இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பயன்துhக்கார்-பதிவு-12
“”பதிவு பன்னிரெண்டை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
இயேசு கிறிஸ்து :
விருந்துக்கு யாரை அழைக்க வேண்டும் என்பதை கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் இயேசு விளக்குகிறார்:
வசனம்-1 :
“ அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி : நீ பகல் விருந்தாவது இரா விருந்தாவது பண்ணும்போது , உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும் , உன் பந்து ஜனங்களையாகிலும் , ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்க வேண்டாம் ; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள் , அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும்.”
லுhக்கா-14 :12
இயேசு விருந்துக்கு அழைத்தவனை நோக்கி,
நீ விழாவுக்கு ஏற்பாடு செய்து விட்டு ,
நீ விருந்துக்கு ஏற்பாடு செய்து விட்டு ,
நீ சடங்குக்கு ஏற்பாடு செய்து விட்டு ,
நீ இரவு விருந்தாவது பகல் விருந்தாவது
ஏற்பாடு செய்து விட்டு ,
மனதைக் கவர்ந்த நெருங்கிய நண்பர்களையும் ;
மனக் கவர்ச்சிக்கு உட்படாத நெருக்கமில்லாத நண்பர்களையும் ;
குடும்பத்தில் உள்ள பாசமுள்ள சகோதரர்களையும் ;
குடும்பத்தில் உள்ள அன்பிற்கினிய சகோதரிகளையும் ;
உறவு கொண்டாடி மகிழும் உறவினர்களையும் ;
சூழ்ந்திருந்து சுகம் தரும் சுற்றத்தாரையும் ;
சுற்றத்தாரில் செல்வம் படைத்தவர்களையும் ;
வசதியில் உயர்ந்தவர்களையும் ;
வசதியில் செழித்தவர்களையும் ;
விழாவுக்கு அழைத்து உபசரித்தால் ,
விருந்துக்கு அழைத்து உபசரித்தால் ,
சடங்குக்கு அழைத்து உபசரித்தால் ,
அவர்கள் மனம் மகிழ்ந்து ,
அவர்கள் உள்ளம் குளிர்ந்து ,
அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்து ,
இருப்பார்கள் .
அதனை மனதில் கொண்டு ,
அதற்கு மாற்றாக செய்ய வேண்டும் ;
அதற்கு பிரதி உபகாரம் செய்ய வேண்டும் ;
அதனை விடச் சிறப்பாகச் செய்ய வேண்டும் ;
என்பதன் அடிப்படையில் ,
விருந்துக்கு வந்தவர்கள் தங்கள் வீட்டில் நடக்கும்
விருந்துக்கு அழைப்பார்கள் .
விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள்
தன் விருந்திற்கு ஏற்கெனவே வந்து
விருந்தில் கலந்து கொண்டவர்கள்
என்ன செய்திருக்கிறார்கள் ?
என்பதை ஆராய்ந்துப் பார்த்து
என்பதைக் கருத்தில் கொண்டு
அவர்கள்
பரிசுப் பொருளோ ,பணமோ செய்து இருந்தால் ,
அதனை திரும்பச் செய்வார்கள் .
இது பதிலுக்கு பதில் செய்ததற்கு சமம் .
இது செய்த ஒரு செயலுக்கு திரும்ப செய்ததற்கு சமம் .
நீங்கள் செய்யும் ஒரு செயலுக்கு செய்த செயலுக்கு ,
பதிலாக ஏதேனும் மாற்றாக ஒரு செயலைச் செய்தால் ,
அது புண்ணிய கணக்கில் சேராது .
நாம் செய்யும் செயல்
நாம் கொடுத்த விருந்துக்கு மாற்றாக
பதில் விருந்து கொடுக்கப்பட்டால்
செய்த செயலுக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும் .
