November 23, 2020

அறிய வேண்டியவை-169

 

ஜபம்-பதிவு-661

(அறிய வேண்டியவை-169)

 

"நான் உன்னிடம்

பத்திரமாக

பாதுகாப்பாக

வைத்துக் கொள்

என்று ஏற்கனவே

நான் உன்னிடம்

கொடுத்து

வைத்திருக்கும்

என்னுடைய

அன்பு

குழந்தைகளான

என்னுடைய

பகடைகளை

கொண்டு வந்து

என்னிடம்

கொடுக்க வேண்டும். "

 

"நான் அதை

என்னுடைய கையில்

வாங்க வேண்டும்;

பின்பு என்னுடைய

பகடைகளை

உருட்ட வேண்டும்;

நான் பகடை

ஆட்டத்தைத்

துவங்க வேண்டும்;"

 

கர்ணன் :

"நீங்கள் சொல்வது

எல்லாம் நடக்கக்

கூடிய சாத்தியக்

கூறுகள்

எதுவும் இல்லை"

 

"நடக்காத ஒன்றைப்

பற்றி நீங்கள்

ஏன் அதிகமாக

சிந்திக்கிறீர்கள்"

 

"இப்படி

தேவையில்லாததை

பற்றி எல்லாம்

சிந்திப்பதற்கு

நேரத்தை ஒதுக்காமல்

பயனுள்ள

விஷயத்தை

எப்படி

செய்யலாம்

என்பதைப் பற்றி

சிந்தியுங்கள்

கற்பனை

செய்வதை

விட்டு விட்டு

ஆக்கபூர்வமான

செயல் எதுவும்

இருந்தால் செய்ய

முயற்சி செய்யுங்கள்"

 

சகுனி :

"நான்

சொன்னவைகள்

அனைத்தும்

நடக்காது

என்கிறாயா

கர்ணா ?"

 

கர்ணன் :

"ஆமாம்!

நடக்காது

என்கிறேன்

நடப்பதற்கு

சாத்தியக் கூறுகள்

எதுவும் இல்லை

என்கிறேன்"

 

சகுனி :

"நான் சொன்னவைகள்

அனைத்தும்

நாளை பகடை

விளையாட்டின் போது

நடக்கப் போகிறது

நடக்கப்

போகிறவைகளை

நாளை பகடை

விளையாட்டின் போது

நேரிலேயே பார்த்து

நீ தெரிந்து

கொள்ளத் தான்

போகிறாய்

அப்போது தான்

இந்த சகுனி

யார் என்பது

உனக்குத் தெரியும்"

 

"எதிரி என்ன

பேசுவான்

எதிரி

எத்தகைய

செயல்களைச்

செய்வான்

என்பதை

அறிந்து நான்

செயல்படுத்திய

செயலின் மூலம்

இந்த சகுனி

யார் என்பதை

பகடை

விளையாட்டின்

போது நீயே

தெரிந்து கொள்வாய்"

 

துரியோதனன் :

"இப்போது நான்

என்ன செய்ய

வேண்டும்

மாமா அவர்களே!"

 

சகுனி :

"நீ ஒன்றும்

செய்ய வேண்டாம்

மருமகனே

உன் நண்பன் தான்

ஒரு செயலைச்

செய்ய

வேண்டியதிருக்கிறது"

 

துரியோதன் :

"கர்ணன்

என்ன செய்ய

வேண்டும்

சொல்லுங்கள்

செய்யச் சொல்கிறேன்"

 

சகுனி :

"உன் நண்பன்

கர்ணன்

நாளை பகடை

விளையாட்டு

நடக்கும் போது

எந்த செயலையும்

செய்ய வேண்டாம்

அமைதியாக

இருக்கச் சொல் "

 

"நான் செய்வதை

பார்த்துக் கொண்டு

சும்மா இருக்கச்

சொல் "

 

"நாம் செய்யும்

செயல்கள்

அனைத்திற்கும்

துணையாக

இருக்கச் சொல் ;

நாம் செய்யும்

செயல்களுக்கு

எதிர்ப்பு

தெரிவிக்காமல்

நமக்கு ஆதரவாக

இருக்கச் சொல் ;

நாம் செய்யும்

செயல்களுக்கு

ஆதரவாக

நடக்கச் சொல்

அது போதும்"

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------23-11-2020

/////////////////////////////////

No comments:

Post a Comment