பரம்பொருள்-பதிவு-40
"
காண்போரை கவர்ந்திழுத்து
மீண்டும்
மீண்டும்
பார்க்கத்
தூண்டும்
அழகுப்
பதுமையாகவும் !"
"
கண்டோரும் அள்ளி எடுத்து
அணைத்து
முத்தமிட்டு
மகிழத்
தூண்டும்
வசீகரப்
புன்னகையுடனும் !"
"தங்கக்
குழம்பை
வார்த்தெடுத்து
பிரம்மாவால்
செதுக்கப்பட்ட
தங்கச்
சிலையாகவும் !"
"
புல்லாங்குழல் வழியாக
செல்லும்
காற்றினால்
எழும்
மெல்லிசையைப்
போன்ற
குரலுடனும் !"
"சூரிய
ஒளி பட்டு
மின்னும்
வைரத்தைப்
போன்ற
பொலிவுடனும் !"
விளங்கிய
அக்குழந்தைக்கு
சிவநேசர்
" பூம்பாவை
"
என்று
பெயரிட்டார்.
"ஆமாம்
!
அந்த
பெண்ணின் பெயர்
தான்
பூம்பாவை !
அந்த
பாவையின் பெயர்
தான்
பூம்பாவை ! "
"பாவை என்றால்
பெண்
என்று பொருள் ;
பூம்பாவை
என்றால்
பூவில்
உள்ள அனைத்து
தன்மைகளையும்
தன்னுள்
கொண்ட
பெண் என்று பொருள் "
"
பூம்பாவை
அழகு
ததும்பும்
மங்கையாக
;
நற்குணங்களைக்
கொண்ட
நங்கையாக
;
செல்வத்தில்
மிதக்கும்
தாரகையாக
;
வளரத்
தொடங்கினாள் "
"
பூம்பாவைக்கு ஏழு வயது
நிரம்பியபோது
- அவள்
பெண்ணுக்குரிய
அனைத்து
குணநலன்களையும்
கொண்டு
ஏழு
வயதில் பெண்கள்
விளையாடும்
அனைத்து
விளையாட்டுக்களையும்
விளையாடினாள்
; "
பூம்பாவை
"
அ ன்பில் இவளை
மிஞ்ச
யாரும்
இல்லை என்று
சொல்லத்தக்க
விதத்தில்
சிறந்து
விளங்கினாள் ! "
" ஆ ளுமை செய்பவர்களும்
அடங்கி
ஒடுங்கி பணிந்து
சேவகம்
செய்யும் வகையில்
ஆளுமையில்
உயர்ந்து
விளங்கினாள்
! "
"
இ
ல்லாதவருக்கு
மனமுவந்து
வழங்குவதில்
கருணையின்
வடிவமாக
விளங்கினாள்
! "
"
ஈ
வதில்
வரலாறு படைத்து
கடையேழு
வள்ளல்களுக்கெல்லாம்
முதன்மையானவளாக
விளங்கினாள்
! "
“
உ லகம் முழுவதும்
தேடினாலும்
காணக்கிடைக்காத
அமைதியின்
திருவுருவமாக
விளங்கினாள்
!”
“
ஊ
ரே
வியக்கும் வகையில்
அருங்குணங்கள்
பலவற்றைக்
கொண்டவளாக
விளங்கினாள் !”
