ஜபம்-பதிவு-660
(அறிய
வேண்டியவை-168)
சகுனி
:
"நாம் எந்த ஒரு
செயலைச் செய்ய
ஆரம்பிக்கும் போதும்
நாம் செய்யும்
செயலுக்கு எதிரிகள்
யாராவது
இருக்கிறார்களா
என்று முதலில்
பார்க்க வேண்டும்
எதிரிகளே
இல்லாமல்
எந்த ஒரு
செயலையும்
நம்மால்
செய்ய முடியாது"
"அப்படி எதிரி
இருக்கும் பட்சத்தில்
எதிரி
எத்தகைய
வார்த்தைகளை
பேசுவான் ;
எத்தகைய
செயல்களைச்
செய்வான் ;
என்பதை
அறிந்த பிறகே
எதிரியை எதிர்த்து
செயலில்
இறங்க வேண்டும்."
"யோசிக்காமல்
களத்தில்
இறங்கினால்
இழப்புகளும்
கவலைகளும்
தான் நமக்கு
ஏற்படும்"
"அதனால் தான்
சொல்கிறேன்
நான் பகடையை
உருட்டத்
தொடங்குவதற்கு
முன்னர் என்
முன்னால் வந்து
நிற்பவர்
விதுரர் மட்டுமே"
துரியோதனன்
:
"விதுரர் என்ன
சொல்வார்?"
சகுனி
:
"விதுரர் என்
முன்னால்
வந்து நிற்பார் "
"காந்தார அரசே!
என்பார்"
"தங்கள் கைகளில்
வைத்திருக்கும்
பகடைகளை
என்னிடம் கொஞ்சம்
கொடுங்கள்
நான் பார்க்க
வேண்டும் என்பார்"
"நான் என்னுடைய
கைகளில்
வைத்திருக்கும்
உன்னுடைய
பகடைகளை
விதுரரிடம்
கொடுப்பேன்.
அந்த பகடைகளை
தன்னுடைய கைகளில்
வாங்கிக் கொண்டு
நன்றாக உற்றுப்
பார்த்து விட்டு
என்னிடம்
தொடர்ந்து பேசத்
தொடங்குவார்."
"நீங்கள்
விளையாடும்
பகடை
விளையாட்டில்
நீங்கள் வெற்றி
பெற வேண்டும்
என்பதற்காக
சூழ்ச்சியை
கையாள்கிறீர்கள்
என்று பல பேர்கள்
சொல்வதை நான்
கேள்விப்பட்டு
இருக்கிறேன்"
"நீங்கள் பகடை
விளையாட்டில்
வெற்றி பெற
வேண்டும்
என்பதற்காக
எத்தகைய
தந்திரத்தையும்
கையாள்வீர்கள்
என்று நான்
கேள்விப்பட்டு
இருக்கிறேன்"
"உங்களுடைய
பகடைகள்
உங்கள்
சொல்படி தான்
நடக்கும்
என்று நான்
கேள்விப்பட்டு
இருக்கிறேன்"
"நீங்கள் பகடையை
உருட்டினாலும்
உங்களை
எதிர்த்து
விளையாடும்
எதிரி பகடையை
உருட்டினாலும்
நீங்கள் என்ன
எண்களை
நினைக்கிறீர்களோ
அந்த எண் தான்
உங்கள்
பகடையில் விழும்
என்று நான்
கேள்விப் பட்டு
இருக்கிறேன்"
"சூழ்ச்சி நிறைந்த
உங்களுடைய
பகடைகளை
நீங்கள் பயன்
படுத்தக்கூடாது
என்று சொல்லிக்
கொண்டே
என்னுடைய
பகடைகளை
சுக்கு நூறாக
உடைத்து
விடுவார்."
"நான் என்னுடைய
கையில்
வைத்திருந்த
என்னுடைய
பகடைகள்
உடைக்கப்பட்ட
பின் நீ அவையில்
எழுந்து நின்று
என்னுடைய
மாமாவிற்கு நான்
அஸ்தினாபுரத்தின்
பகடைகளை
அளிக்கிறேன்
என்று சொல்ல
வேண்டும். "
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------23-11-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment