பரம்பொருள்-பதிவு-142
உலூபி :
“ஒருவருடைய
ஜனன கால
ஜாதகத்தை வைத்து
ஒருவருடைய
இறப்பை
கணிக்க முடியுமா ? ”
சகாதேவன் :
“ஒருவருடைய
இறப்பை
மட்டுமல்ல
பிறப்பு
வாழ்க்கை முறை
அனைத்தையும்
கணிக்க முடியும் “
உலூபி :
“அப்படி என்றால்
எனக்காக நீங்கள்
ஒன்றை கணித்துச்
சொல்ல வேண்டும் “
சகாதேவன் :
“நீங்கள் என்ன
கேட்கப்
போகிறீர்கள்
என்பதை என்னால்
ஓரளவுக்கு யூகிக்க
முடிகிறது
இருந்தாலும்
பரவாயில்லை
கேளுங்கள் !
எனக்கு
சோதிடத்தில்
தெரிந்த அளவு
சொல்கிறேன்
கேளுங்கள் !
நீங்கள் என்ன
விருப்பப்
படுகிறீர்களோ
அதை நீங்கள்
தாரளமாக
கேட்கலாம் “
உலூபி :
“அரவானின் இறப்பை
கணித்துச் சொல்ல
வேண்டும்
ஆமாம்
அரவானின் இறப்பு
எப்படி இருக்கும் ? “
சகாதேவன் :
“நான் எதிர்பார்த்தது தான்”
பரந்தாமன்
கிருஷ்ணன்
என்னுடைய
அண்ணன் அர்ஜுனன்
ஆகிய இருவரும்
தாங்கள்
களப்பலியாகத்
தயாராக
இருக்கிறோம் ;
எங்களை களப்பலி
கொடுங்கள் என்று
ஒப்புதல்
அளித்தாலும்
அவர்களுடைய
ஒப்புதலை
ஒருவரும் ஏற்றுக்
கொள்ளவில்லை “
“அவர்கள்
இருவரையும்
களப்பலி கொடுக்க
ஒருவரும்
சம்மதிக்கவில்லை “
“பரந்தாமன்
கிருஷ்ணனையும்
என்னுடைய
அண்ணன்
அர்ஜுனனையும்
களப்பலியாகக்
கொடுக்காமல்
மறுப்பதற்கு
பல்வேறு தரப்பினர்
பல்வேறு
காரணங்களைச்
சொன்னாலும்
சோதிட ரீதியாக
ஒரே ஒரு காரணம்
தான் உண்டு “
“ஆமாம்
களப்பலியாக
வேண்டும் என்பது
இருவருடைய
ஜாதகத்திலும்
இல்லை ;
அரவானின்
ஜாதகத்தில்
மட்டுமே
களப்பலியாக
வேண்டும்
என்பது உள்ளது “
“களப்பலியாகக் கூடிய
முழுத் தகுதியும்
தற்போது இந்த
உலகத்தில்
அரவான்
ஒருவனுக்கு
மட்டுமே உள்ளது ;
வேறு யாருக்கும்
அந்தத் தகுதி
இல்லை ;”
“இந்த உலகத்தில்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
அனைத்து
தகுதிகளையும்
பெற்று வாழ்ந்து
கொண்டு இருப்பது
அரவான்
ஒருவன் மட்டுமே “
“அரவானின்
களப்பலி
தவறாகப் போய்
விடக்கூடாது
என்பதற்காகத் தான்
பரந்தாமன்
கிருஷ்ணன்
பாண்டவர்கள்
சார்பாக
அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
முயற்சிகள் செய்து
கொண்டிருக்கிறார் “
“அவர் செய்து
கொண்டிருக்கும்
முயற்சி
சரியானது என்பதை
நான் உணர்ந்த
காரணத்தினால் தான்
நான் ஒப்புதல்
அளித்தேன் “
----------- இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்
----------- 28-02-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment