ஜபம்-பதிவு-666
(அறிய
வேண்டியவை-174)
துரியோதனன்
:
“துச்சாதனா………….”
(துச்சாதனன்
ஓடி வருகிறான்)
“நான் என்னுடைய
அறையில்
வைத்திருக்கும்
என்னுடைய
பகடைகளை
எடுத்து வா”
(என்று
கட்டளையிட்டான்
துரியோதனன்
துரியோதனனின்
கட்டளையை ஏற்று
துச்சாதனன் சகுனி
துரியோதனனிடம்
ஏற்கனவே கொடுத்து
வைத்திருந்த
சகுனியின்
குழந்தைகளான
பகடைகளை
எடுத்துக் கொண்டு
வந்து தன்னுடைய
அண்ணனான
துரியோதனனிடம்
கொடுத்தான்)
துரியோதனன்
:
“சித்தப்பா
விதுரர் அவர்களே
என்னுடைய
பகடைகளை
அஸ்தினாபுரத்தின்
பகடைகளை
நான் என்னுடைய
மாமாவிற்கு
கொடுப்பதில்
தங்களுக்கு
எந்தவிதமான
ஆட்சேபணையும்
இல்லையே”
விதுரர்
:
“நான் ஏற்கனவே
சொல்லி விட்டேன்
எனக்கு
எந்தவிதமான
ஆட்சேபணையும்
இல்லை”
(துரியோதனன்
தன்னுடைய கையில்
இருந்த பகடைகளை
தன்னுடைய மாமா
சகுனியிடம்
கொடுத்தான்
அதனைப் பெற்றுக்
கொண்ட சகுனி
தன்னுடைய கைகளில்
தன்னுடைய
பகடைகளை
வைத்துக் கொண்டு
அதனையே பார்த்தார்
சகுனியின்
குழந்தைகளான
சகுனியின்
பகடைகளே
சகுனியின்
கைகளுக்கு
வந்து சேர்ந்தது
அந்த பகடைகளை
கைகளில்
வைத்துக் கொண்டு
சிரிப்புடன்
விதுரரைப்
பார்த்தான் சகுனி.
சகுனி சிரித்த
சிரிப்பின் அர்த்தம்
விதுரருக்கு
மட்டுமில்லை
அந்த அவையில்
இருந்த யாருக்கும்
தெரியவில்லை.
ஆனால்
துரியோதனனும்,
கர்ணனும்
சகுனியின்
இந்த சிரிப்புக்கு
என்ன அர்த்தம்
என்பதைத்
தெரிந்து
கொண்டனர்
சரித்திரத்தை
மாற்றியமைக்கப்
போகும் பகடை
விளையாட்டானது
சகுனியின்
குழந்தைகளான
பகடையுடன்
தொடங்க
ஆயத்தமாகியது.
சகுனியின் கைகளில்
இருந்த பகடையானது
தரையில்
உருளத் தொடங்கியது
வருங்காலத்தில்
பல பேர்களுடைய
தலைகள் உருளப்
போவது தெரியாமல்
சகுனியின் பகடைகள்
மூலம் சரித்திரத்தை
மாற்றியமைக்கப்போகும்
நிகழ்வானது
நடக்கத்
தொடங்கியது )
அறிய
வேண்டியவை :
“இந்த கதையின்
மூலம் நாம்
அறிய வேண்டியது
என்னவென்றால்
நாம் எந்த
செயலைச்
செய்தாலும்
அந்த செயலைச்
செய்வதற்கு
முன்னர்
அந்த செயலைத்
தடுக்கக் கூடிய
எதிரி யார்
என்பதையும்
எதிரி எத்தகைய
வார்த்தைகளை
பேசுவான்
என்பதையும்
எதிரி எத்தகைய
செயல்களைச்
செய்வான்
என்பதையும்
அறிந்த பிறகே
எதிரியை எதிர்த்து
செயலில்
இறங்க வேண்டும்.
அப்படி செய்தால்
தான் நாம்
செய்யும் செயலில்
வெற்றி
பெற முடியும்
யோசிக்காமல்
களத்தில்
இறங்கினால்
இழப்புகளும்
கவலைகளும்
தான் நமக்கு
ஏற்படும்
என்பது தான்
இந்த கதையின்
மூலம் நாம்
அறிய வேண்டிய
உண்மை ஆகும்”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------23-11-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment