ஜபம்-பதிவு-665
(அறிய
வேண்டியவை-173)
யோசிக்காமல்
களத்தில்
இறங்கினால்
இழப்புகளும்
கவலைகளும் தான்
நமக்கு ஏற்படும்
என்று சகுனி
சொன்னது
கர்ணனுடைய
நினைவிற்கு
வந்தது.
எதிரியை
வீழ்த்துவதற்கு
சகுனி மேற்கொண்ட
நடவடிக்கைகளை
நினைத்து
வியந்து நின்றான்
சகுனியின்
அபார
அறிவுத்
திறனைக்
கண்டு
ஆச்சரியத்தில்
நின்றான்
சகுனியைப்
பார்த்தபடியே
நின்று
கொண்டிருந்தான்
கர்ணன்
சரித்திரம்
கண்டிராத
ஒரு மாபெரும்
அறிவாளியான
சகுனி அந்த
அவையில்
தன்னந்தனியாக
அனைவரையும்
எதிர்த்து நின்று
கொண்டிருப்பதைக்
கண்டான் கர்ணன்
சகுனி
எந்தவிதமான
அச்சமும்
இல்லாமல்
அந்த அவையில்
உள்ள
அனைவரையும்
தைரியமாக
எதிர்த்து நின்று
கொண்டிருப்பதைக்
கண்டான் கர்ணன்
அனைவருக்கும்
எதிராக ஒரே
ஒரு ஆளாக
யோசித்து
செயல்பட்டுக்
கொண்டு
சகுனி நின்று
கொண்டிருப்பதைக்
கண்டான் கர்ணன்.
உலகத்திலேயே
சிறந்த
அறிவாளிகள் என்று
சொல்லப்படக்
கூடியவர்களும்,
வீரர்கள் என்று
சொல்லப்படக்
கூடியவர்களும்,
திறமைசாலிகள்
என்று
சொல்லப்படக்
கூடியவர்களும்,
நிறைந்திருந்த
அந்த அவையில்
உள்ளவர்கள்
யாராலும்
செய்ய முடியாத
செயல்களை
சகுனி நிகழ்த்திக்
காட்டிக் கொண்டு
நின்று
கொண்டிருப்பதைக்
கண்டான் கர்ணன்
இந்த உலகத்தால்
உணர்ந்து கொள்ள
முடியாத
இந்த உலகத்தால்
அறிந்து கொள்ள
முடியாத
இந்த உலகத்தால்
தெரிந்து கொள்ள
முடியாத
ஒரு மாபெரும்
அறிவாளியாக
சகுனி நின்று
கொண்டிருப்பதைக்
கண்டான் கர்ணன்
அவனுடைய
சிந்தனை
ஓட்டத்தை
தடை செய்யும்
வகையில்
என் மாமாவிற்கு
நான் இருக்கிறேன்
என்ற சத்தம்
கேட்டது
உணர்வு வந்தவனாய்
சத்தம் வந்த
திசையை நோக்கி
திரும்பினான்
துரியோதனன்
பேசத்
தொடங்கினான்)
துரியோதனன்
:
“என்னுடைய
மாமாவிற்கு
நான் இருக்கிறேன்”
“அஸ்தினாபுரத்தின்
பகடைகள்
இருக்கிறது”
“அதை நான் என்
மாமாவிற்கு
தருகிறேன்”
“அந்த பகடைகளை
தருவதற்கு
எந்த விதமான
தடையும்
கிடையாதே
சித்தப்பா
விதுரர்
அவர்களே!”
விதுரர்
:
“அதில் எனக்கு
எந்தவிதமாக
ஆட்சேபணையும்
இல்லை”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------23-11-2020
No comments:
Post a Comment