ஜபம்-பதிவு-479
(பரம்பொருள்-231)
“நாம்
கடவுளை
வணங்குவதற்காக
கோயிலுக்குள்
செல்லும்
போது
ஒவ்வொருவருடைய
ஆன்ம
வளர்ச்சிக்கேற்ப
கோயிலுக்குள்
இருக்கும்
சக்தியை
பெற்றுக்கொண்டோ
(அல்லது)
தங்களுடைய
ஆன்ம சக்தியை
கோயிலுக்கு
அளித்துக்
கொண்டோ
செல்வர் “
“ஆன்ம
வளர்ச்சி
குறைவாக
இருப்பவர்கள்
தங்களுக்கு
தேவையான
சக்தியை
கோயிலில்
இருந்து
பெற்றுக்
கொண்டு
செல்வர் “
“ஆன்ம
வளர்ச்சி
அதிகமாக
இருப்பவர்கள்
தங்கள்
சக்தியை
அந்த
கோயிலுக்கு
அளித்து
விட்டு செல்வர்
“
“ஆகம
சாஸ்திரத்தின்படி
கட்டப்பட்ட
இந்து மதக்
கோயில்கள்
என்பவை
சக்தியின்
களமாக
இருக்கும்படி
உருவாக்கப்பட்டவை
“
“சக்தியை
சேமித்து
வைத்துக்
கொண்டு
இயங்கிக்
கொண்டிருப்பவை
“
“சக்தியை
அளித்தும்
ஏற்றும்
செயல்பட்டுக்
கொண்டிருப்பவை”
“அந்தக்
காலம் முதல்
இந்தக்
காலம் வரை
இந்து மதக்
கோயில்கள்
இப்படித்தான்
இயங்கிக்
கொண்டிருக்கின்றன”
“இந்து மதக்
கோயில்களில்
500 ஆண்டுகள்
முதல்
1000
ஆண்டுகளுக்கும்
மேலாக
சக்தியை
உற்பத்தி
செய்தல் ;
சக்தியை
குவித்து
வைத்தல் ;
சக்தியை
பரிமாற்றம்
செய்தல் ;
என்ற மூன்று
செயல்கள்
நடைபெற்று
சக்தியின்
மிகப்பெரிய
களமாக
இந்து மதக்
கோயில்கள்
உருவாக்கி
வைக்கப்
பட்டிருக்கின்றன
“
“மேலும்
கடவுள்
சிலைகளில்
பூஜைகளும்,
மந்திரங்களும்
யந்திரங்களும்
தந்திரங்களும்
செயல்படுத்தப்பட்டு
சக்தியின்
களமாக
உருவாக்கி
வைக்கப்
பட்டிருக்கின்றன
“
“அந்த
சக்தி களத்தில்
சக்தி
குறைந்தவர்கள்
சென்றால்
அவர்கள்
அந்த
சக்தி களத்தில்
இருந்து
தங்களுக்கு
தேவையான
அளவிற்கு
அந்த சக்தியை
ஆத்மாவும்,
உடலும்
ஏற்றும்
கொள்ளும்
வகையில்
கிரகித்துக்கொண்டு
செல்லும்
வகையில்
இந்து மதக்
கோயில்கள்
அமைக்கப்
பட்டிருக்கின்றன
“
“தவம்
செய்பவர்கள்
;
தியானம்
செய்பவர்கள்
;
மந்திரம்
சொல்பவர்கள்
;
ஆகியோர்
இந்த சக்தி
களத்திற்குள்
வரும் போது
அவர்கள்
தங்களுடைய
நல்ல சக்தியை
இந்த சக்தி
களத்திற்குள்
விட்டு விட்டு
சென்று
இருப்பார்கள்
“
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
09-05-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment