November 23, 2020

அறிய வேண்டியவை-170

 

ஜபம்-பதிவு-662

(அறிய வேண்டியவை-170)

 

துரியோதனன் :

"நண்பா எனக்காக

நாளை மட்டும்

மாமா அவர்கள்

சொல்படி

கேட்டு நட நாளை

நடக்கும் பகடை

விளையாட்டின் போது

அமைதியாக இரு

அது போதும்"

 

கர்ணன் :

"நண்பா

என்னுடைய உயிர்

உனக்காகத் தான்

இருக்கிறது

உனக்காக

என்னால் என்ன

செய்ய முடியுமோ

அதை கண்டிப்பாகச்

செய்வேன்

நாளை

நடக்கப்போகும்

பகடை விளையாட்டில்

நான் உனக்கு

ஆதரவாக

இருப்பேன் என்று

உறுதியளிக்கிறேன் "

 

துரியோதனன் :

"எனக்கு அது

போதும் நண்பா"

 

"அடுத்து என்ன

செய்ய வேண்டும்

மாமா அவர்களே!"

 

சகுனி :

"விடியலுக்காக

காத்திரு என்

அன்பு மருமகனே!"

 

"நாளைய விடியல்

பல பேருடைய

வாழ்க்கையையே

மாற்றப் போகிறது"

 

"சரித்திரத்தின்

முக்கியமான

நிகழ்வுகள்

அனைத்தும்

நாளைய பகடை

விளையாட்டின் போது

நடக்கவிருக்கிறது"

 

"சரித்திரம்

இதுவரை கண்டிராத

நிகழ்ச்சிகள் அனைத்தும்

நாளைய பகடை

விளையாட்டின் போது

நடத்தப்படவிருக்கிறது"

 

"அஸ்தினாபுரத்தின்

வருங்காலம்

என்ன என்பது

நாளைய பகடை

விளையாட்டின் போது

தீர்மானிக்கப்

படவிருக்கிறது"

 

"கெளரவர்களுக்கும்

பாண்டவர்களுக்கும்

நாளை போர்

என்ற ஒன்று

நடைபெற்றால்

அந்த போரில்

பாண்டவர்கள்

பக்கம் நிற்கப்

போகிறவர்கள்

யார் என்பதையும்

கௌரவர்கள்

பக்கம் நிற்கப்

போகிறவர்கள்

யார் என்பதையும்

நாளைய பகடை

விளையாட்டின் போது

தீர்மானிக்கப்

படவிருக்கிறது"

 

"அதனால்

என் அன்பு

மருமகனே நாளைய

விடியலுக்காக

காத்திரு

நாளை

நடைபெறவிருக்கும்

பகடை

விளையாட்டிற்காக

காத்திரு!"

 

"நமக்கு நல்லவற்றை

செய்யப்போகும்

பகடை

விளையாட்டிற்காக

காத்திரு!"

 

(என்று சகுனி

தன்னுடைய

பேச்சை முடித்தபின்

துரியோதனனும்

கர்ணனும்

சகுனியிடம்

விடை பெற்று

அந்த இடத்தை விட்டு

அகன்று சென்று

விடுகின்றனர்.

 

சகுனி தன்னுடைய

அறையில் தனியாக

அமர்ந்து கொண்டு

இருந்தார்

 

சரித்திரத்தையே

மாற்றியமைக்கப்

போகும் பகடை

விளையாட்டை தனி

ஒரு மனிதனாக

பகடை விளையாட்டை

சகுனி நடத்தப்

போவதை

 

இந்த சரித்திரம்

கண்டிராத அறிவுலக

மாமேதையாக சகுனி

திகழப் போவதை

 

இப்படியும் யோசிக்க

முடியுமா என்று

ஆச்சரியப்படத்தக்க

வகையில் யோசித்த

சகுனியின் அறிவு

செயல்படப் போவதை

 

சகுனியைப் போன்று

இந்த உலகத்தில்

ஒருவர் யோசிக்க

முடியுமா

யோசித்து செயல்பட

முடியுமா என்று

கற்பனை செய்து கூட

பார்க்க முடியாத

ஒரு நிலை

நடக்கப் போவதை

அறியாமல்

 

இரவானது விடிந்து

கொண்டிருந்தது

நிலவானது கொஞ்சம்

கொஞ்சமாக மறைந்து

கொண்டிருந்தது

கதிரவன் உதிக்கத்

தொடங்கி விட்டான்

விடியல் விடிந்து

விட்டது

 

பகடை

விளையாட்டானது

தொடங்குவதற்கான

வேளை

நெருங்கி விட்டது)

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------23-11-2020

/////////////////////////////////

No comments:

Post a Comment