November 23, 2020

அறிய வேண்டியவை-168

 

ஜபம்-பதிவு-660

(அறிய வேண்டியவை-168)

 

சகுனி :

"நாம் எந்த ஒரு

செயலைச் செய்ய

ஆரம்பிக்கும் போதும்

நாம் செய்யும்

செயலுக்கு எதிரிகள்

யாராவது

இருக்கிறார்களா  

என்று முதலில்

பார்க்க வேண்டும்

எதிரிகளே

இல்லாமல்

எந்த ஒரு

செயலையும்

நம்மால்

செய்ய முடியாது"

 

"அப்படி எதிரி

இருக்கும் பட்சத்தில்

எதிரி

எத்தகைய

வார்த்தைகளை

பேசுவான் ;

எத்தகைய

செயல்களைச்

செய்வான் ;

என்பதை

அறிந்த பிறகே

எதிரியை எதிர்த்து

செயலில்

இறங்க வேண்டும்."

 

"யோசிக்காமல்

களத்தில்

இறங்கினால்

இழப்புகளும்

கவலைகளும்

தான் நமக்கு

ஏற்படும்"

 

"அதனால் தான்

சொல்கிறேன்

நான் பகடையை

உருட்டத்

தொடங்குவதற்கு

முன்னர் என்

முன்னால் வந்து

நிற்பவர்

விதுரர் மட்டுமே"

 

துரியோதனன் :

"விதுரர் என்ன

சொல்வார்?"

 

சகுனி :

"விதுரர் என்

முன்னால்

வந்து நிற்பார் "

 

"காந்தார அரசே!

என்பார்"

 

"தங்கள் கைகளில்

வைத்திருக்கும்

பகடைகளை

என்னிடம் கொஞ்சம்

கொடுங்கள்

நான் பார்க்க

வேண்டும் என்பார்"

 

"நான் என்னுடைய

கைகளில்

வைத்திருக்கும்

உன்னுடைய

பகடைகளை

விதுரரிடம்

கொடுப்பேன்.

அந்த பகடைகளை

தன்னுடைய கைகளில்

வாங்கிக் கொண்டு

நன்றாக உற்றுப்

பார்த்து விட்டு

என்னிடம்

தொடர்ந்து பேசத்

தொடங்குவார்."

 

"நீங்கள்

விளையாடும்

பகடை

விளையாட்டில்

நீங்கள் வெற்றி

பெற வேண்டும்

என்பதற்காக

சூழ்ச்சியை

கையாள்கிறீர்கள்

என்று பல பேர்கள்

சொல்வதை நான்

கேள்விப்பட்டு

இருக்கிறேன்"

 

"நீங்கள் பகடை

விளையாட்டில்

வெற்றி பெற

வேண்டும்

என்பதற்காக

எத்தகைய

தந்திரத்தையும்

கையாள்வீர்கள்

என்று நான்

கேள்விப்பட்டு

இருக்கிறேன்"

 

"உங்களுடைய

பகடைகள்

உங்கள்

சொல்படி தான்

நடக்கும்

என்று நான்

கேள்விப்பட்டு

இருக்கிறேன்"

 

"நீங்கள் பகடையை

உருட்டினாலும்

உங்களை

எதிர்த்து

விளையாடும்

எதிரி பகடையை

உருட்டினாலும்

நீங்கள் என்ன

எண்களை

நினைக்கிறீர்களோ

அந்த எண் தான்

உங்கள்

பகடையில் விழும்

என்று நான்

கேள்விப் பட்டு

இருக்கிறேன்"

 

"சூழ்ச்சி நிறைந்த

உங்களுடைய

பகடைகளை

நீங்கள் பயன்

படுத்தக்கூடாது

என்று சொல்லிக்

கொண்டே

என்னுடைய

பகடைகளை

சுக்கு நூறாக

உடைத்து

விடுவார்."

 

"நான் என்னுடைய

கையில்

வைத்திருந்த

என்னுடைய

பகடைகள்

உடைக்கப்பட்ட

பின் நீ அவையில்

எழுந்து நின்று

என்னுடைய

மாமாவிற்கு நான்

அஸ்தினாபுரத்தின்

பகடைகளை

அளிக்கிறேன்

என்று சொல்ல

வேண்டும். "

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------23-11-2020

/////////////////////////////////

அறிய வேண்டியவை-167

 

ஜபம்-பதிவு-659

(அறிய வேண்டியவை-167)

 

சகுனி :

"ஏனென்றால்

அவர்

மதியூக மந்திரி

அறிவை

உபயோகிப்பவர். "

 

"அறிவை

உபயோகிப்பவர்களிடம்

நாம் எச்சரிக்கையாக

இருக்க வேண்டும்

என் அன்பு

மருமகனே!"

 

துரியோதனன் :

"அப்படி என்றால்

தாத்தா பீஷ்மர்

அவர்கள்"

 

சகுனி :

"பீஷ்மர்

விதுரர் அளவிற்கு

யோசிக்க மாட்டார் ;

விதுரர் அளவிற்கு

யோசித்து களத்தில்

இறங்க மாட்டார் ;

வீரத்திற்காக

செலவிடும் நேரத்தை

அவர் யோசிப்பதற்காக

செலவிட மாட்டார்;"

 

"தன்னுடைய

சந்தேகத்தை

தீர்ப்பதற்காக

அவரே விதுரர்

துணையைத்

தான் நாடுவார்."

 

"அதனால்

நான் பகடையை

உருட்டத்

தொடங்கும் போது

என் முன்னால் வந்து

தடுக்கக் கூடியவர்

விதுரர் மட்டும் தான்"

 

கர்ணன் :

"எப்படி இவ்வளவு

உறுதியாகச்

சொல்கிறீர்கள்"

 

"விதுரர் தான்

வந்து நிற்பார்

என்பதை

உங்களால் எப்படி

இப்போதே உறுதியாகச்

சொல்ல முடியும்"

சகுனி :

"கர்ணா !

களத்தில்

இறங்கி போர்

செய்வதற்கு முன்னர்

உனக்கு எதிராக

நின்று

போர் செய்யும்

எதிரி

எத்தகைய

திறமையை உடையவன்

என்பதை அறியாமல் ;

எதிரி

எத்தகைய

தன்மையை உடையவன்

என்பதை அறியாமல் ;

எதிரி

எத்தகைய

சிந்தனையை உடையவன்

என்பதை அறியாமல் ;

எதிரிக்கு

எத்தகைய

துணைகள் இருக்கிறது

என்பதை அறியாமல் ;

எதிரிக்கு

எத்தகைய

வலிமை இருக்கிறது

என்பதை அறியாமல் ;

எதிரிக்கு

எத்தகைய

பலம் இருக்கிறது

என்பதை அறியாமல் ;

எதிரி

எத்தகைய

போர்த்திறமை உடையவன்

என்பதை அறியாமல் ;

எதிரி

எத்தகைய

வீரத்தை உடையவன்

என்பதை அறியாமல் ;

போர் செய்வதற்கு

களத்தில்

இறங்குவாயா

கர்ணா ?"

 

கர்ணன் :

"அது எப்படி முடியும்

எதிரியின்

விவரங்களைப் பற்றி

எதுவும் தெரியாமல்

எப்படி

போரிட முடியும்

எதிரியின்

விவரங்களைப் பற்றி

எதுவும் தெரியாமல்

போர்க்களத்தில்

இறங்கி போரிட்டால்

எப்படி வெற்றி

பெற முடியும்."

 

"எதிரியைப்

பற்றிய விவரங்கள்

எதுவும் தெரியாமல்

போர்க்களத்தில்

இறங்கி

போரிடக்கூடாது. "

 

"எதிரியைப்

பற்றித் தெரிந்த

பின்னர் தான்

போர்க்களத்தில்

இறங்கி

போரிட வேண்டும் "

 

சகுனி :

"அதைப்

போலத் தான்

பகடை விளையாட்டை

விளையாடும் போது

பகடை

விளையாட்டைத்

தடுக்க

வருபவர் யார்

என்பதையும்,

அவர் என்ன

பேசுவார்

என்பதையும்,

அவர் என்ன

செயல் செய்ய

வருவார்

என்பதையும்

அறிந்து

அதற்கேற்றவாறு

நடவடிக்கைகளை

மேற்கொண்ட

பிறகு தான்

பகடை

விளையாட்டை

விளையாட வேண்டும்"

 

"இவ்வாறு யோசித்து

பகடை விளையாட்டை

விளையாடவில்லை

என்றால்

நம்மால் பகடை

விளையாட்டில்

வெற்றி பெற

முடியாது"

 

கர்ணன் :

"நீங்கள் சொல்வது

ஒன்றும்

புரியவில்லை"

 

துரியோதனன் :

"எனக்கும்

புரியவில்லை

மாமா அவர்களே!"

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------23-11-2020

/////////////////////////////////

அறிய வேண்டியவை-166

 

ஜபம்-பதிவு-658

(அறிய வேண்டியவை-166)

 

"இவை அனைத்தும்

பகடை

விளையாட்டானது

தொடங்குவதற்கு

முன்னர்

பீஷ்மர் செய்யும்

செயல்கள் ஆகும் "

 

"நான் கேட்பது

நான் என்னுடைய

கையால் பகடையை

எடுத்து உருட்டத்

தொடங்குவதற்கு

முன்னால்

அதைத் தடுக்க

முன் வருபவர்

யார் என்று

தெரியுமா என்று

தான் கேட்கிறேன்."

 

துரியோதனன் :

"பீஷ்மரைத் தவிர்த்து

குறிப்பிட்டுச்

சொல்ல வேண்டும்

என்றால்

துரோணர் தடுப்பார் ;

கிருபர் தடுப்பார் ;

விதுரர் தடுப்பார் ;

அவர்களோடு

பாண்டவர்கள்

மேல் பாசம்

வைத்திருப்பவர்கள்

அனைவரும்

வந்து தடுப்பார்கள் ".

 

சகுனி :

"நீ சொல்வது

முற்றிலும்

தவறு மருமகனே"

 

"நான் பகடையை

என்னுடைய

கைகளால் எடுத்து

உருட்டத்

தொடங்குவதற்கு

முன்னால்

அதைத் தடுக்கும்

எண்ணத்துடன்

எனக்கு முன்னால்

வந்து நிற்பவர்

விதுரர் மட்டுமே !"

 

"விதுரர் மட்டும்

தான் என் முன்னால்

வந்து நிற்பார்."

 

"வேறு யாரும்

என் முன்னால்

வந்து நிற்க

மாட்டார்கள்"

 

"வேறு யாரும்

தடுக்கும் முயற்சியை

செய்ய மாட்டார்கள்"

 

துரியோதனன்  :

"ஏன் விதுரரை

மட்டும்

சொல்கிறீர்கள்?"

 

"நீங்கள் பகடையை

உருட்டும் போது

பீஷ்மர்

தடுக்கமாட்டாரா?"

 

"துரோணர்

தடுக்க

மாட்டாரா?"

 

"கிருபர் தடுக்க

மாட்டாரா?"

 

சகுனி :

"துரோணரும்

கிருபரும்

நான் பகடை

உருட்டுவதை

தடுக்க

மாட்டார்கள்.

தடுப்பதற்கு

முன்வரவும்

மாட்டார்கள்.

ஏனென்றால்

துரோணருக்கும்

கிருபருக்கும்

நான் பகடை

உருட்டுவதை

தடுக்கும்

அதிகாரம்

கிடையாது,"

 

"ஆனால் என்னை

தடுக்கும் அதிகாரம்

பீஷ்மருக்கும்

விதுரருக்கும்

இருக்கிறது"

 

"பீஷ்மர் நான்

பகடையை

என்னுடைய

கையால் எடுத்து

பகடையை

என்னுடைய

கைகளால் உருட்டத்

தொடங்குவதற்கு

முன்னர் வந்து

தடுக்க மாட்டார் ;

அவர் பகடை

விளையாட்டு

ஆரம்பிக்கும் போது

தான் தடுப்பார் ;

நான் பகடையை

உருட்டும் போது

வந்து தடுக்க

மாட்டார் : "

 

"ஆனால் விதுரர்

மட்டுமே

நான் பகடை

உருட்டுவதற்கு

முன்னர் வந்து

தடுப்பார்

கேள்விகள்

கேட்பார்,

ஏனென்றால்

விதுரர் யோசிக்கும்

அளவிற்கு

பீஷ்மர் யோசிக்க

மாட்டார்"

 

"பகடையை

நான் கையில்

எடுத்து உருட்டுவதற்கு

ஆரம்பிக்கும் போது

அதை தடுப்பதற்காக

என் முன்னால்

வந்து நிற்பவர்

விதுரர்

மட்டும் தான்"

 

"விதுரர்

மட்டும் தான்

நான் பகடை

உருட்ட

ஆரம்பிப்பதற்கு

முன்னர்

வந்து நிற்பார்"

 

துரியோதனன் :

"ஏன் அவ்வாறு

சொல்கிறீர்கள் ?"

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------23-11-2020

/////////////////////////////////