"
எ ழுத்துக்களால்
எழுதி
விளக்க
முடியாத பண்பைப்
பெற்று
பணிவுடன் விளங்கினாள் ! "
" ஏ ழைகளின் துயர்
துடைக்க
ஓடுவதில்
முன்னிலையில்
நிற்பதில்
தலைசிறந்து
விளங்கினாள் ! "
"
ஐ ந்து நிலங்களிலும்
தேடினாலும்
கண்டுபிடிக்க
முடியாத
அறிவில்
சிறந்தவளாக
விளங்கினாள் ! "
"
ஒ ருவரோடும் ஒப்பிட்டுக்
காட்ட
முடியாத உயர்ந்த
ஒழுக்கங்களைக்
கொண்டவளாக
விளங்கினாள் ! "
"
ஓ ம்கார நாதத்தின்
திருஉருவமாகப்
பிறந்து அதன்
விளக்கமாக
விளங்கினாள் ! "
"
ஔ ஷதமாக இருந்து
அனைவருடைய
மனநோயை
விலக்கிய
தெய்வத்தாயாக
விளங்கினாள்
! "
"
பூம்பாவையின்
அருங்குணங்களையும்
அவளுடைய
- அருமை
பெருமைகளையும்
உணர்ந்த
சிவநேசர்
பூம்பாவையை
மணந்து
கொள்பவன்
என்னுடைய
அளவிட
முடியாத
அனைத்து
செல்வத்திற்கும்
உரியவனாவான்
என்று
கூறினார் "
"
இந்தக் காலகட்டத்தில்
திருஞான
சம்பந்தர்
பாண்டியனுடைய
வெப்பு
நோயை
நீக்கியதையும் ;
அதனைத்
தொடர்ந்து
திருஞான
சம்பந்தர்
சமணர்களை
அனல் வாதில்
வென்றதையும்
;
அதனைத்
தொடர்ந்து
திருஞான
சம்பந்தர்
சமணர்களை
புனல் வாதில்
வென்றதையும்
;
அதனைத்
தொடர்ந்து
திருஞான
சம்பந்தரிடம்
தோற்றுப்போன
8000
சமணர்களை
பாண்டிய
மன்னன்
கட்டளைப்படி
கழுவில்
ஏற்றியதையும் ;
அதனைத்
தொடர்ந்து
மதுரையில்
உள்ள அனைத்து
மக்களும்
திருநீறு அணிந்து
புனிதர்கள்
ஆனார்கள்
என்பதையும்
;
அதனைத்
தொடர்ந்து
சமண
மதத்தின் இருள் நீங்கி
சைவ
மதத்தின் ஞான ஒளி
எங்கும்
பரவியது என்பதையும் ;
அங்கிருந்து
வந்த பலர்
சிவநேசரிடம்
எடுத்து
உரைத்தார்கள்
;"
"
திருஞானசம்பந்தரின்
தெய்வீகத்
தன்மையைக்
கேட்டுத்
தெரிந்து கொண்ட
சிவநேசர்
அளவற்ற மகிழ்ச்சி
கொண்டு
இச்செய்தியை
கொண்டு
வந்த அனைவருக்கும்
பொன்னும்
பொருளும்
வாரி
வழங்கினார் !
திருஞான
சம்பந்தர் இருக்கும்
திசை
நோக்கி தொழுது
மண்
மீது விழுந்து எழுந்து
என்னுடைய
சுற்றத்தார்
உறவினர்கள்
நண்பர்கள்
மட்டுமல்ல
இந்த ஊரில்
உள்ள
அனைவரும் நான்
சொல்வதைக்
கேட்டுக்
கொள்ளுங்கள்
! - தெய்வத்
திருமேனி
கொண்ட
திருஞான
சம்பந்தருக்கு
என்னையும்
;
என்னுடைய
பொருளையும் ;
என்னுடைய
மகளையும் ;
தந்தேன்
என்றார் "
"
பூம்பாவை
திருஞான
சம்பந்தரை
மண
முடிப்பதற்காகவே
வளர்க்கப்பட்டாள்
;
திருஞான
சம்பந்தருக்காகவே
வளர்ந்தாள்
;"
"
திருஞான சம்பந்தரின் மேல்
கொண்ட
அன்பினாலும்
அளவற்ற
பக்தியினாலும்
மரியாதையினாலும்
அவர்
நினைவாகவே
வாழ்ந்தார்
சிவநேசர்
"
-------- இன்னும் வரும்
----------
K.பாலகங்காதரன்
---------
13-07-2019
//////////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment