வாக்கிய பஞ்சாங்கம்-25-11-2020
அன்பிற்கினியவர்களே,
இந்த உலகத்தில்
முதலில் இருந்தது
ஒன்று தான் - அது
மெய்ஞ்ஞானம்
என்ற ஒன்று தான்
இந்த உலகத்தை
காப்பாற்றி வந்ததும்
மெய்ஞ்ஞானம்
என்று தான்
சொல்ல வேண்டும்
மெய்ஞ்ஞானம் தான்
இந்த உலகத்தை
இயக்கி வந்தது
எந்த காலங்களில்
எல்லாம்
மெய்ஞ்ஞானம்
இந்த உலகத்தை
இயக்கி வந்ததோ
அந்த காலங்களில்
எல்லாம்
இந்த உலகமும்
இந்த உலகத்தில்
உள்ள உயிர்களும்
நலமுடன் வாழ்ந்தது
மெய்ஞ்ஞானம்
நடைமுறையில்
இருந்த காலங்களில்
எல்லாம் பிரச்சினைகள்
என்ற ஒன்று
உருவாகவில்லை
பிரச்சினைகள்
உருவாகுவதற்கு
மெய்ஞ்ஞானம்
காரணம் இல்லை
என்ற காரணத்தினாலும்
பிரச்சினைகளை
மெய்ஞ்ஞானம்
உருவாக்காது என்ற
காரணத்தினாலும்
எந்த பிரச்சினையையும்
மெய்ஞ்ஞானம்
தீர்க்க வேண்டிய
அவசியம் இல்லாமல்
போய் விட்டது
எந்த ஒன்று
எந்த ஒன்றைத்
தோற்றுவித்ததோ
அந்த ஒன்று தான்
அந்த ஒன்றைத்
தீர்க்க முடியும்
எனவே
பிரபஞ்ச உற்பத்தி
முதல் இன்று வரை
மெய்ஞ்ஞானம்
அமைதியையும்
நிம்மதியையும் தான்
இந்த உலகத்தில்
உருவாக்கி இயக்கிக்
கொண்டிருந்த
காரணத்தினால்
அதனால் பிரச்சினைகளை
தீர்க்க வேண்டிய
அவசியம் இல்லாமல்
போய் விட்டது
ஆனால் விஞ்ஞானம்
அனைத்து
பிரச்சினைகளையும்
தீர்ப்பதற்கு
ஒரு காரணமாக
இருக்கிறது என்று
விஞ்ஞானிகளால்
சொல்லப்படுகிறது
என்றால்
பிரச்சினையை
உருவாக்கியது
விஞ்ஞானமாகத் தானே
இருக்க முடியும்
எந்த ஒன்று
எந்த ஒன்றை
உருவாக்கியதோ
அந்த ஒன்றே
அந்த ஒன்றை
நீக்க முடியும்
எனவே, தான்
பிரச்சினைகளையும்
உருவாக்கி விட்டு
அந்த பிரச்சினைக்கு
தேவையானவற்றையும்
உருவாக்கி
வைத்திருப்பது தான்
விஞ்ஞானம்
என்பதையும்
நாம் உணர்ந்து
கொள்ள வேண்டும்.
ஆனால்
ஒரு முக்கியமான
விஷயத்தைத்
தெரிந்து வைத்துக்
கொள்ள வேண்டும்
மெய்ஞ்ஞானத்தை
உணர்ந்தால்
மட்டுமே பிரபஞ்ச
ரகசியங்களை
உணர்ந்து கொள்ள
முடியும்
பிரபஞ்ச ரகசியங்களை
உணர்ந்து கொண்டால்
மட்டுமே
பிரபஞ்சத்தில்
ஏற்படும் அனைத்து
பிரச்சினைகளிலிருந்தும்
நம்மை பாதுகாத்து
கொள்ள முடியும்
24-ம் தேதி மழை
பெய்யும் என்று
இரண்டு நாட்களுக்கு
முன்பு தான்
விஞ்ஞானத்தால்
சொல்லப்பட்டது
ஆனால்
ஒரு வருடத்திற்கு
முன்னால்
மெய்ஞ்ஞானத்தால்
கணிக்கப்பட்ட
வாக்கிய
பஞ்சாங்கத்தில்
24-ம் தேதி
விடிய விடிய
மழை என்று
எழுதப்பட்டிருப்பதை
பாருங்கள்
சார்வரி
வருஷத்திய
ஆற்காடு.கா.வெ.
சீதாராமய்யர்
சர்வ முகூர்த்த
பஞ்சாங்கம்
2020-2021-ல்
பக்கம் 42 மற்றும்
43 பார்த்தால்
கார்த்திகை
மாதம் 9-ம் நாள்
செவ்வாய்க் கிழமை
தசமி திதி
பூரட்டாதி நட்சத்திரம்
24-11-2020-ம் தேதி
சென்னையில்
விடிய விடிய
மழை என்று
பதிவு
செய்யப்
பட்டிருப்பதைப்
பார்க்கலாம்
இதன் மூலம்
மெய்ஞ்ஞானத்தை
உணர்ந்தால்
பிரபஞ்ச
ரகசியங்களை
உணர்ந்து
நம்மை
இந்த பிரபஞ்சத்தில்
ஏற்படக்கூடிய
பிரச்சினையில்
இருந்து
காப்பாற்றிக்
கொள்ளலாம்
என்பதைத்
தெரிந்து
கொள்ளலாம்
மீண்டும்
ஒருமுறை
இதைத் தெரிந்து
கொள்ளுங்கள்
பிரபஞ்ச
ரகசியங்களைத்
தெரிந்து
கொள்ள வேண்டும்
என்றால்
மெய்ஞ்ஞான
அறிவைப்
பெற வேண்டும்
என்பதைத்
உணர்ந்து
கொள்ளுங்கள்
------என்றும் அன்புடன்
------K.பாலகங்காதரன்
------25-11-2020
/////////////////////////////////////
No comments:
Post a Comment