ஐயப்பன்-தரிசனம்-பதிவு-10- சுபம்
“”பதிவு பத்தை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””;
ஐயப்பன் - தரிசனம்:
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க 18 படிகளில் ஏற வேண்டும் 18 படிகளில் ஏறுவதற்கு முன் தேங்காயை உடைத்து முதலில் வலது கால் வைத்து மேலே ஏறிய பிறகே 18 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.
தலையில் இருமுடி இன்றி 18 படிகளில் ஏறவோ இறங்கவோ கூடாது.
படியின் மேல் ஏறிய உடன் கோயிலைச் சுற்றி வலம் வரவேண்டும். கோயிலைச் சுற்றி வலம் வந்து இருமுடியைத் தலையில் வைக்காமல் ஐயப்பனுக்கு நேராக நின்று காணிக்கை போட்டு தரிசனம் செய்ய வேண்டும்.
பிறகு கன்னி மேல் கணபதி, நாகர், உள்ளிருக்கும் மாளிகைப்புறம், கடுத்த சுவாமி வணங்கி பெரிய அம்பலம் இவைகளை வலம் செய்து பிறகு நடை வாயிலாகவோ வடக்கு நடை வாயிலாகவோ கீழே போக வேண்டும்.
பிறகு நெய்த் தேங்காயை உடைத்து ஒரு பாத்திரத்தில் வைத்து ஆலய அதிகாரிகளுடைய சம்மதத்துடன் உள்ளே அபிஷேகத்திற்குக் கொடுக்கலாம் .அத்துடன் மற்ற வழிபாடுகளையும் உள்ளே செய்ய ஏற்பாடு செய்யலாம்.
இங்கு "உலக்குழி தீர்த்தம்" என்ற ஒரு முக்கியமான இடம் இருக்கிறது இங்கு தான் குளிக்க வேண்டும் ஆனால் அது யாவருக்கும் சாத்தியம் என்று கூற முடியாது .அனைவரும் இங்கு குளிப்பது சாத்தியமில்லை .என்று சொல்லப்படுகிறது.
ஆனால் அத்தோட்டில் அதாவது கால்வாயில் குளித்தாலும் அந்தப் பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
சாஸ்தா மூலமந்திரம்:
ஐயப்பனை வணங்கும் பொழுது கீழ்க்கண்ட மூலமந்திரத்தை சொல்லி ஐயப்பனை வணங்கலாம்
ஓம் சாஸ்த்ரு மூர்த்தயே நம:
ஐயப்பன் - காயத்ரி மந்திரம்:
ஐயப்பனை வணங்கும் பொழுது கீழ்க்கண்ட காயத்ரி மந்திரத்தை உச்சாடணம் செய்தும் ஐயப்பனை வணங்கலாம்
ஓம் பூத நாதாய வித்மஹே
பாவ நன்தானாய தீமஹி
தன்னோ சாஸ்தா பிரசோதாயாத்:;
அறுபடை வீடுகள்:
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு அறுபடை வீடுகள் எப்படி உண்டோ அதைப் போலவே ஐயப்பனுக்கும் 6 கோவில்கள் உள்ளன அவற்றை ஐயப்பனின் அறுபடை வீடுகள் என்று சொல்லப்படுகிறது
ஐயப்பனின் அறுபடை வீடுகள் என்று சொல்லப்படுபவை:
1 ஆரியங்காவு
2 அச்சன்கோவில்
3 குளத்துப்புழா
4 எருமேலி
5 பந்தளம்
6 சபரிமலை
சபரிமலை யாத்திரைக்கு புனித பயணம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பன் எழுந்தருளி அருள் கொடுக்கும் இந்த 6 கோயில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது
தரிசனம்
ஐயப்பன் சபரிமலையில் யோக நிலையில் சின்முத்திரையில் இருக்கிறார் அவர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கேட்டவற்றை வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார்
41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை யாத்திரைக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களின் புனிதப் பயணம் ஐயப்பனிடம் சரணாகதி அடைந்து அருளைப் பெற்று மனம் மகிழ்வு அடைவதுடன் ஐயப்பனின் தரிசனம் முடிவடைகிறது
இயற்கை அன்னையின் அருள் இருந்தால்,
காலம்கண் திறந்து கடைக்கண் காட்டினால்.
சிந்தனையின் கதவுகள் தட்டப் பட்டால்,
மாற்றத்தின் மறுமலர்ச்சிகள் என்னிடத்தில் தோன்றினால்,
கரங்களின் கையணைப்பு என்னை வழிநடத்தினால்,
உவகைகள் பூத்துகுலங்கி உள்ளத்தை வருடினால்,
சூட்சுமம் உரைக்கும் தகுதி வந்தால்,
மேலும்உரைப்பேன் ஐயப்பனின் மகிமையைத் தானே....
---கவிதை-------பாலகங்காதரன்
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
போற்றினேன் ஐயப்பன் தான்முற்றதாமே “”
No comments:
Post a Comment