திருக்குறள்-பதிவு-74
வெனிஸ்
நகரத்தின்
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபை
ஜியார்டானோ
புருனோவின்
மீது முதல்
கட்ட
விசாரணையை
நடத்தி
முடித்து விட்டது.
இந்த
நிலையில் ரோம்
நகரத்தின்
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபை
ஜியார்டானோ
புருனோவின்
மீது
மேற்கொண்டு
தொடர்
விசாரணை ரோம்
நகரத்தில்
நடத்தப்பட
வேண்டும்
என்று முடிவு
செய்து
ஜியார்டானோ
புருனோவை
ரோம்
நகருக்கு
அனுப்பி
வைக்க
வேண்டும் என்று
வெனிஸ்
நகரத்தின்
ஆட்சியாளர்களை
கேட்டுக்
கொண்டதுடன்
வெனிஸ்
நகரத்தின்
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையையும்
கேட்டுக்
கொண்டது.
ரோம்
நகரம்
வெனிஸ்
நகரத்தை
கேட்டுக்
கொண்டதுடன்
நிறுத்தாமல்
ஜியார்டானோ
புருனோவை
வெனிஸ்
நகரத்திலிருந்து
ரோம்
நகரத்திற்கு
அழைத்து
வருவதற்காக
கப்பலையும்
அனுப்பி
வைத்தது
வெனிஸ்
நகரத்தின்
ஆட்சியாளர்களும்
வெனிஸ்
நகரத்தின்
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையினரும்
ஜியார்டானோ
புருனோவை
ரோமுக்கு
அனுப்பி
வைப்பதற்கு
எந்தவிதமான
நடவடிக்கைகள்
மேற்கொள்ள
வேண்டும்
என்று
கலந்து
ஆலோசித்தனர்
ஜியார்டானோ
புருனோ
சாதாரண
மனிதர் இல்லை ;
பல்வேறு
புத்தகங்களை
எழுதி
அனைவர்
மனதிலும்
நிறைந்தவர் ;
உலகத்தில்
உள்ள அனைத்து
மக்களாலும்
அறியப்பட்டவர் ;
உலகம்
முழுவதும
அறியப்பட்ட
ஒரு
தத்துவமேதை
;
ரோம்
கேட்டுக் கொண்டது
என்பதற்காக
அவரை உடனே
அனுப்பி
வைக்க முடியாது ;
சட்டப்படி
என்ன
என்ன
நடவடிக்கைகள்
மேற்கொள்ள
வேண்டுமோ
அவைகளை
கடைப்பிடித்து
ஜியார்டானோ
புருனோவை
ரோம்
நகருக்கு
அனுப்பி
வைப்பதற்கான
முயற்சிகளை
மேற்கொள்ளலாம்
என்று
முடிவு
எடுக்கப்பட்டது
அதன்படி,
முதற்கட்டமாக
மக்களிடையே
கருத்து
கேட்பது
என்றும் ,
இரண்டாம்
கட்டமாக
வெனிஸ்
நகரத்தின்
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையில்
ஜியார்டானோ
புருனோவிற்கு
எதிராக
வாக்கெடுப்பு
நடத்தி
வாக்கெடுப்பு
வெற்றி
பெறும்
பட்சத்தில்
ஜியார்டானோ
புருனோவை
ரோம்
நகருக்கு அனுப்பி
வைப்பது
என்றும் முடிவு
செய்யப்பட்டது
ஜியார்டானோ
புருனோவை
எதிர்ப்பவர்கள்
சொன்ன
பல்வேறு
காரணங்களில்
இரண்டு
காரணங்கள்
ஜியார்டானோ
புருனோவிற்கு
எதிரான
முக்கிய
சாட்சியங்களாக
எடுத்துக்
கொள்ளப்பட்டன,.
காரணம்
– 1 :
ஆண்டவனால்
சொல்லப்பட்டு
பைபிளில்
எழுதப்பட்ட
பூமியை
மையமாக வைத்து
சூரியன்
சுற்றுகிறது என்ற
கோட்பாடு
தவறு என்றும்
சூரியனை
மையமாக
வைத்து
பூமி சுற்றுகிறது
என்ற
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
சொன்ன
கோட்பாடே
சரியானது
என்றும்
ஜியார்டானோ
புருனோ
சொல்லியதன்
மூலம்
ஆண்டவன்
வாக்கை
இழிவு
செய்வதுடன்
;
பைபிளையும்
அவமதிக்கும்
விதத்தில்
நடந்து
கொண்டு
இருக்கிறார் ;
அவரை
ரோம் நகருக்கு
அனுப்ப
வேண்டும்
அங்கு
அவரைக் கொல்ல
வேண்டும்
என்றார்கள்
காரணம்
– 2 :
கன்னி
மேரியின்
புனிதத்
தன்மையைப்
பற்றியும் ;
பற்றியும் ;
இயேசு
கிறிஸ்துவின்
பிறப்பைப்
பற்றியும் ;
இழிவு
படுத்தும்
விதத்தில்
பேசினார்
ஏன்
இவ்வாறு பேசுகிறீர்கள்
நீங்கள்
ஒரு கிறிஸ்தவர்
குடும்பத்தில்
பிறந்தவர்
கிறிஸ்தவராக
வளர்ந்தவர்
கிறிஸ்தவர்
பள்ளியில்
படித்தவர்
கிறிஸ்தவர்
கல்லூரியில்
வகுப்பு
நடத்தியவர்
கிறிஸ்தவ
மதத்தைப் பற்றி
நன்கு
அறிந்து இருப்பவர்
கிறிஸ்தவ
மதத்தின்
மத
போதகராக இருப்பவர்
கிறிஸ்தவ
மதத்தின்
மதபோதகர்களில்
சிறந்தவராகக்
கருதப்படுபவர்
கிறிஸ்தவ
மதத்தில்
FATHER ஆக இருப்பவர்
ஏன்
இப்படி பேசுகிறீர்கள்
என்று
கேட்டதற்கு
நீங்கள்
பேசுவது மதம்
நான்
பேசுவது தத்துவம்
மற்றும்
அறிவியல்
என்கிறார்
மதம் என்ற
கண்ணாடியை
அணிந்து
கொண்டு
பார்த்தால்
உங்களுக்கு
தத்துவம்
என்றால்
என்ன என்றும்
அறிவியல்
என்றால்
என்ன
என்றும் தெரியாது
மதம்
என்ற கண்ணாடியை
கழட்டிவிட்டு
பாருங்கள்
உங்களுக்கு
நான் சொன்னது
புரியும்
என்று பேசுகிறார்
இவ்வாறு
கிறிஸ்தவ
மதத்தை
இழிவுபடுத்தி
பேசியதற்காக
ஜியார்டானோ
புருனோவைக்
கொல்ல
வேண்டும்
என்றார்
ஒரு
பெண்மணி
இந்த
இரண்டு காரணங்களும்
ஜியார்டானோ
புருனோ
கிறிஸ்தவ
மதத்திற்கு
எதிரானவர்
என்று
நிரூபிக்க
போதுமானதாக
இருந்தது.
--------- இன்னும் வரும்
--------- 26-12-2018
///////////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment