April 09, 2020

பரம்பொருள்-பதிவு-183


              ஜபம்-பதிவு-431
            (பரம்பொருள்-183)

“பீமனின் கைகளில்
இருந்த வாள்
நடுங்கத் தொடங்கியது ;
பயம் என்றால்
என்னவென்று தெரியாத
பீமனின் கரங்கள்
அவனையும் அறியாமல்
ஆடத் தொடங்கியது ;
பீமனுடைய உள்ளம்
தடுமாறத் தொடங்கியது ;
உள்ளத்தில் கவலை
பீறிட்டு எழுந்து
ஓடத் தொடங்கியது ;
இனம் புரியாத
கவலை சிந்தனை
முழுவதையும்
ஆக்ரமிக்கத் தொடங்கியது ;
வியர்வை பீமனின்
உடல் முழுவதும்
கொட்டத் தொடங்கியது ; “

“பீமன்
தன்னுடைய உள்ளம்
கலக்கமடைந்து
கொண்டிருப்பதைக்
கண்டான் ;
எடுத்த வாளை
அப்படியே இறக்கத்
தொடங்கினான் ;
என்னால் முடியவில்லை
என்று சொல்லிக் கொண்டே
எடுத்த வாளை
காளி தேவியின்
பாதங்களில் வைக்கத்
தொடங்கினான் ; “ 

“இதனைக் கண்ட
கிருஷ்ணன் பேசத்
தொடங்கினார் “

கிருஷ்ணன் :
“பீமா ! ஏன் எடுத்த
வாளை வைத்து விட்டாய் ;
ஏன் அரவான் தலையை
வெட்டவில்லை ;

தைரியசாலியாக இருக்கும்
நீ எப்போது முதல்
கோழையாக மாறினாய் ? “

பீமன் :
“நாளை இந்த உலகம்
என்னை கோழை என்று
சொல்லி விடக்கூடாது
என்பதற்காகத் தான்
நான் அரவானுடைய
தலையை வெட்ட வில்லை “

கிருஷ்ணன் :
“உலகம் ஏன் உன்னை
கோழை என்று
சொல்லப் போகிறது ? “

பீமன் :
“என்னை எதிரியாக
நினைத்து எனக்கு எதிரே
யார் ஆயுதம் ஏந்தி
நின்றாலும்
அவர்களுடைய
தலையை கிள்ளி
எறிந்து விடுவேன்  ;
ஆனால் அரவான் என்
முன்னால் ஆயுதம்
எதுவும் இல்லாமல்
அல்லவா நிற்கிறான் “

“ஆயுதம் இல்லாமல்
இருக்கும் அரவானுடைய
தலையை நான் வெட்டினால்
நாளை இந்த உலகம்
என்னை கோழை
என்று சொல்லாதா ? “

“நிராயுதபாணியாக
இருந்த அரவானின்
தலையை வெட்டியது
இவன் தான்  ;
இவன் ஒரு கோழை
என்று நாளை இந்த உலகம்
என்னை வசை பாடாதா ? “

“அது மட்டுமல்ல
அரவானின் பார்வை
என்னுடைய தைரியத்தை
பலமிழக்கச் செய்கிறது “

“ஆயுதம் இல்லாமல்
நிராயுதபாணியாக
இருக்கும் என்னுடைய
தலையை வெட்டுவதற்கு
உங்களுக்கு எப்படி
மனது வந்தது ;
இது தான் உங்களுடைய
வீரமா ? - என்று என்னை
கேள்வி கேட்பது போல
இருக்கிறது அரவான்
என்னைப் பார்த்த பார்வை “

“இந்த பாலகனுடைய
தலையை வெட்டுவதில் தான்
உங்களுடைய வீரம்
அடங்கி இருக்கிறதா என்று
என்னை கேலி செய்வது
போல் இருக்கிறது - அரவான்
என்னைப் பார்த்த பார்வை  

“அதனால் தான்
ஆயுதம் ஏதும் இல்லாமல்
நிராயுதபாணியாக
இருக்கும் அரவானின்
தலையை என்னால்
வெட்ட முடியவில்லை ;

கிருஷ்ணன்  :
“போரில் நிராயுதபாணியாக
நின்று கொண்டு இருப்பவரை
கொல்வது யுத்த தர்மத்திற்கு
எதிராக இருக்கலாம் ஆனால்
இது போர் கிடையாதே
களப்பலி தானே  

பீமன்  :
“இரண்டும் ஒன்று தான் “

“போர் என்றாலும்
களப்பலி என்றாலும்
அதனுடைய முடிவு
எதிரே இருப்பவருடைய
உயிரை எடுப்பது தானே  

“அதனால் தான்
நான் சொல்கிறேன்
நிராயுதபாணியாக
இருக்கக் கூடிய
அரவானுடைய தலையை
என்னால் வெட்ட
முடியாது என்று “

கிருஷ்ணன்  :
“அரவானுடைய தலையை
வெட்ட முடியாது என்றால்
வெட்ட முடியாது என்று
சொல்லி விட்டுப் போ !
அதை விடுத்து ஏன்
இப்படி சுற்றி வளைத்து
பேசிக் கொண்டிருக்கிறாய் “

(“பீமன் அமைதியாக
நின்று கொண்டிருக்கிறான் “)

கிருஷ்ணன்  
“அர்ஜுனா  !
அடுத்து நீ தான் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 09-04-2020
//////////////////////////////////////////


No comments:

Post a Comment