செய்த செயலுக்கு ,
செய்த உதவிக்கு ,
செய்த விருந்துக்கு ,
மாற்று செய்யப்படா விட்டால் ,
புண்ணியம் சேர்ந்து விடும்
புண்ணிய கணக்கு உயர்ந்து விடும்
எனவே அவர்களை அழைக்காதே
அவர்களை அழைப்பதால்
ஒரு பயனும் இல்லை என்கிறார் இயேசு .
வசனம்-2 :
விருந்து உண்பதற்கு யாரை அழைக்கக் கூடாது என்று விளக்கிய இயேசு ,
யாரை அழைக்க வேண்டும் என்று கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார்:
“நீ விருந்துபண்ணும் போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக.”
லுhக்கா-14:13
விருந்துக்கு அழைத்து,
விருந்தில் உபசரிக்கும் போது ,
விருந்தில் உணவு படைத்து மகிழ்விக்கும் போது ,
சமுதாயத்தில் ஒதுக்கப் பட்ட ஏழைகளையும் ,
பிழைத்து வாழ முடியாத வறுமை நிலையில் உள்ளவர்களையும் ,
பசியின் கோரத் தாண்டவத்தால் அல்லல் படுபவர்களையும் ,
பசிக் கொடுமையால் பாதிக்கப் பட்டவர்களையும் ,
சமுதாயத்தில் தள்ளி வைக்கப்பட்ட ;
ஏளனத்திற்கு உள்ளாக்கப்பட்ட ;
பிழைத்து வாழ முடியாத ;
உழைத்து தன்னைத் தானே காப்பாற்ற முடியாத ;
தன் தேவையை தாங்களே நிறைவேற்றிக் கொள்ள முடியாத ;
மனதால் பாதிக்கப்பட்ட நிலையை அடைந்த ;
இன்பத்தை மறந்து ,
துன்பக் கடலில் நீந்திக் கொண்டிருக்கும் ;
வறுமையில் உழன்று கொண்டிருக்கும் ;
கவலையில் வாடிக் கொண்டிருக்கும் ;
சோகத்தில் துவண்டு கொண்டிருக்கும் ;
கண்ணீர்க் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் ;
உள்ளத்தால் தளர்ந்து கொண்டிருக்கும் ;
மாற்றுத் திறனாளிகளை ,
அதில் உள்ள பிரிவுகளில் உள்ளவர்களை அழைக்க வேண்டும்
என்கிறார் இயேசு .
வசனம்-3 :
விருந்துக்கு யாரைக் கூப்பிட வேண்டும் என்று சொன்ன இயேசு ,
அவர்களைக் கூப்பிடுவதால் கிடைக்கக் கூடிய பலன்களைப் பற்றி கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் கூறுகிறார்:
“அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய் ; அவர்கள் உனக்குப் பதில் செய்ய மாட்டார்கள் ; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்;.”
-----லுhக்கா-14:14
ஏழை எளியவர்க்கு இரங்குபவன் ;
வறியவர்க்கு உதவுபவன் ;
வறியவரின் துயரை துடைப்பவன் ;
போன்ற செயற்கரிய செயல்களைச் செய்பவன் ;
தான் செய்யும் உதவிக்கு மாற்றாக ,
உதவி செய்ய முடியாதவன்.
திருப்பி செய்ய முடியாதவர்க்கு உதவி செய்பவன்.
மிகுந்த புண்ணியத்தை அடைகிறான்.
அவனே பாக்கியவான்.
அவனே புண்ணியவான்.
ஏன் ? புண்ணியவான் , பாக்கியவான் என்றால்
அவர்கள் நாம் செய்த உதவிக்கு
பதில் உதவி செய்ய முடியாதவர்கள்.
திருப்பி உதவி செய்ய முடியாதவருக்கு,
உதவி செய்பவன்
உதவி செய்ததின் மூலம் புண்ணியத்தை அடைகிறான்.
பாக்கியவானாகிறான்.
நாம் செய்த புண்ணியத்திற்கு ஏற்ற பலன் எப்பொழுது
கிடைக்கும் என்றால்,
நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் பதில் செய்யப்படும் .
தீர்ப்பு வழங்கும் நாளில்
இறந்த பிறகு
செய்த பாவ , புண்ணியத்திற்கு
ஏற்றபடி பலன் அளிக்கப்படும்
செய்த புண்ணியத்திற்கு தகுந்தபடி
சுவர்க்கத்திற்கு செல்லும் வழிகள்
அவர்களுக்கு திறந்து விடப்படும்
என்கிறார் இயேசு.
திருவள்ளுவர்:
“”””பயன்துhக்கார் செய்த உதவி நயன்துhக்கின்
நன்மை கடலிற் பெரிது””””
--------திருவள்ளுவர்--திருக்குறள்------
பிறருக்கு உதவி செய்தால் ,
இந்த பலன் நமக்கு கிடைக்கும் ;
இத்தகைய நன்மைகள் நமக்கு உண்டாகும் ;
இதன் மூலம் நன்மைகள் பலவற்றை நாம் அடையலாம் ;
பண வரவை பெருக்கிக் கொள்ளலாம் ;
வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம் ;
புகழ் போதையில் மிதக்கலாம் ;
புதவி சுகத்தில் திளைக்கலாம் ;
இன்பக் கடலில் நீந்தலாம் ;
இளமை என்னும் இன்ப வீணை எடுத்து ,
மகிழ்ச்சி என்னும் கீதத்தை இசைத்து ,
சுகபோக வாழ்க்கையில் சுகித்து இருக்கலாம்
என்பதை எல்லாம் நினைவில் நிறுத்தி ,
மனதில் கற்பனைகளை வளர்த்துக் கொண்டு
எந்தவிதமான பயனையும் எதிர்பார்க்காமல் ,
எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் ,
எந்த விதமான உபகாரத்தையும் எதிர்பார்க்காமல் ,
செய்த உதவி சிறிய அளவாக இருந்தாலும்
அதனை ஆராய்ந்து பார்த்தால்
அதில் உள்ள அன்பை யோசித்துப் பார்த்தால்
அதில் உள்ள கருணையை சிந்தித்துப் பார்த்தால்
அதனுடைய நன்மை கடலை விடப் பெரியதாகும் என்கிறார் .
உதவியின் அன்புடைமையை ,
செய்த உதவியின் தன்மையை ,
கடலுடன் ஏன் ஒப்பிடுகிறார் என்றால்
கடல் கரை காண முடியாதது ;
அளக்க முடியாதது ;
ஆழம் காண முடியாதது ;
ஆதி - அந்தம் அறிய முடியாதது ;
எனவே தான் மிகவும் சிறப்பு வாய்ந்த ,
உயர்வான நிலையைக் கொண்ட ,
கடலுடன் செய்த உதவியை ஒப்பிடுகிறார் வள்ளுவர் .
உதவியின் அன்புடைமை கடலை விடப் பெரியது என்றால்
அதனால் கிடைக்கும் புண்ணியம் எவ்வளவு பெரியதாக இருக்கும்
மதிப்பிட முடியாததாக இருக்கும் .
புண்ணியமானது கடலை விட பெரியதாக
ஆழமானதாக இருக்கும்
என்கிறார் வள்ளுவர்.
இயேசு கிறிஸ்து – திருவள்ளுவர்:
இயேசு , திருப்பி உதவி செய்ய முடியாதவர்களுக்கு செய்யும் உதவி, பயனை எதிர்பார்க்காமல் செய்யும் உதவியின் பலனை புண்ணியத்தின் பலனை அளவிட முடியாது என்கிறார் .
அவ்வாறே ,
திருவள்ளவரும் , பயன் துhக்காமல் செய்த உதவிக்கு , உரிய புண்ணிய பலனை அளவிட முடியாது கடலை விடப் பெரியது என்கிறார் .
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
போற்றினேன் பதிவுபன்னிரெண் டுந்தான்முற்றே “”
No comments:
Post a Comment