டு ;
ஆகம சாஸ்திர
விதிமுறைகளின் படி
கடவுள் சிலையாக
செதுக்கப்பட்டு ;
பிராண பிரதிஷ்டையின்
மூலம் கடவுள் சிலைக்கு
உயிரூட்டப்பட்டு ;
கும்பாபிஷேகத்தின் மூலம்
கடவுள் சிலையில்
உள்ள கடவுள் சக்தியானது
இயங்கும் சக்தியை பெறும்
வகையில் செயல்கள்
செய்து வைக்கப்பட்டு ;
அன்றாடம் செய்யப்படும்
பூஜைகள் ; அபிஷேகங்கள் ;
ஆகியவற்றின் மூலம்
கடவுள் சிலையானது
கடவுளாகவே மாற்றப்பட்டு ;
பக்தர்களுக்கு அருள்
வழங்கும் மிகப்பெரிய
செயலை - உலகில் உள்ள
அனைத்து இந்துமதக்
கோயில்களில் உள்ள
அனைத்து கடவுள்
சிலைகளும் செய்து
கொண்டிருக்கின்றன ; "

" ஒரு கல்லானது
பல்வேறு நிலைகளைக்
கடந்து கல்லானது
கடவுளாகவே மாறி
பக்தர்களுக்கு அருள்
வழங்கும் மிகப்பெரிய
வேலையைச் செய்து
கொண்டிருக்கிறது  ;
என்ற உண்மையை
உணரக்கூடிய
அறிவு உள்ளவர்கள் ;
கல்லில் செதுக்கப்பட்ட
கடவுள் சிலையை
பார்க்கும் போது
அவர்களுக்கு
கடவுள் சிலையில்
கடவுள் மட்டுமே
தெரிகிறது ;
கல்லானது தெரிவதே
இல்லை ;

" ஆனால், ஒரு கல்லானது
பல்வேறு நிலைகளைக்
கடந்து கல்லானது
கடவுளாகவே மாறி
பக்தர்களுக்கு அருள்
வழங்கும் மிகப்பெரிய
வேலையைச் செய்து
கொண்டிருக்கிறது என்ற
உண்மையை உணரும்
அறிவு இல்லாதவர்கள் ;
கல்லில் செதுக்கப்பட்ட
கடவுள் சிலையை
பார்க்கும் போது
அவர்களுக்கு
கடவுள் சிலையில்
கல் மட்டுமே தெரிகிறது ;
கடவுள் தெரிவதே இல்லை ; "

"கும்பாபிஷேகத்தின் மூலம்
ஒரு கல்லானது
கடவுளாகவே மாறி
பக்தர்களுக்கு அருள்
வழங்கும் மிகப்பெரிய
செயலைச் செய்கிறது
என்றால்
கும்பாபிஷேகத்தின்
மகிமையைத் ;
தெரிந்து கொள்ளுங்கள் "

(12) மகாபிஷேகம் :
"கும்பாபிஷேகத்தை
நிறைவு செய்வதற்கு முன்
அதாவது கும்பாபிஷேகத்தை
முடிப்பதற்கு முன்
சூட்சும நிலையில் உள்ள
உயிர்களை நினைத்து
அவர்களுக்கு நன்றி
சொல்வதற்காக
செய்யப்படும் செயலுக்கு
மகாபிஷேகம்
என்று பெயர் "

" கலச நீரால்
அபிஷேகம் செய்தபின்
கடவுள் சிலைக்கு
பூர்ணாபிஷேகம் செய்து,
பூர்ண வைவேத்தியம்
படைத்து,
சோடசோபசாரம்
செய்ய வேண்டும் ;
இதனால் இதுவரை
யாகத்தில் பங்கு
கொண்டிருந்த
தேவர்களும் உயிர்களும்
திருப்தி அடைகின்றனர் ;
இது மகா அவிர்
நிவேதனமாகும் ;"

(13) மண்டலாபிஷேகம் :
" இதற்கு த்ரைபசஷிகம்
என்று பெயர்
மண்டலாபிஷேகம்
மூன்று பட்சங்கள்
செய்யப்படுகிறது "

" ஒரு பட்சம் என்பது
பதினைந்து நாட்களைக்
கொண்டது ஆகும் ;
மூன்று பட்சங்கள் என்பது
45 நாட்களைக்
கொண்டது ஆகும் ;"

" இந்த 45 நாட்களும் 
முறைப்படி
விசேஷமாய் ஆராதனை
நடத்தி முடிவில்
பூர்ணாபிஷேகம் செய்து
பின் காப்புக் களைதல்
மண்டலாபிஷேகமாகும் "

" இவ்வாறு 13 முக்கிய
செயல்களைப் பின்பற்றி
செய்யப்படும்
கும்பாபிஷேகத்தின்
மூலம் கல்லானது
கடவுளாகவே மாறுகிறது
என்பதை அனைவரும்
தெரிந்து கொண்டால்
கும்பாபிஷேகத்தின்
சிறப்பைத் தெரிந்து
கொள்ளலாம்

"கும்பாபிஷேகத்தின்
மகிமையைத் தெரிந்து
கொள்ள வேண்டும் என்றால்
சிறப்பு வாய்ந்த - ஒரு
பெண்ணின் வாழ்க்கை
வரலாற்றைத் தெரிந்து
கொள்ள வேண்டியது
அவசியம் ஆகும்
அந்தப் பெண்ணின்
வாழ்க்கை வரலாற்றைத்
தெரிந்து கொண்டாலே
கும்பாபிஷேகத்தின்
மகிமை தெரியும் "

"அந்தப் பெண் தான்…………………?
அந்தப் பெண்ணின்
பெயர் தான்………………………………………….?
அந்தப் பாவையின்
பெயர் தான்…………………………………………?

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  08-07-2019
//////////////////////////////////////////////////////////



July 07, 2019

தலைமையாசிரியர் வாழ்த்து மடல்-07-07-2019


அன்பிற்கினியவர்களே,

“ திருநெல்வேலி
மாவட்டத்தில்
வீரத்திற் கொரு
விளை நிலமாய் ;
பல்வகைக் கலைகளும்
பூத்துக் குலுங்கும்
சிறப் பிடமாய் ;
அறிவுத் திறனில்
உயர்ந்து விளங்கும்
புகழி டமாய் ;
அன்பு ஈவதில்
சிறந்து விளங்கும்
உயர் விடமாய் ;
விளங்கும்
கிராமத்தில் பிறந்து
இளவயது முதல்
தமிழில் படித்து ;
தமிழாய் வளர்ந்து ;
கல்லூரி படிப்பை
ஆங்கில
இலக்கியத்தில் படித்து ;
ஆங்கில ஆசிரியராக
பணியில் சேர்ந்த
என்னுடைய
இரண்டாவது அண்ணன்
திரு.K.தர்மேந்திரராஜ்
அவர்கள்
தலைமையாசிரியராக
பதவி உயர்வு பெற்று
சீரிய முறையில்
பணியாற்றிக்
கொண்டிருக்கிறார் !”

“ அவர் கல்வித் துறையில்
இந்த அளவிற்கு
உயர்ந்ததற்கு காரணம்
அவர் சுவாசமாக
சுவாசித்தது
செய்யும் தொழிலே
தெய்வம் “ - என்ற
பழமொழியைத் தான் “

“ செய்யும் தொழிலே
தெய்வம் என்று
தாங்கள் செய்யும்
தொழிலை
நினைப்பவர்கள்
வாழ்க்கையின் உயர்ந்த
நிலைகளைத் தொட்டு
மக்களின் மனதில்
இடம் பெறுவார்கள்
என்பதற்கு
என்னுடைய
இரண்டாவது அண்ணன்
தலைமையாசிரியர்
திரு.K.தர்மேந்திரராஜ்
அவர்களே சாட்சி !”

என்னுடைய
இரண்டாவது அண்ணன்
தலைமையாசிரியர்
திரு.K.தர்மேந்திரராஜ்
அவர்கள்
தலைமையாசிரியராக
பதவியேற்ற போது
காலம் குறுகியதாக
இருந்த காரணத்தினால்
அவருடைய
பதவியேற்பு
விழாவிற்கு
என்னாலும்
என்னுடைய
நண்பர்களாலும்
செல்ல முடியவில்லை ! “

“ தற்போது
பணி நிமித்தம்
காரணமாக
சென்னை
வந்திருந்த போது
தலைமையாசிரியர்
திரு.K.தர்மேந்திரராஜ்
அவர்களை
நானும் என்னுடைய
நண்பர்களும்
வாழ்த்தும் பேறு
பெற்றோம் ! “

“ உழைப்புக்கு
உதாரணமாக திகழ்ந்து
கொண்டிருக்கும் ;
மாணவர்களின்
எதிர்கால
வாழ்வாதாரத்திற்கு
வழிகாட்டியாக
விளங்கிக்
கொண்டிருக்கும் ;
என்னுடைய
இரண்டாவது அண்ணன்
தலைமையாசிரியர்
திரு.K.தர்மேந்திரராஜ்
அவர்களை
வாழ்த்தும் போது !
பெருமையும்
மகிழ்ச்சியும் அடைவது, !
நானும் என்னுடைய
நண்பர்களும் மட்டுமல்ல ?
எங்களுடைய தந்தை
தெய்வத்திரு
T.காசிநாதன்
மற்றும்
எங்களுடைய தாயார்
K.சொர்ணம்
அவர்களும்
சேர்ந்து தான்
என்று சொல்லிக்
கொள்வதில் நான்
மிக்க மகிழ்ச்சி
அடைகிறேன்

----------என்றும் அன்புடன்

----------- K.பாலகங்காதரன்

--------- 07-07-2019
//////////////////////////////////////////////////////////