பரம்பொருள்-பதிவு-109
கிருஷ்ணன் :
" 32 லட்சணங்களும்,
எதிர்ரோமம் ஆகிய
இரண்டு தகுதிகளையும்
கொண்ட நம் மூவரில்
சிறப்பு தகுதி
என்று
சொல்லும் வகையில்
என்னிடம் கடவுள்
தன்மை இருக்கிறது
;
உன்னிடம் யாராலும்
வெல்ல முடியாத
வீரம் இருக்கிறது
;
என்னிடம் உள்ள
கடவுள்
தன்மையையும்,
உன்னிடம் உள்ள
யாராலும்
வெல்ல முடியாத
வீரத் தன்மையையும்
ஒருங்கே பெற்றவன்
அரவான் என்பதை
மறந்து விடாதே
அர்ஜுனா ! "
"அரவானை
அழிக்கக்
கூடியவர்கள்
இந்த
உலகத்தில் இதுவரை
பிறக்கவுமில்லை
;
இனி பிறக்கப்
போவதுமில்லை
;
அரவானை அழிப்பதற்கு
புதியதாக ஒருவரை
பிறக்க
வைக்கவும் முடியாது
; "
"அதுமட்டுமல்ல
அரவானை
அழிக்கக்கூடிய
ஆயுதம்
இந்த உலகத்தில்
யாரிடமும் இல்லை
;
இதுவரை அரவானை
அழிக்கக்கூடிய
ஆயுதம் யாராலும்
எங்குமே உற்பத்தி
செய்யப்படவுமில்லை
;
இனியும் யாராலும்
உற்பத்தி செய்யவும்
முடியாது ;
"
"அர்ஜுனா
!
அரவான் போர்க்களத்தில்
இறங்கி போர்
செய்தால்
அவனுக்கு எதிராக
போர் செய்யும்
எதிரிகள் அனைவரையும்
ஒரு தினத்தின்
ஒரு
பகற்பொழுதில்
அழித்து விடக்கூடிய
சர்வவல்லமை படைத்தவன்
அரவான் என்பதை
மறந்து விடாதே
"
"அரவானை
அழிக்கக்கூடியவர்கள்
இந்த
உலகத்தில் இல்லை
;
அப்படி ஒருவரை
இந்த
உலகத்தில் பிறக்க
வைக்கவும் முடியாது
என்ற காரணத்திற்காகவும்
;
அரவானை அழிக்கக்கூடிய
ஆயுதம் இந்த
உலகத்தில் இல்லை
இனியும் அப்படி
ஒரு ஆயுதம் உற்பத்தி
செய்ய முடியாது
என்ற காரணத்திற்காகவும்
;
அரவான் போர்க்
களத்தில்
இறங்கி போர்
செய்து
ஒரு தினத்தின்
ஒரு
பகற்பொழுதில்
எதிரிகள் அனைவரையும்
அழித்து விட்டால்
கர்மவினைகளுக்கேற்ப
ஒவ்வொருவரும்
எந்த காலத்தில்
;
எந்த நேரத்தில்
;
எந்த ஆயுதம்
கொண்டு ;
இறக்க வேண்டும்
;
எப்படி இறக்க
வேண்டும் ;
யாரால் இறக்க
வேண்டும் ;
எந்த முறையில்
இறக்க வேண்டும்
;
என்பதை நியமிக்கப்பட்டபடி
நடைமுறைப்படுத்த
முடியாமல் போய்
விடும் என்ற
காரணத்திற்காகவும்
தான் ;
காலம் அரவானை
களப்பலியாக கொடுப்பதற்கு
தேர்ந்தெடுத்து
இருக்கிறது.; "
"அது மட்டுமல்ல
காலம்
அரவானை தன்னைத்
தானே
களப்பலி கொடுக்கும்
படியான செயலைச்
செய்ய
வைக்கவும் இருக்கிறது
;
அது மட்டுமல்ல
இங்கே தான் விதி
தன்னுடைய விளையாட்டை
வெற்றிகரமாக
நடத்தி வைக்க
திட்டமிட்டு
இருக்கிறது ;"
"அரவான்
இவ்வளவு
வல்லமை பொருந்தியவன்
மட்டுமல்ல எதிரியாக
இருந்தாலும்
அன்பைக்
காட்டக்கூடியவன்
அரவான் "
"துரியோதனன்
அரவானை
நாடிச்சென்றால்
அரவான் துரியோதனனை
அன்புடன் வரவேற்பான்
;
கருணையுடன் தன்னுடைய
உயிரை களப்பலியாக
கொடுக்க ஒப்புக்
கொள்வான் ;
வீரத்துடன் களப்பலியாவான்
;
என்ற காரணத்தினால்
தான் நான் பயப்படுகிறேன்
;"
"இந்த உலகத்தில்
கர்ணன் மட்டும்
தான்
கொடையாளியாக
இருக்கிறான்
என்று
நினைத்து விடாதே
அர்ஜுனா !
கர்ணன் மட்டுமல்ல
அரவானும் கொடையாளி
தான்
என்பதை மறந்து
விடாதே "
"தன்னை
நாடி வந்து
யாசகம் கேட்பவர்
யாராக இருந்தாலும்
;
அவர் எதிரியாகவே
இருந்தாலும்
கூட
தன்னிடம் யாசகம்
என்று
கேட்டு விட்டால்
யாசகமாக எதைக்
கேட்டாலும் கொடுத்து
விடக்கூடிய பரந்த
மனப்பான்மை
உடையவன் அரவான்
; "
"யாசகமாக
எதைக்
கேட்டாலும் கொடுத்த
வாக்கிற்காக
உயிரையே
கொடுத்து நிறைவேற்றக்
கூடியவன் அரவான்
;
அப்படிப்பட்ட
அரவானிடம்
யாகசமாக உயிரையே
கேட்டால் கொடுக்காமல்
இருப்பானா என்ற
காரணத்திற்காகத்
தான்
நான் பயப்படுகிறேன்
அர்ஜுனா !
"
அர்ஜுனன் :
"இப்போது
என்ன
செய்வது கிருஷ்ணா?"
கிருஷ்ணன் :
"இப்போது
நம்மால்
ஒன்றும் செய்ய
முடியாது அர்ஜுனா
!"
"அரவானை
சந்திக்க
துரியோதனன்
சென்றிருக்கிறான்
;
அரவான் என்ன
பதில் சொல்லப்
போகிறான் என்பதை
பொறுத்திருந்து
பார்ப்போம்
அதற்குப் பிறகு
நாம் என்ன
செய்வது என்பதைப்
பற்றி யோசிப்போம்
?"
---------- இன்னும்
வரும்
-----------
K.பாலகங்காதரன்
---------- 02-01-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment