December 24, 2018

கிறிஸ்துமஸ் தின வாழ்த்து மடல்-25-12-2018


            கிறிஸ்துமஸ் தின வாழ்த்து மடல்-25-12-2018

அன்பிற்கினியவர்களே,

""பகைவனையும் நேசி"""

என்ற வார்த்தை
இயேசு கிறிஸ்துவால்
சொல்லப்பட்ட வார்த்தை ;
பிரபஞ்ச ஒருங்கிணைப்புத்
தத்துவத்தை
வலியுறுத்தும் வார்த்தை. ;

பிறரை நேசிப்பவர்களை
இரண்டு நிலைகளில்
பிரித்துவிடலாம் :

ஒன்று :
பகைவராக இல்லாதவரை
நேசிப்பவர்கள்

இரண்டு :
பகைவரை நேசிப்பவர்கள்

பகைவராக இல்லாதவரை
நேசிப்பதற்கு எந்தவித
சிறப்பு குணங்களும்
தேவையில்லை
ஆனால் பகைவனை
நேசிப்பதற்கு
அன்பு, கருணை என்ற
இரண்டு குணங்கள்
கண்டிப்பாக தேவை.

இந்த இரண்டு குணங்கள்
மட்டும் இருந்தால் போதாது
அந்த குணமாகவே
மாறினால் மட்டுமே
பகைவனை நேசிக்க முடியும்

பகைவனை நேசிக்கும்
போது இரண்டு விதமான
நிகழ்வுகள் நடைபெறுகிறது

ஒன்று :
முதலில் நாம் திருந்துகிறோம்

இரண்டு :
பிறரை திருத்துகிறோம்

பொய் , சூது ,
கொலை , கொள்ளை ,
கற்புநெறி பிறழ்தல் ,
என்ற பஞ்சமா
பாதகங்களை செய்து
கொண்டிருக்கும் நாம்
இந்த தவறுகளுக்கு
எல்லாம் மூல காரணம்
நம்மிடம் உள்ள ஆறு
வகை தீய குணங்களான
பேராசை, சினம்,
கடும்பற்று,
முறையற்ற
பால் கவர்ச்சி,
உயர்வு- தாழ்வு
மனப்பான்மை ,
வஞ்சம் ஆகியவை தான்
என்பதை உணர்ந்து
அவற்றை நம்மிடையே
இருந்து படிப்படியாக
நீக்குவதற்கான
முயற்சிகளை நாம்
மேற்கொள்ளும்போது
அறுவகை தீய
குணங்களும் நம்மை
விட்டு படிப்படியாக
விலகிச் செல்ல செல்ல
அன்பும், கருணையும்
நம்மிடம் படிப்படியாக
வளர்ந்து கொண்டே
வருகிறது நம்மிடம் உள்ள
ஆறுவகை தீய குணங்களும்
நம்மை விட்டு முற்றிலுமாக
நீங்கும் போது நாம்
அன்பும், கருணையுமாகவே
மாறி விடுகிறோம்
இந்த நிலைக்கு நாம்
மாறிவிடும்போது நாம்
பகைவனையும் நேசிக்கத்
துவங்கி விடுகிறோம்

அதாவது பகைவனை
நேசிப்பதற்கு முதலில்
நாம் திருந்துகிறோம்

நாம் அன்பும்
கருணையுமாக மாறி
பகைவனை நேசிக்கத்
துவங்கும் போது பகைவன்
நமக்கு எதிராக எந்த
செயல்களைச் செய்தாலும்
அதனை பெரிதாக
எடுத்துக் கொள்ளாமல்
பகைவனை மன்னிக்கும்
உயர்ந்த குணத்தை
பெற்று விடுகிறோம்

நம்முடைய உயர்ந்த
குணங்களை காணும்
பகைவன் நாம் எவ்வளவு
கெடுதல் செய்கிறோம்
இவர் நம்மை மன்னித்து
நமக்கு எதிராக எந்த
ஒரு கெடுதலான
செயல்களையும்
செய்வதில்லை என்று
பகைவன் உணரும்போது
பகைவனுடைய மனதில்
உள்ள ஆறு வகை
தீய குணங்களும்
பகைவனை விட்டு
படிப்படியாக விலகிச்
செல்ல செல்ல
அன்பும், கருணையும்
பகைவனிடம் படிப்படியாக
வளர்ந்து கொண்டே
வருகிறது

பகைவனிடம் உள்ள
ஆறுவகை தீய குணங்களும்
பகைவனை விட்டு
முற்றிலுமாக நீங்கும் போது
பகைவன் அன்பும்,
கருணையுமாகவே
மாறி விடுகிறான்
இந்த நிலைக்கு பகைவன்
மாறிவிடும்போது
பகைவன் எதிரியாக
நினைத்த நம்மையும்
நேசிக்கத் துவங்கி
விடுகிறான்

நம்முடைய உயர்ந்த
குணங்களால் பகைவன்
திருத்தப்படுகிறான்

முதலில் நாம்
திருந்துகிறோம்
பிறகு பகைவனை
திருந்தச் செய்கிறோம்

இத்தகைய நிலையை
இந்த உலகத்தில் உள்ள
ஒவ்வொருவரும்
கைக்கொள்ளுபோது
இந்த உலகம்
முழுவதும் அன்பும்,
கருணையுமாக நிரம்பி
அனைவரும் ஒன்றுபட்டு
ஒற்றுமையாக
ஒருவருக்கொருவர்
ஒத்தும் உதவியும்
வாழக்கூடிய அமைதியான
ஒரு உலகம் ஏற்படும்
அதாவது பிரபஞ்ச
ஒருங்கிணைப்பு ஏற்படும்
என்பதை உணர்ந்து தான்
இயேசு கிறிஸ்து
பகைவனையும் நேசி
என்றார்

இவ்வளவு உயர்ந்த
தத்துவத்தை இரண்டு
வார்த்தைகளில்
சொல்லிச் சென்ற
இயேசு கிறிஸ்துவின்
வார்த்தைகளில்
உள்ள அர்த்தங்களை
மனதில் கொண்டு
இயேசு கிறிஸ்துவின்
பிறந்த நாளான
கிறிஸ்துமஸ் தினத்தன்று
பகைவனை நேசிக்கத்
துவங்குவோம்
சமதர்ம உலகத்தை
உருவாக்குவோம்

25-12-2018-ஆம் ஆண்டு
கிறிஸ்துமஸ்
தின வாழ்த்துக்கள்

--------என்றும் அன்புடன்
--------K.பாலகங்காதரன்
--------25-12-2018
///////////////////////

No comments:

Post a Comment