பரம்பொருள்-பதிவு-39
"
கடவுளை கடவுள் என்ற
இடத்தில்
வைத்துப்
பார்க்கக்கூடிய
நிலையில் இல்லாதவர்கள் ;
கடவுளின்
தெய்வீகத்
தன்மையை
உணர்ந்து
பார்க்கக்கூடிய
நிலையில் இல்லாதவர்கள்
;
கடவுளுடைய
புனிதத்
தன்மையை
அறிந்து
பார்க்கக்கூடிய
நிலையில் இல்லாதவர்கள்
;
கடவுளுடைய
உண்மை
ஆற்றலைத்
தெரிந்து
பார்க்கக்கூடிய
நிலையில் இல்லாதவர்கள்
;
இவர்கள்
அனைவரும்
கடவுள்
என்றால் என்ன
என்பதை
உணராத
நிலையில்
இருப்பவர்கள் "
"
இவர்கள் தான் தாங்கள்
வணங்கும்
புதிய கடவுளை
உண்மையான
கடவுள்
என்று
நினைத்துக் கொண்டு
தங்களுடைய
புதிய கடவுளை
புதிய
மதத்தின் மூலம்
வியாபாரம்
செய்பவர்கள் "
"
புதிய கடவுளை
புதிய
மதத்தின் மூலம்
வியாபாரம்
செய்து பிழைக்க
வந்தவர்களான
இவர்கள்
கடவுளை
வணங்குகிறோம்
என்று
கூறிக்கொண்டு
ஆடிக்
கொண்டும் ;
பாடிக்
கொண்டும் ;
பேசிக்
கொண்டும் ;
கூத்தடித்துக்
கொண்டும் ;
கும்மாளமிட்டுக்
கொண்டும் ;
செய்யும்
செயல்களை
தங்களுடைய
செயல்களோடு
நிறுத்திக்
கொள்ளாமல் ;
இந்த
நாட்டில் பிறந்த
மதமான
இந்து மதத்தையும் !
இந்து
மதத்தின்
வழிபாட்டுத்
தலங்களையும் !
இந்து
மதத்தின்
கடவுள்
சிலைகளையும் !
இந்து
மதத்தின்
புனித
நூல்களையும் !
இந்து
மதத்தின்
புனித
குறியீடுகளையும் !
இழிவு
செய்து இந்து
மதத்தை
அழிக்கும் தவறான
செயல்களைச்
செய்து
தங்களுடைய
புதிய
மதத்தை
குறுக்கு வழியில்
நிறுவுவதற்கான
தப்பான
செயலைச்
செய்து
கொண்டு
இருக்கிறார்கள் "
"
இவ்வாறு தப்பான
செயல்களைச்
செய்து
கொண்டிருக்கும்
இவர்களுடைய
செயல்களைத்
தடுத்து
தப்பானவர்களை
அழிப்பதற்கு-
சிவநாமம்
ஒன்றே
போதும் என்பதையும் ;
அந்த
சிவநாமமே தீமையை
அழித்து
நன்மையைக்
கொடுக்கும்
என்பதையும் ;
அந்த
சிவநாமமே இவ்வுலகில்
உள்ள
தேவையற்றவைகள்
அனைத்தையும்
அழிக்கும்
வல்லமை
படைத்தது
என்பதையும்
;
உணர்ந்திருந்த
சிவநேசர்
சிவநாமத்தை
நாள் தவறாமல்
நேரம்
தவறாமல் உச்சரித்துக்
கொண்டே
இருந்தார் "
"
இந்து மதம்; சைவநெறி ;
சிவநாமம்;
ஆகியவற்றின்
மேல்
அன்பும் ; மதிப்பும் ;
மரியாதையும்
வைத்திருந்த
சிவநேசர்
சிவனடியார்கள்
மீதும்
அதே அன்பும்;
மதிப்பும்
; மரியாதையும்;
வைத்திருந்தார்
"
"
ஞானக்குழந்தையான
திருஞான
சம்பந்தருக்கு
தெய்வத்
தாயாகிய
உமாதேவியார்
ஞானப்பாலை
அருளியதையும்
- அதை
திருஞானசம்பந்தர்
உண்டதையும்
கேள்வியுற்ற
சிவநேசருக்கு
திருஞானசம்பந்தர்
மேல்
வார்த்தைகளால்
வார்க்க
முடியாத
பக்தி உண்டாகியது ;"
"புத்த
மதம் ; சமண மதம் ;
ஆகிய
மதங்களை
இந்தியாவிலிருந்து
களைந்து
வெளியேற்றுவதற்காக
திருஞானசம்பந்தர்
எடுத்த
முயற்சிகள்
- அதற்காக
திருஞானசம்பந்தர்
நிகழ்த்திய
அற்புதங்கள்
ஆகியவற்றை
கேள்வியுற்ற
சிவநேசருக்கு
திருஞானசம்பந்தர்
மேல்
அளவுகளால்
அளவிட
முடியாத
அன்பு
உண்டாகியது ;"
"
இந்து மதம்; சைவநெறி ;
சிவநாமம்
; ஆகியவற்றை
மக்கள்
மத்தியில் கொண்டு
செல்வதற்காகவும்
- மக்கள்
அதனை
ஏற்றுக் கொண்டு
பின்பற்றி
உயர்வடைய
வேண்டும்
என்பதற்காகவும்
திருஞான
சம்பந்தர்
செய்த
சேவையைக்
கேள்வியுற்ற
சிவநேசருக்கு
திருஞான
சம்பந்தர் மேல்
மதிப்புகளால்
மதிப்பிட
முடியாத
மரியாதை
உண்டாகியது ;"
"
இதனால் சிவநேசர்
இந்து
மதம் ; சைவநெறி ;
சிவநாமம்;
மட்டுமல்லாமல்
திருஞானசம்பந்தருடைய
பக்தியையும்
- அவருடைய
பெருமையையும்
இரவும்,
பகலும்
நினைத்துக்
கொண்டிருப்பது ;
திருஞான
சம்பந்தரை
தியானிப்பது;
வணங்குவது ;
அவர்
புகழ் பாடுவது ;
என்று
தன்னுடைய
வாழ்க்கையை
ஓட்டினார் "
"
சிவநேசர் கடவுள் மேல்
கொண்ட
உண்மையான
பக்தியினாலும்
- அவர்
செய்த
தவப் பயனாலும்
அவருக்கு
ஒரு
பெண்குழந்தை
பிறந்தது ;
பெண்
குழந்தை பிறந்த
சந்தோஷத்தை
கொண்டாடும்
விதமாக
ஏழைகளுக்கு
ஏராளமான
உடைகளையும்,
பெரும்
நிதிகளையும்
வாரி
வாரி வழங்கினார் ;"
"
மேலும், முறைப்படி செய்ய
வேண்டிய
பத்துநாள்
மறைவிதிச்
சடங்குகள்
அனைத்தையும்
செய்து
முடித்து
அந்த பெண்
குழந்தைக்கு
பெயர் சூட்டினார் "
"
அந்தப் பெண்ணின்
பெயர்
தான்………………………………………….?
அந்தப்
பாவையின்
பெயர்
தான்…………………………………………? "
-------- இன்னும் வரும்
----------
K.பாலகங்காதரன்
---------
11-07-2019
//////////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment