March 31, 2020

பரம்பொருள்-பதிவு-170


              ஜபம்-பதிவு-418
            (பரம்பொருள்-170)

திருநங்கை :
“அற்புதம்”

“தத்துவக் கவிதையாக
இருக்க வேண்டும் ;
எளிதில் யாருக்கும்
புரியாத வகையில்
கடினமாக
வார்த்தைகளைக்
கொண்டதாக
இருக்க வேண்டும் ;
அர்த்தம் கொண்டதாக
இருக்க வேண்டும்  
என்று நான்
எப்படிக் கேட்டேனோ ?
அப்படியே
தத்துவக் கவிதை
சொல்லி இருக்கிறீர்கள் ”

“நீங்கள் அழகில்
சிறந்தவராக
இருக்கிறீர்கள் ;
அறிவில்
உயர்ந்தவராக
இருக்கிறீர்கள் ;
கவிதை சொல்வதில்
ஆற்றல் பெற்றவராக
இருக்கிறீர்கள் ;
கற்பனையில் கூட
சிந்தித்துப்
பார்க்க முடியாத
சிந்தனை கொண்டவராக
இருக்கிறீர்கள் ;
அனைத்து
திறமைகளையும்
உள்ளடக்கிய
அதிசயிக்கத்தக்க
திறமை படைத்தவராக
இருக்கிறீர்கள் ;”

“இந்த உலகம்
கண்டிராத
பிரம்மிக்கத் தக்க
ஆற்றல்கள்
அனைத்தையும்
கொண்டவராக
இருக்கும் உங்களை  
நான் கணவராக
அடைந்ததற்கு - மிகப்
பெரிய பாக்கியம்
செய்து இருக்கிறேன் “

அரவான் :
“கணவனைப் புரிந்து
கொண்ட மனைவி
கிடைப்பது
கஷ்டம் என்றால் ;
அதை விட கஷ்டம்
கணவன் மனதை
புரிந்து கொண்டு
கணவனின்
மனம் கோணாமல்
நடக்கும் மனைவி
கிடைப்பது தான் ;”

“என்னைப் பற்றி 
முழுமையாக
புரிந்து கொண்டு
உன்னுடைய
வாழ்க்கையை
எனக்காகவே அர்ப்பணிக்க
வந்திருக்கும் நீ
என்னுடைய மனைவியாக
கிடைத்ததற்கு –நான்
மிகப் பெரிய பாக்கியம்
செய்து இருக்கிறேன்”

திருநங்கை  :
“இல்லை நான்
தான் பாக்கியம்
செய்து இருக்கிறேன் “

அரவான்  :
“யார் பாக்கியம் செய்து
இருக்கிறார்கள் - என்று
இருவரும் சண்டை
போட்டுக் கொண்டிருந்தால்
இன்பங்களை வாரி
வழங்கக் காத்துக்
கொண்டிருக்கும்
இரவானது விடிந்து விடும்”

“எண்ணத்திற்கு ஏற்றபடி
எளிமைக்கு தகுந்தபடி
அழகெல்லாம் அமைந்தபடி
சொல்லை சொக்கியபடி
சிந்தையை சிதைத்தபடி
உள்ளத்தை உருக்கியபடி
அறிவுக்கு ஏற்றபடி
அன்புக்கு உகந்தபடி
அமுதமாய் தித்தித்தபடி
சொல்லால் மயக்கியபடி
கவர்ச்சியால் கவர்ந்தபடி
இதயத்தை அணைத்தபடி
மயக்கம் ஊட்டியபடி
வார்த்தையால் சிதைத்தபடி
விழியால் எரித்தபடி
கனலாய் கொதித்தபடி
தென்றலாய் இனித்தபடி
இருக்கும் நீ
விழி காட்டி
சொல் காட்டி
நகை காட்டி
நடை காட்டி
இடை காட்டி
கவர்ச்சி காட்டி
என்னை
எண்ணத் தீயில்
சாக விட்டு
மோகத் தீயில்
மூழ்க விட்டு
காதல் தீயில்
வேக விட்டு
காமத் தீயில்
நோக விட்டு
என்னை  ஏங்க
வைத்தவளே !
இன்ப வாசலை
திறந்து விடு
காதல் கனலில்
மூழ்க விடு
முத்தெடுக்க முத்து
குளிக்க விடு
உன்னுடைய
அணைப்புச் சாரலில்
என்னை நனைத்து விடு
என்று திருநங்கையை
அணைத்தான் அரவான்
அரவானின் தழுவலில்
திருநங்கை இருந்தாள் “

“இருவரின்
அணைப்பினில்
இன்பத்தின் கதவுகள்
அனைத்தும் திறக்கப்பட்டது ;
அன்றைய இரவில்
அந்த அறையில்
மகிழ்ச்சிகள் அனைத்தும்
பூத்துக் குலுங்கியது ;
இரவு முடிந்து
விடியல் கொஞ்சம்
கொஞ்சமாக
விடியத் தொடங்கியது ; “

“அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்குரிய
நேரம் நெருங்கிக்
கொண்டிருந்தது “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 31-03-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment