திருக்குறள்-பதிவு-103
கார்டினல்
சார்டோரி :
“ ஜியார்டானோ
புருனோவை
உயிருடன் எரித்துக்
கொல்வதற்கு தேவையான
அனைத்து ஆதாரங்களும்
தயார் செய்யப்பட்டு
இருக்கிறது. “
“ இந்த ஆதாரங்களே
போதுமானவை
ஜியார்டானோ
புருனோவை
உயிருடன் எரித்து
கொல்வதற்கு…………………………………!
போப்
கிளமெண்ட்-VIII :
“அந்த மூன்று
நபர்களை பற்றிச்
சொல்கிறீர்களா………………? “
“அவர்களை நம்புவது
என்பது ஆபத்தானது?”
“அவர்கள் எந்த
நேரத்திலும்
தங்களுடைய மனதை
மாற்றிக் கொள்ளலாம்”
“பிறழ் சாட்சியாக
மாறுவதற்கு கூட
வாய்ப்பிருக்கிறது”
“தங்களை காப்பாற்றிக்
கொள்வதற்கு
உண்மையை
சொல்லாமல்
பொய் சொல்லி
விட்டால் என்ன
செய்வது………………………………..? ”
கார்டினல்
சார்டோரி :
‘ புனித தந்தையே !
நன்றாக யோசியுங்கள்
தற்போது நடந்து
கொண்டிருக்கும்
சூழ்நிலைகளை நன்றாக
உற்று பாருங்கள். “
“ ஜியார்டானோ
புருனோவை
கொல்வதற்கு இது தான்
சரியான தருணம்
இதனை நாம் தவற
விட்டு விடக்கூடாது; “
“ புனித ஆண்டு
துவங்க இருக்கிறது
ரோம் நகரை தரிசனம்
செய்வதற்கு
உலகின் பல்வேறு
நாடுகளிலிருந்தும்
யாத்ரீகர்கள் வரத்
தொடங்குவர் “
“ அவர்கள் கேட்கும்
கேள்விகளுக்கு
நாம் என்ன பதில்
சொல்வது……………………….? “
“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையை
எதிர்த்த ஒருவரை
இன்னும்
உயிரோடு விட்டு
வைத்திருக்கிறீர்களா
என்று அவர்கள் கேள்வி
கேட்டால் நாம் என்ன
பதில் சொல்வது “
“ கிறிஸ்தவ மத
நம்பிக்கைகளையும்
பைபிளில் உள்ள
கருத்துக்களையும்
எதிர்த்த ஒருவரை
இன்னும் விட்டு
வைத்திருக்கிறீர்களா
என்று அவர்கள்
கேட்டால்
நாம் என்ன பதில்
சொல்வது “
“ ஜியார்டானோ
புருனோவின்
கருத்துக்கள் அனைத்து
இடங்களிலும்
பரவத் தொடங்கி
இருக்கிறது “
“ அரசாங்கத்தின்
அனைத்து துறைகளிலும்
நுழைய ஆரம்பித்து
இருக்கிறது “
“ மக்கள் அனைவரும்
ஜியார்டானோ
புருனோவின்
கருத்துக்களை சிந்திக்கத்
தொடங்கி விட்டனர் “
“ ஜியார்டனோ
புருனோவை
நாம் உயிருடன்
விட்டு வைத்தால்
ஜியார்டானோ புருனோ
மக்கள் அனைவரையும்
நஞ்சாக்கி விடுவார் ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையையும்
கிறிஸ்தவ மக்களையும்
எதிர்க்கும் நிலைக்கு
மக்களை உருவாக்கி
விடுவார் ; “
போப்
கிளமெண்ட்-VIII :
“ ஜியார்டானோ
புருனோ உயிருடன்
எரித்துக்
கொல்லப்படுவதை
நான் விரும்பவில்லை ;
அவர் உயிருடன்
இந்த உலகத்தில் வாழ
வேண்டும் ; “
“ அவரை நாம்
கொல்வதால் அவர்
செய்தது அனைத்தும்
சரி என்று ஆகிவிடும் “
“ அவர் தான் செய்த
தவறுகளை
உணர வேண்டும் ;
மக்கள் மத்தியில் தான்
செய்தது தவறு
சொல்லி ஒத்துக்
கொண்டு மன்னிப்பு
கேட்டு மனம்
வருந்த வேண்டும் ;”
பெல்லரமினோ
:
“ அவரை உயிரோடு
விட்டு வைத்தால்
மக்கள் அனைவரையும்
நமக்கு எதிராக
திருப்பி விடுவார் ;
அவரை உயிரோடு
எரித்து கொல்வது
என்பது தவிர்க்க
முடியாத ஒன்று;
அவரை கொன்றே
ஆக வேண்டும்;”
போப்
கிளமெண்ட்-VIII :
“ அதை உங்களால்
நிறைவேற்ற முடியாது “
“ அது நடப்பதற்கு
வாய்ப்பே இல்லை “
(என்று பேசிவிட்டு
போப் கிளமெண்ட்-VIII
அவர்கள் தன்னுடைய
தனிமையான அறைக்குள்
சென்று விட்டார்
கார்டினல் சார்டோரி
பெல்லரமினோ
பாதர் டிராகாக்லியோலோ
போப் நடந்து
செல்வதையே நின்று
பார்த்துக் கொண்டு
இருந்தனர்)
--------- இன்னும் வரும்
---------- K.பாலகங்காதரன்
--------- 10-02-2019
/////////////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment