May 09, 2020

பரம்பொருள்-பதிவு-229


               ஜபம்-பதிவு-477
             (பரம்பொருள்-229)

“நம்முடைய
உடலில்
நம்முடைய
சிரசுக்குள்
கடவுள் எந்த
இடத்தில்
இருக்கிறான் ?"

“கடவுளை
அடையக்கூடிய
வழி எது ? "

“கடவுளை
அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது
எது? "

“என்பதை
உணர
முடியாமல்
இருப்பவர்கள்
கடவுளுடன்
இணைந்து
தனக்கு
தேவையானதை
பெற்றுக்
கொண்டு
தன்னுடைய
ஆசையை
பூர்த்தி செய்து
கொள்ள
வேண்டும்
என்ற
உயர்ந்த
நோக்கத்துடன்
இந்த
மூன்று
விஷயங்களையும்
அடிப்படையாக
வைத்து
இந்துமதக்
கோயில்கள்
அன்று முதல்
இன்று வரை
கட்டப்பட்டு
வருகின்றன “

“இந்த மூன்று
விஷயங்களை
அடிப்படையாக
வைத்து
உலகில்
உள்ள
அனைத்து
இந்து மதக்
கோயில்களும்
கட்டப்பட்டு
இருந்தாலும்
முக்கியமான
மூன்று
விஷயங்களான

ஒன்று :
சக்தியை
உற்பத்தி
செய்தல்

இரண்டு :
சக்தியை
குவித்து
வைத்தல்

மூன்று :
சக்தியை
பரிமாற்றம்
செய்தல்

ஆகிய மூன்று
செயல்களை
சூட்சுமமாக
தன்னுள்
கொண்டு
இந்துமதக்
கோயில்கள்
செயல்பட்டு
இயங்கிக்
கொண்டு
இருக்கின்றன “

“உலகில்
உள்ள
அனைத்து
இந்து மதக்
கோயில்களையும்
எடுத்துக்
கொண்டால்
இந்துமதக்
கோயில்கள்
ஒவ்வொன்றும்
ஒரு குறிப்பிட்ட
சக்தியை
உற்பத்தி
செய்து ;
அந்த
சக்தியை
குவித்து
வைத்து ;
அந்த
சக்தியை
பரிமாற்றம்
செய்து
கொண்டிருக்கும் ;
மிகவும்
சக்தி
வாய்ந்த
சக்தி
மையங்களாகத்
திகழ்ந்து
கொண்டு
இருக்கின்றன ;
என்பதைத்
தெரிந்து
கொள்ளலாம்”

(1)சக்தியை
உற்பத்தி
செய்தல் :

(அ)பிரஞ்சத்தின்
மூலம்
பெறப்படும்
சக்தி

(ஆ)கடவுள்
சிலைகளின்
மூலம்
பெறப்படும்
சக்தி

ஆகிய
இரண்டு
முறைகளின்
மூலம்
பெறப்படும்
சக்தியானது
கோயிலுக்குள்
உற்பத்தி
செய்யப்படுகிறது

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 09-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment