உரோமரிஷி-பஞ்சபட்சி சாஸ்திரம்-காரணங்கள்-பதிவு-6
“”பதிவு ஆறை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
பஞ்ச பட்சி சாஸ்திரம் - காரணங்கள் :
உலகில் உள்ள உயர்ந்த கலைகளில் , மிக உயர்ந்த கலைகளில் ஒன்றான கலையாக மதிக்கப் படுவதும் ,
கற்பனை கூட செய்து பார்க்க முடியாத மிக உயர்ந்த சக்திகளைத் தரவல்லதும் ,
அரிய பொக்கிஷங்களை சூட்சும ரகசியங்களாக மாற்றி தன்னுள் அடக்கி வைத்திருப்பதும் ,
ஆகிய பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ,
உலக மக்களில் பெரும்பாலானவர்களால் அறியப் படாமல் இருப்பதற்கு ,
இந்த உலகத்தில் உள்ள மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு ,
சில முக்கியமான காரணங்கள் உண்டு அவையாவன ,
1 பஞ்ச பட்சி சாஸ்திரம் காலம் காலமாக குரு – சீடர் பரம்பரையாக வந்து கொண்டிருக்கிறது .
2 பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சூட்சும ரகசியங்கள் அனைத்தும் யாருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதி வைக்கப் படாமல் மறைபொருளாக எழுதி வைக்கப் பட்டிருக்கிறது .
3 பஞ்ச பட்சி சாஸ்திரம் ஆன்மீகத்தில் உயர்ந்த நிலை அடைந்தவர்களால் மட்டுமே உணர்ந்து , பின்பற்றி உயர்வு அடையும் வகையில் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது .
4 பஞ்ச பட்சி சாஸ்திரம் நல்ல எண்ணம் உடையவர்கள் ,
உயர்ந்த சிந்தனை உடையவர்கள் ,
சுயநலமற்ற பொதுநலம் உடையவர்கள் ,
ஆகியவற்றைக் கொண்ட குணநலன்களைக் கொண்டவர்கள் மட்டுமே அறிந்து கொண்டு பயன்படுத்தும் வகையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது
மேலே சொல்லப் பட்டவைகள் தான் பஞ்ச பட்சி சாஸ்திரத்தை மக்கள் அறிந்து கொள்ள முடியாமல் போனதற்குக் காரணங்கள் ஆகும் .
மேலும் பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற முடியாமைக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன அவையாவன :
1 மௌனவித்தை எனப்படும் பேசாமந்திரத்தின் சூட்சுமம் தெரிந்து இருக்க வேண்டும் .
2 சரம் பார்த்தலின் ரகசியம் அறிந்து அதை நேரம் பார்த்து பயன்படுத்தத் தெரிந்து இருக்க வேண்டும் .
3 பஞ்ச பட்சிகளுக்குரிய மூலிகைகள் வேறுபடுத்தி அறிந்து பயன்படுத்தத் தெரிந்து இருக்க வேண்டும் .
4 பஞ்ச பட்சிகளுக்குரிய மந்திரங்கள் அறிந்து பயன்படுத்தத் தெரிந்து இருக்க வேண்டும் .
5 பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் மறைத்து வைக்கப்பட்ட மூல ரகசியங்கள் எவை என்பதைத் தெரிந்து இருக்க அதைப் பயன்படுத்தும் முறை அறிந்து இருக்க வேண்டும் .
மேலே சொல்லப் பட்டவைகள் தான் பஞ்சபட்சி சாஸ்திரத்தை பயின்று இருந்தும் முறையாக பயன்படுத்தி வெற்றி பெற முடியாமைக்குக் காரணங்கள் ஆகும் .
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை இந்த உலகத்தில் உள்ள மக்கள் அறிந்து பயன்படுத்தி வெற்றி பெற முடியாமல் போனதற்கு காரணங்களாக உரோமரிஷி கீழ்க்கண்ட பாடலைக் குறிப்பிடுகிறார் .
