பரம்பொருள்-பதிவு-110
(துரியோதனன்
அரவானின்
மாளிகைக்குள்
நுழைகிறான்
- தனது
பெரிய
தந்தையான
துரியோதனனைக்
கண்ட
அரவான்
துரியோதனனை
ஓடிச்
சென்று
வரவேற்கிறான்)
அரவான்
:
"வாருங்கள்
பெரிய
தந்தையே !
வாருங்கள்
தங்கள்
வரவால்
என்
மாளிகை
பெருமை
அடைகிறது ;
தங்கள்
பாதம் பட்டு
என்னுடைய
இல்லம்
சிறப்பு
அடைகிறது ;
தங்களை
வரவேற்பதில்
என்
மனம் மிக்க
மகிழ்ச்சி
அடைகிறது ;
வாருங்கள்
பெரிய
தந்தையே
வாருங்கள் "
(என்று
சொல்லிக்
கொண்டே
அரவான்
துரியோதனன்
காலில்
சென்று
விழுந்து
வணங்குகிறான்)
அரவான்
:
"என்னை
ஆசிர்வதியுங்கள்
பெரிய
தந்தையே ! "
(அரவானை
அள்ளி
மார்போடு
அணைத்து
பிறகு
பேசத்
தொடங்குகிறான்
துரியோதனன்)
துரியோதனன்
:
"மகனே
! அரவான்
உன்னுடைய
வார்த்தைகள்
என்னுடைய
மனதை
ஏ‘தோ
செய்கிறது ;
உன்னுடைய
பணிவைக்
கண்டு
என்னுடைய
கண்கள்
கலங்குகிறது ;
உன்னுடைய
பெருந்தன்மை
என்னை
வியக்க
வைக்கிறது ; "
"அனைவரையும்
சமமாக
பாவிக்கும்
உன்னுடைய
பாசம்
என்னை
மலைக்க
வைக்கிறது ;
பகைவனாக
நினைக்க
வேண்டியவனையும்
வரவேற்கும்
உன்னுடைய
பண்பு
என்னை
திகைக்க
வைக்கிறது ;"
‘"நீ
வீரத்தில்
சிறந்தவன்
என்று
கேள்விப்பட்டிருக்கிறேன்
;
ஆனால்
பண்பிலும்
உயர்ந்தவன்
என்பதை
உன்னுடைய
செய்கையின்
மூலமே
நிரூபித்து
விட்டாய் ;"
"உன்னுடைய
உயர்ந்த
அன்பில்
கரைந்து
போன
நான்
என்ன
பேசுவது என்று
தெரியாமல்
வார்த்தை
இன்றி
தவித்துக்
கொண்டிருக்கிறேன்
"
"இந்த
பார் உள்ளளவும்
உன்னுடைய
புகழ்
என்றும்
நிலைத்து நிற்கும்
என்னுடைய
ஆசிகள்
உனக்கு
என்றும்
உண்டு
மகனே அரவான் ! "
அரவான்
:
"பெரிய
தந்தையே !
நீங்கள்
என்னை
பார்க்க
வேண்டும் என்று
ஒரு
வார்த்தை
சொல்லி
இருந்தால்
உங்களைக்
காண
நீங்கள்
இருக்கும்
இடத்தைத்
தேடி
நானே
நேரில்
வந்திருப்பேனே
?
இந்த
எளியவனைக்
காண
தாங்கள்
இவ்வளவு
தூரம்
வர
வேண்டுமா ?
பெரிய
தந்தையே ! "
துரியோதனன்
:
"உலகத்தையே
கட்டி
காப்பாற்றும்
கடவுளாக
இருந்தாலும்
சரி ;
நாட்டை
ஆளும்
மன்னவனாக
இருந்தாலும்
சரி ;
அவர்களுக்கு
ஒன்று
தேவைப்படுகிறது
என்றால்
அதை
கொடுப்பவர்
யாராக
இருந்தாலும்
அவர்
இருக்கும்
இடத்தைத்
தேடித்
தான்
செல்ல
வேண்டும்
என்பது
தானே
உலக நியதி ! "
"எனக்கு
உன்னிடம்
ஒன்று
தேவைப்படுகிறது
அதனால்
நானே
உன்னைத்
தேடி
உன்னுடைய
இருப்பிடம்
தேடி
நேரில்
வந்தேன்
அரவான்
!"
அரவான்
:
"ஒன்றும்
இல்லாத
இந்த
எளியவனிடம்
அப்படி
என்ன
தான்
இருக்கிறது
என்று
என்னைத்
தேடி
வந்தீர்கள்
பெரிய
தந்தையே ! "
துரியோதனன்
:
"யாரிடமும்
இல்லாத ஒன்று ;
அரிதாக
இருக்கும் ஒன்று ;
யாருக்கும்
கிடைக்காத
ஒன்று ;
கடவுளால்
அருளப்பட்டது
என்று
சொல்லப்படும்
ஒன்று ;
சிலரிடம்
மட்டுமே
இருக்கும்
"
"அந்த
ஒன்று
உன்னிடம்
இருக்கிறது
என்பதைக்
கேள்விப்பட்டேன் ;
அந்த
ஒன்றைப் பெற
வேண்டும்
என்பதற்காக ;
உன்னுடைய
சம்மதத்தைப்
பெற ;
உன்னைக்
காண
நானே
நேரில்
வந்தேன்
அரவான் ! "
அரவான்
:
"என்னிடம்
என்ன பெற
வேண்டும்
என்பதற்காக
என்னுடைய
சம்மதத்தைப்
பெற
வந்திருக்கிறீர்கள்
என்பதை
சொல்லுங்கள்
பெரிய
தந்தையே ! "
----------
இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
----------
04-01-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment