April 28, 2020

பரம்பொருள்-பதிவு-217


             ஜபம்-பதிவு-465
            (பரம்பொருள்-217)

“பாண்டவர்களின்
7- அக்ரோணிப் படைகள்
கெளரவர்களின்
11- அக்ரோணிப் படைகள்
ஆக மொத்தம்
18- அக்ரோணிப் படைகள்
குருஷேத்திரப்
போர்க்களத்தில்
போரிட்டன “

“தேர் ஒன்று ;
யானை ஒன்று ;
குதிரை மூன்று ;
காலாள் ஐவர் ;
இவைகள்
சேர்ந்தது – பத்தி “

“பத்தி
மூன்று
கொண்டது – ஸேனாமுகம் “

“ஸேனா முகம்
மூன்று
கொண்டது – குல்மம் “

“குல்மம்
மூன்று
கொண்டது – கணம் “

“கணம்
மூன்று
கொண்டது – வாகினி “

“வாகினி
மூன்று
கொண்டது – பிருதனை “

“பிருதனை
மூன்று
கொண்டது – சமு”

“சமு
மூன்று
கொண்டது – அனீகினி”

“அனீகினி
பத்து
கொண்டது – அக்ரோணி”

“ஒரு அக்ரோணி
என்பது
21870 யானைப்படை ;
21870 தேர்கள் ;
65610 காலாட்படை ;
109350
குதிரைப்படை
ஆகியவற்றைக்
கொண்டது”

“அதாவது
ஒரு அக்ரோணி
என்பது
218700
(இரண்டு லட்சத்துப்
பதிணெட்டாயிரத்து
எழுநூறு)
கொண்டது “

“பாண்டவர்கள்
7 அக்ரோணிப் படைகளை
வைத்து இருந்தனர் ;
7 அக்ரோணிப் படைகளின்
எண்ணிக்கை
1530900
(பதினைந்து லட்சத்து
முப்பதாயிரத்து
தொள்ளாயிரம்) “

“கெளரவர்கள்
11 அக்ரோணிப் படைகளை
வைத்து இருந்தனர்
11 அக்ரோணிப் படைகளின்
எண்ணிக்கை
2405700
(இருபத்து நான்கு
லட்சத்து ஐந்தாயிரத்து
எழுநூறு) “

“பாண்டவர்களின்
7 அக்ரோணிப் படைகள்
மற்றும்
கௌரவர்களின்
11 அக்ரோணிப் படைகள்
ஆகியவற்றின்
மொத்த எண்ணிக்கை
18 “

“18 அக்ரோணிப்
படைகளின் எண்ணிக்கை
3936600
(முப்பத்து ஒன்பது
லட்சத்து முப்பத்து
ஆறாயிரத்து அறுநூறு) “   

“பாண்டவர்களின்
7 அக்ரோணிப் படைகள்
கெளரவர்களின்
11 அக்ரோணிப் படைகள்
ஆக மொத்தம்
18 அக்ரோணிப் படைகளின்
எண்ணிக்கையான
3936600
முப்பத்து ஒன்பது
லட்சத்து முப்பத்து
ஆறாயிரத்து அறுநூறும்
18 நாள் நடந்த
குருஷேத்திரப்
போர்க்களத்தில்
அழிந்தன “

“18 நாள் நடந்த
குருஷேத்திரப் போரின்
முடிவில்
பஞ்ச பாண்டவர்கள்
வெற்றி பெற்றனர்”

“18 நாள் நடந்த
குருஷேத்திரப் போரின்
முடிவில்
பஞ்ச பாண்டவர்கள்
ஐவர்,
கிருஷ்ணன்,
சாத்தகி,
அஸ்வத்தாமன்,
கிருபாச்சாரியார்,
கிருதவர்மா
ஆகிய பத்துப்
பேர் தான்
எஞ்சி இருந்தார்கள் “

“18 நாள் நடந்த
குருஷேத்திரப் போர்
முடிந்த பின்பு
பஞ்ச பாண்டவர்கள்
ஐவர் மற்றும்
கிருஷ்ணன்
ஆகியோர்
அரவானைக் காணச்
சென்றனர் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 28-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-216


              ஜபம்-பதிவு-464
            (பரம்பொருள்-216)

“குருஷேத்திரப் போரில்
உலகத்திலேயே
சிறந்த வீரர்களாக
கருதப்படுபவர்கள்
அனைவரும்
போரிட்டார்கள்  ;”

“நினைத்து கூட
பார்க்க முடியாத
அளவிற்கு
சதித் திட்டங்கள்
தீட்டப்பட்டன ; “

“இப்படியும்
சிந்திக்க முடியுமா
என்று அனைவரையும்
சிந்திக்க வைக்கும்
வகையில் வியூகங்கள்
வகுக்கப்பட்டன ; “

“இப்படியும் துரோகத்தை
வெளிப்படுத்த முடியுமா
என்று சிந்திக்க முடியாத
அளவிற்கு துரோகங்கள்
வெளிப்படுத்தப்பட்டன ; “

“தர்மம் இறந்து விட்டதா
என்று சொல்லத்தக்க
வகையில் தர்மங்கள்
மீறப்பட்டன ; “

“அதர்மங்கள்
எவரைப் பற்றியும்
கவலைப்படாமல்
நடைமுறைப்படுத்தப்பட்டன  ; “

“தெய்வீக ஆயுதங்களை
வைத்திருந்தவர்கள்
அனைவராலும்
தெய்வீக ஆயுதங்கள்
பயன்படுத்தப்பட்டன  

“குருஷேத்திரப்
போர்க்களத்தின்
எல்லா இடங்களிலும்
கையிழந்து
அவதிப்பட்டவர்களும் ;
காலிழந்து
வேதனைப் பட்டவர்களும்;
குடல் சரிந்து
வலியால் துடித்தவர்களும் ;
போர்க்களத்தை விட்டு
செல்லவில்லை “

“ஒரு கையை
இழந்தவர்கள்
மற்றொரு கையால்
போரிட்டனர் ;
கையிழந்தாலும்
மற்றொரு கையால் சாகும்
வரை போரிட்டனர் ; “

“காலில்லாதவர்கள்
தரையில் ஊர்ந்து
சென்று உயிர் போகும்
வரை போரிட்டனர் “

“குடல் சரிந்தவர்கள்
குடலை எடுத்து
வயிற்றுக்குள் போட்டு
துணியால் வயிற்றை
இறுகக் கட்டிக்
கொண்டு போரிட்டனர் “

“காயத்தினால் ஏற்பட்ட
இரத்தம் உடல்
முழுவதையும்
நனைத்தாலும் ;
காயத்தினால் ஏற்பட்ட
வலியானது உடலை
வேதனையில்
வாட்டினாலும் ;
அதை எல்லாம்
பொருட்படுத்தாமல்
போரிட்டனர் “

“சில சமயங்களில்
வீரர்கள்
இரத்த வெள்ளத்தில்
நின்ற படி போர்
செய்தார்கள் “

“சில சமயங்களில்
போரிடுவதற்கு
இடம் இல்லாமல்
வீரர்கள்
பிணத்தின் மீது
ஏறி நின்று
போரிட்டார்கள் “

“காயம் பட்டவர்களுக்கு
மருத்துவ உதவிகள்
செய்வதற்குக் கூட
ஆட்கள் இல்லை “

“தலை இழந்து
இறந்தவர்களும் ;
துண்டிக்கப்பட்ட
தலைகளும் ;
அதிக அளவில்
காணப்பட்டன “

“பிணங்கள் குவியல்
குவியலாக எல்லா
இடங்களிலும்
சிதறிக் கிடந்தன “

“இறந்தவர்களை
தூக்கிச் செல்வதற்குக்
கூட ஆட்கள் இல்லை “

“குருஷேத்திரப்
போர்க்களத்தில்
அனுதினமும்
இரத்த ஆறு
ஓடவில்லை
இரத்தக் கடலே
ஓடியது “

“இது வரை
இப்படிப்பட்ட
ஒரு போரை
இந்த உலகம்
கண்டதில்லை ;
இனியும் இப்படிப்பட்ட
ஒரு போரை
இந்த உலகம்
காணப்போவதில்லை ;
என்று சொல்லத்தக்க
விதத்தில்
குருஷேத்திரப் போர்
நடைபெற்றது “

“பாண்டவர்கள் சார்பிலோ
அல்லது
கௌரவர்கள் சார்பிலோ
போரிடாமல்
இருக்கக்கூடிய
எந்த வீரனும்
பாரத மண்ணில்
இல்லை என்று
சொல்லத்தக்க
வகையில்
இந்த உலகத்தில்
உள்ள அனைவரும்
குருஷேத்திரப்
போர்க்களத்தில்
போரிட்டனர் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 28-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-215


               ஜபம்-பதிவு-463
             (பரம்பொருள்-215)

“அர்ஜுனன்
தனக்கு எதிராக
சேனையில் இருக்கின்ற
பாட்டன் ; ஆசிரியர்கள் ;
மாதுலர்கள் ; சதோரர்கள் ;
மைந்தர்கள் ;
மைந்தரின் மைந்தர்கள் ;
மைத்துனர்கள் ; நண்பர்கள் ;
உறவினர்கள் ;
ஆகியோர்
போர் புரிவதற்கு
தயாராக நின்று
கொண்டிருப்பதைக்
கண்டான் “

அர்ஜுனன் :
“பரந்தாமா ! எனக்கு
எதிராக நின்று
கொண்டிருக்கும்
உறவினர்களைக்
கண்டு - என்னுடைய
அங்கங்கள் நடுங்குகிறது ;
உடல் தளர்வடைகிறது ;
மனம் கலக்கமடைகிறது ;
என்னுடைய தலை
சுற்றுகிறது ; “

“எதிரே இருப்பவர்கள்
என்னுடைய
பகைவர்கள் இல்லை  ;
எதிரே இருப்பவர்கள்
என்னுடைய
பாட்டனார் ;
என்னுடைய
குருநாதர் ;
என்னுடைய
பெரிய தந்தையின்
புதல்வர்கள் ;
என்னுடைய
உறவினர்கள் ;
இவர்கள்
என்னைக் கொல்ல
விரும்பினாலும் நான்
அவர்களைக்
கொல்ல மாட்டேன் “

“உறவினர்களைக்
கொல்வதன்
மூலம் எனக்கு
கிடைக்கும் வெற்றி
எனக்குத்
தேவையில்லை  ;
அதனால் 
கிடைக்கும் நாடும்
எனக்குத்
தேவையில்லை ;
நாட்டை ஆளவும் நான்
விரும்பவில்லை ;
என்று சொல்லிக்
கொண்டே
அர்ஜுனன்
தன்னுடைய
காண்டீபத்தை கீழே
வைத்து விட்டான்  

“தன்னால் போரிட
முடியாது என்று
சொன்ன
அர்ஜுனனுக்கு
கிருஷ்ணன் கீதையை
உபதேசம் செய்தார் “

“கிருஷ்ணனின்
கீதை உபதேசத்தைக்
கேட்ட
அர்ஜுனன்
காண்டீபத்தை
எடுத்துக் கொண்டு
போரிடுவதற்கு
தயாரானான்  

“கந்தர்வர்கள்  ;
தேவர்கள் ;
பித்ருக்கள் ;
சித்த சாரணர்கள் ;
முதலியோர்கள்
இந்திரனை
முன்னிட்டுக் கொண்டு
அப்பெரிய போரை
பார்க்க விரும்பி
விண்ணிலே
கூடி நின்றார்கள் “

“யார் முதலில்
போரை ஆரம்பிக்கப்
போகிறார்கள்
என்பதை அனைவரும்
ஆவலுடன்
எதிர்பார்த்துக் காத்துக்
கொண்டிருந்தார்கள் “

“முதலில் பாணத்தை
துச்சாதனன் செலுத்தினான் “

“குருஷேத்திரப்
போர் ஆரம்பமானது “

“யானை யானையையும்  ;
தேராளி தேராளியையும் ;
குதிரை வீரன்
குதிரை வீரனையும் ;
காலாள் காலாளையும் ;
எதிர்த்துப் போரிட்டார்கள் “

“தந்தை மகனை
மகன் என்றும் பார்க்காமல்
மகனைக் கொன்றான்  ; “

“மகன் தந்தையை
தந்தை என்றும் பார்க்காமல்
தந்தையைக் கொன்றான்  

“சகோதரன் சகோதரனை
சகோதரன் என்றும் பார்க்காமல்
சகோதரனைக் கொன்றான்  

“நண்பன் நண்பனை
நண்பன் என்றும் பார்க்காமல்
நண்பனைக் கொன்றான்  

“மாமன் மருமகனை
மருமகன் என்றும் பார்க்காமல்
மருமகனைக் கொன்றான்  

“மருமகன் மாமனை
மாமன் என்றும் பார்க்காமல்
மாமனைக் கொன்றான்  

“ஒருவருக்கொருவர்
பகை கொண்டவர்கள்
போல் வெறியுடன்
போரிட்டு ஒருவரை
ஒருவர் கொன்றார்கள்  

“குதிரை வீரர்கள் பெரிய
பெரிய ஈட்டிகளை
எறிந்து போரிட்டார்கள்  

“கத்தி ; கடாரி ; ஈட்டி ;
சுரிகை ; கோடாலி ;
இரும்புலக்கை ;
கதை ; வளைதடி ;
சக்கரம் ; முதலிய
ஆயுதங்களைக் கொண்டு
வீரர்கள் போரிட்டார்கள் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 28-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-214

              ஜபம்-பதிவு-462
             (பரம்பொருள்-214)

“நட்டு வைக்கப்பட்ட
கம்பத்தில் பொருத்தி
வைக்கப்பட்ட
தலையில் உள்ள
கண்களின் வழியாக
குருஷேத்திரப்
போரைப் பார்க்கத்
தயாரானான் அரவான்

“குருஷேத்திரப்
போருக்கென்று விதிகள்
உருவாக்கப் பட்டன “

“போரில் ஒருவன்
ஆயுதத்தை இழந்து
விட்டால் மீண்டும்
அவன் ஆயுதத்தை
எடுத்துக்
கொள்ளும் வரை
அவனது எதிராளி
அவன் மீது போர்
தொடுக்கக் கூடாது "

“போரில் யாரேனும்
காயமடைந்து
சிகிச்சை செய்து
கொள்வதற்காகப்
பின் வாங்கினாலோ
அல்லது
போர்க்களத்தை
விட்டு ஓடினாலோ
அவர்கள் மீது போர்
தொடுக்கக் கூடாது ;
அவர்களைக்
கொல்லக் கூடாது ;
காயம்பட்டவர்களுக்கு
உதவி செய்பவர்கள்
மீது போர்
தொடுக்கக் கூடாது ; “

“காலாட் படை
காலாட் படையுடனும் ;
தேர்ப்படை
தேர்ப்படையுடனும் ;
குதிரைப் படை
குதிரைப் படையுடனும் ;
தான் போரிட
வேண்டும்”

“மாவீரர்கள்
மாவீரர்களுடனும் ;
அதிரதர்கள்
அதிரதர்களுடனும் ;
தான் போரிட
வேண்டும் “

“ஒரு வீரரைப்
பல வீரர்கள்
சூழ்ந்து கொண்டு
போர் செய்யக் கூடாது  ;
ஒரு வீரரைப்
பல வீரர்கள் சூழ்ந்து
கொண்டு அவரைக்
கொல்லக் கூடாது “

“சூரிய உதயத்துடன்
போர் துவங்க
வேண்டும்
சூரிய அஸ்தனமத்துடன்
போர் முடிய
வேண்டும் “

“மாலையில் போர்
நிறுத்தப்பட்டவுடன்
இரு பக்கத்திலும்
உள்ள வீரர்கள்
விருப்பப்பட்டால்
மனம் விட்டு
ஒருவருடன்
மற்றவர் பேசிக்
கொள்ளலாம்  ;
போரைப் பற்றியும்
பிற விஷயங்களைப்
பற்றியும்
கலந்துரையாடலாம் ; “

“ஒருவருக்கொருவர்
சந்தித்துக்
கொள்ளலாம்  ;
இந்த சந்திப்புகளில்
எல்லாம் பகைமை
உணர்ச்சியை
வெளிப்படுத்தக் கூடாது ;
அமைதி ; நட்பு ;
போன்றவை மட்டுமே
பரிமாறிக் கொள்ளப்
பட வேண்டும் ; “

“வீரர்கள் யாரேனும்
சரணடைந்தால்
அவனை பாதுகாக்கும்
பொறுப்பு அவனை
வெற்றி கொள்ளும்
வீரனுடைய கடமையாகும் “

“குருஷேத்திரப்
போருக்கான
இந்த விதிகளை
பீஷ்மர் உருவாக்கினார்  

“பீஷ்மர் உருவாக்கிய
இந்த விதிகளை
பாண்டவர்களும்
கௌரவர்களும்
ஏற்றுக் கொண்டு
குருஷேத்திரப்
போர்க்களத்திற்கு
போரிடுவதற்காக
வந்தனர் “

“பாண்டவர்கள் சார்பாக
போரிடுவதற்காக
மாவீரர்களான
துருபதன் ; விராடன் ;
திருஷ்டத்யும்னன் ;
சிகண்டி ; சாத்யகி ;
ஆகியோர் இருந்தனர் “

“கெளரவர்கள் சார்பாக
போரிடுவதற்காக
பீஷ்மர்  ;
துரோணச்சாரியார் ;
கிருபாச்சாரியார் ;
வத்ச்சான் ;
சால்யன் ; ஜயத்ரதன் ;
சுதக்‌ஷிணன் ;
கிருதவர்மா ;
அஸ்வத்தாமன் ;
கர்ணன் ;
சகுனி ; பாலிகா ;
ஆகியோர் இருந்தனர் “

“கிருஷ்ணனின்
தமையனாராகிய
பலராமரும் ;
தேவி ருக்மணியின்
சகோதரர்
ருக்மியையும் ;
தவிர்த்து
பாரத நாட்டின்
எல்லா வீரர்களும்
குருஷேத்திரத்தில்
நடக்கவிருக்கும்
மாபெரும் போரில்
பங்கு கொள்வதற்காக
தயாராக இருந்தனர் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 28-04-2020
//////////////////////////////////////////