“”””””தோணுமே உலகிலுள்ள அசஷரத்துக்கெல்லாம்
தோணாத பஞ்சபட்சி சூட்சந்தானும்
காணுமே கருக்கருவும் காணாதுபாரு
கடினமடா ஆசானும் காட்டவேணும்
பேணுமேமன துருத்தியாக வேணும்
பிசகினால் பட்சிவித்தை பிசகிப்போகும்
ஆணுமே அசஷரங்கள் அறியவேணும்
அறிவதுதான் வெகுநினைவாய் செலுத்துவாயே””””
-------உரோமரிஷி------பஞ்சபட்சி சாஸ்திரம்---
”””தோணுமே உலகிலுள்ள அசஷரத்துக்கெல்லாம்
தோணாத பஞ்சபட்சி சூட்சந்தானும்””””
51 - அட்சரங்களை அடிப்படையாக வைத்தே அனைத்து மந்திரங்களும் எழுதப்பட்டிருக்கின்றன என்பதும் ,
அவைகளை அடிப்படையாக வைத்தே அனைத்து மந்திரங்களும் இயங்குகின்றன என்பதும் ,
அதில் உள்ள இரகசியங்கள் அனைத்தும் உலகில் உள்ள மக்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பதும் ,
மந்திரங்கள் என்றால் என்ன என்றும் , அதைப் பயன்படுத்தினால் என்ன கிடைக்கும் என்றும் , மந்திரத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களால் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும் .
ஆனால் எளிதில் புரிந்து கொள்ள முடியாததும் சூட்சும ரகசியங்கள் பலவற்றை தன்னுள் அடக்கி வைத்திருப்பதும் ஆகிய
பஞ்சபட்சி சாஸ்திரத்தை இயக்குவதற்கு தேவையான மையக்கருவாக உள்ள சூட்சும ரகசியங்கள் எவை என்பதும் ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் பஞ்ச பட்சிக்குரிய காலங்கள் எவை என்பதும் ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் பஞ்ச பட்சிக்குரிய மந்திரங்கள் எவை என்பதும் ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் பஞ்ச பட்சிக்குரிய மூலிகைகள் எவை என்பதும் ,
யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது .
””””””காணுமே கருக்கருவும் காணாதுபாரு
கடினமடா ஆசானும் காட்டவேணும்”””””””
பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் உள்ள மையக் கருவாக உள்ள சூட்சும ரகசியங்கள் அனைத்தையும் யாரும் எளிதில் உணர்ந்து கொள்ள முடியாது .
அத்தகைய மையக்கருவாக உள்ள சூட்சும ரகசியங்கள் அனைத்தையும் முழுமையாக உணர்ந்தவர்களால் மட்டுமே ,
பயன்படுத்தி வெற்றி கண்டவர்களால் மட்டுமே , தான் உணர்ந்தவற்றை அதனுடைய சூட்சும ரகசியங்களை அவிழ்த்து விளக்க முடியும் .
அவரால் தான் ஆசானாக இருந்து பஞ்சபட்சி சாஸ்திரத்தை சொல்லிக் கொடுக்க முடியும் .
”””””””பேணுமேமன துருத்தியாக வேணும்
பிசகினால் பட்சிவித்தை பிசகிப்போகும்
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை பயின்று பயன்படுத்தி வெற்றி காண வேண்டும் என்றால் ,
எதனையும் எதிர்த்து சமாளிக்கக் கூடிய மனோதிடத்துடன் கூடிய தைரியம் , தெளிவான மனம், நிதானம் , அமைதி இருக்க வேண்டும் .
இத்தகைய குணநலன்களைப் பெற்றவர்களால் மட்டுமே தான் பஞ்ச பட்சி சாஸ்திரத்தை தெளிவாகப் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி காண முடியும் .
மேலே சொல்லப்பட்ட குணநலன்கள் இல்லாதவர்கள் , மையக்கருவான சூட்சும ரகசியங்களை அறியாதவர்கள் பஞ்சி பட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தினால் ,
ஓவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவு தவறாகவே இருக்கும் .
ஓவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவு சரியாக இருக்காது .
“”””””ஆணுமே அசஷரங்கள் அறியவேணும்
அறிவதுதான் வெகுநினைவாய் செலுத்துவாயே””””””
பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் உள்ள சூட்சும ரகசியங்கள் எவை என்பதையும் ,
பஞ்சபட்சி சாஸ்திரத்தை செயல் படுத்தும் விதத்தில் உள்ள ரகசியங்கள் எவை என்பதையும் ,
பஞ்சபட்சி சாஸ்திரத்தை செயல்படுத்த பயன் படுத்த பயன்படும் பொருள் எவை என்பதையும் அறிந்து சரியாக பயன் படுத்தினால் ,
ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவு சரியாக இருக்கும்,
இல்லையென்றால் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவும் தவறாகவே இருக்கும் என்கிறார் உரோமரிஷி .
அடுத்து பஞ்ச பட்சி சாஸ்திரம் என்றால் என்ன என்பதைப் பற்றிய விளக்கங்களை அடுத்து பார்ப்போம் .
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
போற்றினேன் பதிவுஆறு ந்தான்முற்றே “”
No comments:
Post a Comment