உரோமரிஷி-பஞ்சபட்சி சாஸ்திரம்-விளக்கங்கள்-பதிவு-7-சுபம்
“”பதிவு ஏழை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
பஞ்ச பட்சி சாஸ்திரம் என்றால் என்ன என்பதைப் பற்றியும் , அவை எதை விளக்குகிறது என்பதைப் பற்றியும் விளக்கமாகப் பார்ப்போம் .
பஞ்ச பட்சி சாஸ்திரம் - விளக்கங்கள் :
பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள் .
பட்சி என்றால் பறவை என்று பொருள் .
சாஸ்திரம் என்றால் எழுதப் பட்டவைகளை செயல்படுத்திப் பார்த்தால் உண்மை விளங்கும் என்று பொருள் .
பஞ்ச பட்சி எவ்வாறு உருவம் பெற்றது :
பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படக் கூடியவை நிலம் , நீர், நெருப்பு , காற்று, விண் ஆகிய ஐந்தும் ஆகும் .
பஞ்சபூதங்களே இந்த உலகத் தோற்றத்திற்கு காரணமாக இருக்கின்றன .
பஞ்சபூதங்களே இந்த உலகை எல்லாம் ஆண்டு கொண்டு இருக்கின்றன .
பஞ்சபூதங்களே இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தையும் இயக்கிக் கொண்டு இருக்கின்றன .
என்பதை சித்தர்கள் தங்கள் தவ ஆற்றலினால் உணர்ந்தனர்.
அப்படிப் பட்ட பஞ்ச பூதங்களை , அதனுடைய இயக்கங்களை , தங்களுடைய தவ வலிமையாலும் , இறையருளாலும் சித்தர்கள் கணக்கிட்டு என்றைக்கும் எல்லோருக்கும் பயன் படக் கூடிய வகையில் ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை மிக நுணுக்கமாகவும் , தெளிவாகவும், எளிமையாகவும் தகுதி வாய்ந்தவர்கள் கற்று பயன்படுததி வெற்றி காணும் வகையில் தங்கள் நுhல்களில் சூட்சும ரகசியங்களாக சொல்லியிருக்கிறார்கள்.
சித்தர்கள் பஞ்ச பூதங்கள் எத்தகைய நாழிகை ஜாமங்களில் செயல்படுகின்றன என்பதை முதலில் அறிந்து கொண்டனர் . பிறகு இந்த ஐந்து பஞ்ச பூதங்களை ஐந்து பஞ்ச பட்சியாக மாற்றம் செய்தனர் .
பஞ்சபட்சிக்குரிய மாற்றத்தை தமிழின் உயிரெழுத்துகள் என்று சொல்லக் கூடிய ஐந்து பிரதான எழுத்துகளான உயிர் எழுத்துக்களான அ , இ, உ , எ, ஒ ஆகிய ஐந்து எழுத்துகளும் என்ன வடிவத்தில் உள்ளதோ அதற்கான பறவையை சித்தர்கள் வடிவமைத்தனர் .
அ ---- என்ற தோற்றம் போல் வல்லுhறு பறவை இருக்கும் ,
இ ---- என்ற தோற்றத்தில் இரு புள்ளிகள் அமைத்தால் ஆந்தை போன்ற வடிவமாகும் ,
உ ---- என்ற எழுத்து காக்கை போன்று தோற்றம் உடையது ,
எ ---- என்கிற எழுத்து ஒரு கோழியை உட்கார வைத்தால் அதன் வடிவம் ,
ஒ-----என்கிற எழுத்து மயிலின் அமைப்பாக இருக்கும் ,
இதனால் தான் பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படக் கூடிய நிலம் ,நீர், நெருப்பு, காற்று , விண் – ஆகியவை
ஊண் , அரசு , நடை , துயில் , சாவு ஆகிய தொழில்களை செய்கிறது என்றால், ஆகிய தொழில்களை மேற்கொள்ளுகிறது என்றால் ,
அதை உணர்ந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கும்,
உணர்ந்து கொள்வதில் சிக்கல்கள் இருக்கும் ,
புரிந்து கொள்வது கடினமாக இருக்கும்,
என்பதை உணர்ந்து பஞ்ச பூதத்தை பஞ்ச பட்சியாக மாற்றி தமிழ் எழுத்துக்களை ஆதாரமாக வைத்து மாற்றம் செய்து விட்டார்கள்.
