February 10, 2019

திருக்குறள்-பதிவு-102


                      திருக்குறள்-பதிவு-102


(போப் அறையில்
பாதர் டிராகாக்லியோலோ
அமைதியாக நின்று
கொண்டிருக்க ;
போப் கிளமெண்ட்-VIII ;
கார்டினல் சார்டோரி  ;
பெல்லரமினோ  ;
ஆகியோரிடையே
சூடான வாக்கு வாதம்
நடைபெற்றுக்
கொண்டிருந்தது)


போப் கிளமெண்ட்-VIII :
“ கார்டினல் சார்டோரி
உங்களைக் கண்டு
நாங்கள் பலமுறை
பொறாமைப்பட்டிருக்கிறோம் ;
உங்களுடைய அறிவுத்
திறமையைக் கண்டு
நாங்கள் வியந்திருக்கிறோம் ;
சந்தேகம் என்ற
ஒன்றே ஏற்படாதவர் ;
என்று பெருமைப்
பட்டிருக்கிறோம் ; “

“ உங்களுக்கு ஏதேனும்
சந்தேகம் ஏற்பட்டு
இருக்கிறதா…….? “

கார்டினல் சார்டோரி :
“ புனித தந்தையே !
எனக்கு எந்த சந்தேகமும்
ஏற்படவில்லை “

“ ஆனால் தாங்கள்
என்ன நினைக்கிறீர்கள் ?
என்பதையும் ;
தாங்கள் என்ன
சொல்ல வருகிறீர்கள் ?
என்பதையும் ;
என்னால் புரிந்து
கொள்ள முடியவில்லை ; “

பெல்லரமினோ :
ஞகத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபைக்கும்
கிறிஸ்தவ மதத்திற்கும்
எதிராக செயல்பட்டவர்களை
தூக்கில் போடுவது ;
உயிரோடு எரிப்பது ;
என்று அளிக்கப்பட்ட பல
தண்டனைகளை மக்கள்
பார்த்து விட்டார்கள் “

“ இனிமேலும்
இதைப்போல் தண்டனைகள்
வழங்கப்பட்டால் - மக்கள்
இதைப் பார்த்துக் கொண்டு
சும்மா இருப்பார்களா
என்று தெரியவில்லை; “

கார்டினல் சார்டோரி :
“ ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரிப்பதன் மூலம்
மக்களுக்கு ஒன்றை
புரிய வைக்கலாம் ;
கிறிஸ்தவ மதத்தை
எதிர்ப்பவர்களுக்கு
இத்தகைய நிலை தான்
ஏற்படும் என்பதை
புரிய வைக்கலாம் ; “

“ ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரிக்காவிட்டால் ;
கிறிஸ்தவ மதத்தை
எதிர்ப்பவர்களுக்கும் ;
கிறிஸ்தவ
மதத்தை எதிர்க்க
நினைப்பவர்களுக்கும்
மனதில் தைரியம்
வந்து விடும் “

“ யார் வேண்டுமானாலும்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின்
நடவடிக்கைகளை
எதிர்க்கலாம் ;
கிறிஸ்தவர்கள் பின்பற்றும்
மத நம்பிக்கைகளை
இழிவு செய்யலாம் ;
பைபிளில் உள்ள
கருத்துக்கு எதிராக
கருத்து சொல்லலாம் ;
என்ற நிலை
உருவாகி விடும் “

 “ ஜியார்டானோ
புருனோவை உயிரிரோடு
எரிப்பதன் மூலம்
கிறிஸ்தவ மதத்தை யாரும்
எதிர்க்கவும் மாட்டார்கள் ;
கிறிஸ்தவ மதத்தை
எதிர்க்க வேண்டும்
என்ற தைரியமும்
யாருக்கும் வராது ;

போப் கிளமெண்ட்-VIII :
“ ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரிக்கும் செயலைச்
செய்தால் நடைபெற்றுக்
கொண்டிருக்கும் ஆட்சி
கடவுளின் ஆட்சியாக இராது ;
பயங்கரவாதிகளின்
ஆட்சியாகத் தான் இருக்கும் ; “

கார்டினல் சார்டோரி :
“ ஜியார்டானோ
புருனோவின் கருத்துக்கள்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின் மாளிகை
வரை வந்து விட்டது
என்று சொல்கிறார்கள் “


போப் கிளமெண்ட்-VIII :
“ போப்பை நீங்கள்
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிரானவர் என்கிறீர்களா….? “

“போப்பையே நீங்கள்
சந்தேகப் படுகிறீர்களா……..? “


கார்டினல் சார்டோரி :
“அதை நான்
சொல்லவில்லை “

“அதை நான்
சொல்லவில்லை “

ஜியார்டானோ
புருனோவின் கருத்துக்கள்
புனித போப்பின்
ஆத்மாவிற்குள் புகுந்து
பாதிப்பை ஏற்படுத்துகிறது
என்றால் - இனிமேலும்
இத்தகைய ஒரு பிரச்சினை
ஏற்படக்கூடாது என்றால்
அதற்கு ஒரே வழி
ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரிப்பது மட்டும் தான். “


பெல்லரமினோ :
ஜியார்டோனோ
புருனோவை உயிரோடு
எரித்தால் - அவரை
உயிரோடு எரிப்பதற்காக
வைக்கப்பட்ட நெருப்பு
உயிரோடு எரித்ததோடு
மட்டுமில்லாமல்
எரித்த அந்த நெருப்பு
அணையாமல் தொடர்ந்து
பல நூற்றாண்டுகள்
எரிந்து மிகப்பெரிய
பாதிப்புகளை ஏற்படுத்திக்
கொண்டே இருக்கும் “

கார்டினல் சார்டோரி :
“நாம் கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்பட்ட ஜியார்டானோ
புருனோவிற்கு என்ன
தண்டனை வழங்க
வேண்டும் என்பதைப்
பற்றி பேசிக்
கொண்டிருக்கிறோமோ ?
( அல்லது )
அவருடைய பாவங்களை
எப்படி மன்னிப்பது ;
எப்படி அவருக்கு கடவுள்
அருள் கிடைக்கச் செய்வது ;
என்பதைப் பற்றி - நாம்
பேசிக் கொண்டிருக்கிறோமோ?
என்பது எனக்கு தெரியவில்லை.”

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  09-02-2019
/////////////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment