April 08, 2020

பரம்பொருள்-பதிவு-182


             ஜபம்-பதிவு-430
           (பரம்பொருள்-182)

கிருஷ்ணன்  :
“பீமா !
அரவானுடைய
தலையை
வெட்ட முடியாது
என்று தர்மர்
சொல்லி விட்ட
காரணத்தினால்
அந்த கடமையை
நிறைவேற்ற
வேண்டிய மிகப்
பெரிய பொறுப்பு
பஞ்ச பாண்டவர்களில்
இரண்டாவதாக
இருக்கும் உன்னிடம்
ஒப்படைக்கப்
பட்டிருக்கிறது “  

“உன்னிடம்
ஒப்படைக்கப்
பட்டிருக்கும் கடமையின்
தன்மையை உணர்ந்து
அந்தக் கடமையை
திறம்படச் செய்வாய்
என்று எதிர்பார்க்கிறேன்  ;
உன்னுடைய
கடமையிலிருந்து
நீ தவற மாட்டாய்
என்று நினைக்கிறேன் ;”

“பஞ்ச
பாண்டவர்களில்
நீ தான்
தைரியசாலியா
இருப்பவன் ;
ஒரு விஷயத்தில்
உண்மை இருக்கிறது
என்பதை உணர்ந்து
விட்டால்
எதைப் பற்றியும்
கவலைப்படாமல்
அந்த விஷயத்திற்காக
குரல் கொடுக்கக்
கூடியவனாக
இருப்பவன் ;
சிக்கலாக
இருக்கக் கூடிய
எந்த ஒரு
விஷயத்தையும்
கவலைப் படாமல்
துணிந்து செய்யக்
கூடியவனாக இருப்பவன் ;”

“இத்தகைய சிறப்பு
வாய்ந்த பல்வேறு
உயர்ந்த தன்மைகளைக்
கொண்டவனாக - நீ
இருப்பதால்
உன்னால் கண்டிப்பாக
அரவானுடைய
தலையை
வெட்ட முடியும் ;
அரவானுடைய
தலையை
வெட்டுவதற்கு
தயாராக இருக்கிறாயா ?
பீமா - நீ இன்னும்
தயாராகவில்லையென்றால்
உன்னை தயார்
படுத்திக் கொள்”

“அரவானுடைய
தலையை வெட்டுவதற்கு
நீ தயாராகி விட்டால்
காளி தேவியின்
அருகில் சென்று
காளி தேவியின்
முன்னால்
காளி தேவியின்
கால்களுக்கு
அடியில் வைக்கப்பட்டு
இருக்கும் அந்த
வாளை போய் எடு”

( பீமன் காளி தேவி
சிலையின் முன்னால்
போய் நிற்கிறான் ;
தான் தயார்
என்பதை
அனைவருக்கும்
தெரிவிக்கும் வகையில்
காளிதேவியின்
கால்களில் இருக்கும்
வாளை
எடுத்தான் பீமன் )

“பீமா! காளிதேவியை
மனதில் நினைத்து
பாண்டவர்கள்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெற
வேண்டும் என்று
கூறிக்கொண்டே
அரவான்
தலையை வெட்டு “

“அரவானுடைய
தலையை வெட்டு
பீமா வெட்டு “

(பீமன் வாளை
எடுத்துக் கொண்டு
கண்களை மூடிக்
கொண்டு கடவுளை
தியானிக்கிறான் ;
மனதிற்குள்
மந்திரங்களைச்
சொல்லிக் கொண்டு
இருக்கிறான் ;
அவன் மந்திரம்
சொல்கிறான்
என்பதற்கு
ஆதாரமாக
அவனுடைய
உதடுகள் மட்டும்
அசைந்து
கொண்டிருந்தது ;”

“பீமன்
கண்ணைத் திறந்தான்  ;
வாளை எடுத்தான் ;
அரவான்
அருகில் சென்றான்
தரையில் முட்டி
போட்டுக் கொண்டு
இருந்த அரவான்
தன் அருகில்
வாளை வைத்துக்
கொண்டு நின்று
கொண்டிருந்த
பீமனை பார்த்தான்

தன்னுடைய இரு
கைகளாலும்
பீமனை வணங்கினான்
அரவான்
இருவருடைய
கண்களும் நேருக்கு
நேராக சந்தித்தன “

“தான் களப்பலிக்கு
தயாராக இருக்கிறேன்
என்னுடைய
தலையை வெட்டுங்கள்
என்று ஒப்புதல்
அளித்தது போல
அரவான் தன்னுடைய
தலையை குனிந்தான் “

“இவ்வளவு நேரம்
தைரியமாக
இருந்த பீமன்
அரவானின் கண்களை
நேருக்கு நேராக
சந்தித்த பிறகு
தடுமாறத்
தொடங்கினான்” )

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 08-04-2020
//////////////////////////////////////////



No comments:

Post a Comment