November 23, 2020

அறிய வேண்டியவை-165

 

ஜபம்-பதிவு-657

(அறிய வேண்டியவை-165)

 

சகுனி :

"அவை

ஆரம்பித்த பின்னர்

பகடை விளையாட்டை

தொடங்குவதற்கு

முன்னால்

பகடை விளையாட்டை

எப்படி நடத்துவது ;

எந்த விதத்தில்

நடத்துவது ;

எந்த முறையில்

நடத்துவது ;

எந்த விதிகளைப்

பின்பற்றி

நடத்துவது ;

பகடை விளையாட்டை

நடத்துவதற்கு

ஏற்கனவே இருக்கும்

விதிமுறைகள்

போதுமானவையா ?

அல்லது

புதியதாக

ஏதேனும் விதிமுறைகள்

உருவாக்கப்பட

வேண்டுமா ?

என்ற முறையில்

பல்வேறு கேள்விகள்

அவையில் எழுப்பப்பட்டு

அந்த கேள்விகளின்

மேல் பல்வேறு

கருத்துக்கள், பேச்சுக்கள்,

கேள்விகள், சந்தேகங்கள்

என்று அவையில்

உள்ளவர்களால்

பல்வேறு நிலைகளில்

விவாதங்கள்

நடத்தப்பட்டு

விவாதங்களின் முடிவில் 

பகடை விளையாட்டை

நடத்துவதற்குத்

தேவையான

விதிமுறைகளை

அனைவரும்

ஒன்று சேர்ந்து

உருவாக்கி விட்டு,

உருவாக்கப்பட்ட

விதிமுறைகளுக்குள் தான்

பகடை விளையாட்டை

விளையாட வேண்டும்,

உருவாக்கப்பட்ட

விதிமுறைகளை மீறி

பகடை விளையாட்டை

விளையாடக்கூடாது

அவ்வாறு

விளையாடினால்

பகடை விளையாட்டானது

பாதியில் நிறுத்தப்படும்

என்றும்

பகடை விளையாட்டானது

கண்ணியத்துடன் தான்

நடத்தப்பட வேண்டும்

என்றும்

கட்டுப்பாட்டுடன் தான்

நடத்தப்பட வேண்டும்

என்றும்

வரையறுக்கப்பட்ட

விதிமுறைகளுக்குள் தான்

நடத்தப்பட வேண்டும்

என்றும்

அறிவுரை

வழங்கிவிட்டு

அதனை

அவையில் உள்ள

அனைவராலும்

ஏற்றுக் கொள்ளப்பட்டு

பகடை விளையாட்டை

தொடங்கலாம்

என்று அனுமதி

அளித்து விட்டு

நான் பகடையை

எடுத்து

என்னுடைய கைகளில்

வைத்து உருட்டத்

தொடங்குவதற்கு

முன்னர்

என் முன்னால்

வந்து நின்று

காந்தார அரசே!

எனக்கு

ஏற்பட்டிருக்கும்

சந்தேகங்களுக்கு

தகுந்த விளக்கம்

அளித்து விட்டு

தாங்கள்

பகடையை

உருட்டலாம் என்று

என் எதிரே

வந்து நிற்பவர் யார்

என்று தெரியுமா

என் அன்பு மருமகனே!"

 

துரியோதனன் :

"வேறு யார்

வந்து நிற்பார்

பீஷ்மர் தான்

வந்து நிற்பார்."

 

"நாம் எந்த ஒரு

செயலைச் செய்தாலும்

அதை தடுப்பதற்காகவே

வந்து நிற்பவர்

பீஷ்மர் தானே !

அவர் தான்

வந்து நிற்பார்"

 

"நாம் எந்த ஒரு

செயலைச் செய்தாலும்

அந்த செயலானது

பாண்டவர்களுக்கு

எதிராகத் தான்

இருக்கும் என்ற

எண்ணம் கொண்டு

பாண்டவர்களுக்கு

கெட்டது எதுவும்

நேர்ந்து விடக்கூடாது

என்பதற்காகவே

வந்து நிற்பார்."

 

"நமக்கு எந்த ஒரு

நல்ல விஷயமும்

நடந்து விடக்கூடாது

என்பதில் கண்ணும்

கருத்துமாக இருக்கும்

பீஷ்மர் தான்

முதலில் வந்து

நிற்பார்"

 

சகுனி :

"தவறு

மருமகனே தவறு

பகடை விளையாட்டை

தொடங்குவதற்கு

முன்னால் தான்

பீஷ்மர்

வந்து நிற்பார்,

பகடை விளையாட்டைத்

தடுப்பதற்கான

முயற்சிகளைச் செய்வார் ;

பகடை விளையாட்டை

நடத்தக்கூடாது

என்பதற்குத்

தேவையான

நடவடிக்கைகளை

மேற்கொள்வார் ; "

ஆனால் பகடை

விளையாட்டானது

நடத்தப்படுவதை

நிறுத்த முடியாது

தடுக்க முடியாது

என்று தெரிந்த

பிறகு தத்துவங்கள்

பேசுவார் ;

அறிவுரைகள்

சொல்லுவார் ;

தர்மம் என்பார் ;

நீதி என்பார் ;

நியாயம் என்பார் ;

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------23-11-2020

/////////////////////////////////

No comments:

Post a Comment