பறவைகளின் தொழில் :
இந்தப் பறவைகள் பகலிலும் , இரவிலும் ஐந்து வகையான வேலைகளைச் செய்கின்றன .
அதாவது உணவு உண்ணுதல் , அரசாளுதல், நடை , துhங்குதல் (துயில்), சாதல்(சாவு) என்ற ஐந்தும் அப்பறவைகள் அன்றாடம் பகல் , இரவு இரு காலங்களிலும் 24 மணி நேரத்திலும் மேற்கொள்ளும் தொழில்களாகும்.
இப்போது ஒரு பறவை உணவு எடுக்கும் அது தான் ஊண் ,
பின் அரசு செய்யும் (ஆட்சி செலுத்தும்) அது தான் அரசு ,
பின் சற்று நடந்து செல்லும் அது தான் நடை ,
பின் துhங்கிவிடும் அது தான் நித்திரை,
பின் இறந்துவிடும் அது தான் மரணம்.
இந்த அடிப்படையில் சித்தர்கள் பஞ்ச பட்சியை வடிவமைத்து அதை பகல் ஐந்து சாமங்களை ஐந்து காலங்களாகவும் ,
இரவு ஐந்து சாமங்களை ஐந்து காலங்களாகவும் ஆக மொத்தம் ஒரு நாளை 10 சாமங்களாகப் பிரித்து வகைப்படுத்தினர்.
சாமம் :
சாமத்திற்கான விளக்கங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன:
1 நாள் - 10 சாமம் ( பகல் - 5 சாமம் இரவு - 5 சாமம்)
1 சாமம் - 6 நாழிகை
1 நாழிகை - 24 நிமிஷம்
6 நாழிகை - 144 நிமிஷம்
6 நாழிகை - 2 மணி 24 நிமிஷம்
1 சாமம் - 2 மணி 24 நிமிஷம்
1 சாமம் - 6 நாழிகை
1 சாமம் - 144 நிமிஷம்
1 சாமம் - 2 மணி 24 நிமிஷம்
1 மணி நேரம் - 60 நிமிஷம்
720 நிமிஷம் - 12 மணி நேரம்
5 சாமம் - 720 நிமிஷம்
5 சாமம் - 12 மணி நேரம்
5 - சாமம் கால அளவு :
06.00 + 2.24 --- - 8 மணி 24 நிமிஷம்
08.24 + 02.24 -- - 10 மணி 48 நிமிஷம்
10.48 + 02.24--- - 01 மணி 12 நிமிஷம்
01.12 + 02.24 -- - 03 மணி 36 நிமிஷம்
03.36 + 02.24----- 06.00 மணி
5 சாமம் - ( 6 மணி முதல் 6மணி வரை)
வளர்பிறை -தேய்பிறை :
ஓவ்வொருவருக்கும் வளர்பிறையில் ஒன்றும் , தேய்பிறையில் ஒன்றும் ஆக மொத்தம் இரண்டு பட்சிகள் உண்டு .
இந்த இரண்டு பட்சிகளும் செய்யும் ஐந்து வேலைகளில் எந்த வேலையில் நமது காரியத்தை செய்தால் வெற்றி பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .
அந்த நேரத்தில் செய்வோமேயானால் ராகு காலம் , எமகண்டம் , தனிய நாள், கரி நாள் போன்ற அசுப நேரங்கள் எந்த நேரமாக இருந்தாலும் , நமது பட்சிக்குரிய நேரம் சிறந்த நேரம் எது என்பதை உணர்ந்து செய்வோமேயானால் ,
எந்த விதமான அசுப பலனும் ஏற்படாது ,தோஷம் ஏற்படாது , செயலின் விளைவு சரியாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
பஞ்ச பட்சி மூலம் பயன் அடையும் பலன்கள் :
அனைத்து விதமான சுப காரியங்களையும் மேற்கொள்ளுதல்,
எந்தவிதமான தொழிலையும் தொடங்குவதற்கான வேலையை மேற்கொள்ளுதல் ,
உத்தியோகத்திற்காக முயற்சியை மேற்கொள்ளுதல் ,
வீடு கட்டுவது , கிரக பிரவேசம் செய்வது, ஆகிய செயல்களை மேற்கொள்ளுதல் ,
பணம் , படிப்பு , பதவி , பணிகள் , பயணம் , ஒப்பந்தம் ஆகியவையும் அதன் அம்சமான தொழில்கள் அனைத்தையும் மேற்கொள்ளுதல் ,
சொத்து , பொருள் வாங்குவது, விற்பது, விவகாரங்களில் வெற்றியை அடைவது போன்ற தொழிலை மேற்கொள்ளுதல் ,
படைப்புகளை உருவாக்குதல் , திறமைகளை அரங்கேற்றம் செய்தல் , போன்ற செயல்களை மேற்கொள்ளுதல் ,
சினிமா படம் எடுப்பது , அரசியலில் ஈடுபடுவது , ஆலய தேவதா பிரதிஷ்டை செய்வது , விக்ரஹங்களை உருவாக்குவது ,போன்றவற்றில் ஈடுபடுதல் போன்ற செயல்களை மேற்கொள்ளுதல் ,
விருத்திக்கான ஹோமங்கள் , பூஜை , ஜெபம் ,தொழுகை , சரீர பாதிப்புகள், தியானம் இவற்றை எல்லாம் மேற்கொள்ளுதல் ,
போன்ற எத்தகைய செயல்களை செய்வதாக இருந்தாலும் ,
எத்தகைய அனுகூலங்களை நாம் அடைவதற்கு முயற்சி செய்தாலும் ,
ஆண் , பெண் யாராக இருந்தாலும் ,
அரியதோர் அற்புத நேரத்தை நாம் அறிந்து அதன் படி அக்காரியங்களில் ஈடுபட்டால் அந்தக் காரியம் நமக்கு சாதகமாக முடியும் ,
அப்படிப் பட்ட அற்புதமான சாஸ்திரக் கலைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த அதிர்ஷ்ட நேரங்களை அறியக் கூடிய கலை தான் “பஞ்ச பட்சி சாஸ்திரம்” ஆகும் .
புத்தகங்கள் :
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை விளக்கும் புத்தகங்கள் பல உள்ளன .
தற்காலத்தில் பஞ்ச பட்சி சாஸ்திரத்தை அறிந்து கொள்வதற்கு சில முக்கிய புத்தகங்கள் வெளிவிடப்பட்டுள்ளன .
அவைகளில் முக்கியமானவையாகக் கருதப்படுபவை கீழே கொடுக்கப் பட்டுள்ளன :
1 . அகத்தியர் - பஞ்ச பட்சி சாஸ்திரம்
2. காகபுசுண்டர் - பஞ்ச பட்சி சாஸ்திரம்
3 . போக முனிவர் - பஞ்ச பட்சி சாஸ்திரம்
4 . உரோமரிஷி - வினாடி பஞ்ச பட்சி சாஸ்திரம்
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முறையாகப் பயின்று அதனைப் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களிடமிருந்து மட்டுமே ,
முறையாகப் பஞ்சபட்சி சாஸ்திரத்தைப் பயின்று வெற்றி பெற வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் .
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முறைப்படி பயிலுவோம் .
நமக்கு கிடைக்கும் சக்திகளை நல்ல செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் .
நல்லதே நினைப்போம் .
நல்லதே சொல்லுவோம் .
நல்லதே செய்வோம் .
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
போற்றினேன் பஞ்சபட்சிசாஸ்திரந் தான்முற்றதாமே “”
அனைத்தும் அருமையான விளக்கங்கள்...நன்றி ஐயா
ReplyDelete
ReplyDeletepancha patchi