July 19, 2020

அறிய வேண்டியவை-பதிவு-104


              ஜபம்-பதிவு-596
         (அறிய வேண்டியவை-104)

துரியோதனன் :
“தர்மத்தின்படி சண்டை
நடைபெறுவதற்கு
நீங்கள் ஒப்புக் கொண்டு
இருக்கிறீர்கள்
பீமனும் தர்மத்தின்படி
ஒருவருக்கொருவர்
நேருக்கு நேராக
நின்று கொண்டு
சண்டையிடுவதற்கு
ஒப்புக்
கொண்டிருக்கிறான்
கொடுத்த வாக்கை
நீங்கள் காப்பாற்றுவீர்கள்
என்று நினைக்கிறேன்
கொடுத்த வாக்கை
காப்பாற்றாமல்
அதர்மத்தின் படி
செயல்பட்டு பலபேர்
ஒன்றாகச் சேர்ந்து
தாக்கினாலும் நான்
தயாராகத் தான்
இருக்கிறேன்
தர்மத்தின் படி
செயல்படப் போகிறீர்களா
அதர்மத்தின் படி
செயல்படப் போகிறீர்களா
என்று பார்ப்போம் “

தர்மர் :
“தர்மத்தையும்
அதர்மத்தையும் உனக்கு
தேவைப்படும் சமயத்தில்
தான் பயன்படுத்திக்
கொள்வாயா துரியோதனா?”

“தனியாக இருக்கும்
என்னுடன் ஒருவர்
மட்டுமே நேருக்கு
நேராக சண்டையிட
வேண்டும் அது தான்
தர்மம் என்று
சொல்லும் நீ
அன்று பல பேர்
ஒன்றாகச் சேர்ந்து
சண்டையிட்டு
அபிமன்யுவை
கொன்றீர்களே அது
மட்டும் எப்படி
தர்மமாகும்”

“நான் ஏற்கனவே
உனக்குக் கொடுத்த
வாக்குறுதியின்படி
இந்த கதாயுத
சண்டையானது உனக்கும்
பீமனுக்கும் இடையே
நேருக்கு நேராகத்
தான் நடக்கும்
மற்ற அனைவரும்
பார்வையாளர்களாக
இருந்து நடக்கும்
சண்டையினைப் பார்த்துக்
கொண்டிருப்போம்”

(தனக்கு அளிக்கப்பட்ட
தங்க கவசத்தையும்
கிரீடத்தையும்
துரியோதனன்
அணிந்து கொண்டான்
துரியோதனனும்
பீமனும் நேருக்கு நேராக
நின்று கதாயுதச் சண்டை
புரிய தயாராகி விட்டனர் )

துரியோதனன் :
“எங்களுடைய
கதாயுத சண்டைக்கு
யார் நடுவராக
இருக்கப் போகிறார்கள்?”

பீமன் :
“நடைபெறப் போகும்
கதாயுதச் சண்டையில்
ஒன்று நான் சாக
வேண்டும் இல்லை
நீ சாக வேண்டும்
யார் உயிரோடு
இருக்கிறாரோ அவரே
வெற்றி பெற்றவராக
கருதப்படுவார்
அப்படி இருக்கும் போது
இந்த சண்டையில்
நடுவர் எதற்கு?”

துரியோதனன் :
“கதாயுதப் போரில்
இறப்பது என்பது
முக்கியமில்லை
இறப்பவர்கள் எப்படி
இறந்தார்கள் என்பது
தான் முக்கியம் அதை
இந்த உலகம் அறிந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காகத் தான்;

“கதாயுதப் போரில்
வகுக்கப்பட்ட
விதிமுறைகளைப்
பின்பற்றித் தான் ஒருவர்
இன்னொருவருடன்
சண்டையிட்டாரா என்பதை 
இந்த உலகம் அறிந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காகத் தான்;

“கதாயுதப் போரில்
வகுக்கப்பட்ட
விதிமுறைகளைப்
பின்பற்றித் தான் ஒருவர்
இன்னொருவரைக்
கொன்றாரா என்பதை
இந்த உலகம் அறிந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காகத் தான்;

“கதாயுதப் போரில்
விதிகள் சரியான விதத்தில்
பயன்படுத்தப்பட்டதா
என்பதை
இந்த உலகம் அறிந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காகத் தான்”

“நான் நடுவர் வேண்டும்
என்று கேட்டேன்”

பீமன் :
“நம்முடைய கதாயுத
சண்டைக்கு நடுவர்
வேண்டும் என்று நீ
ஆசைப்பட்டால் வாசுதேவ
கிருஷ்ணனையே நடுவராக
வைத்துக் கொள்வோம் “

துரியோதனன் :
“வாசுதேவ கிருஷ்ணன்
மேல் எனக்கு
நம்பிக்கையுமில்லை
அவரை நடுவராக்குவதை
நான் விரும்பவுமில்லை “

“வாசுதேவ கிருஷ்ணன்
என்னுடைய எதிரிகள்
கூடவே இருப்பவன்
எதிரிகளுக்காக சூழ்ச்சி
வேலை செய்பவன்
தர்மத்தை காக்கிறேன்
என்று சொல்லிக் கொண்டு
அதர்மத்தைச் செய்து
கொண்டிருப்பவன்
எப்போதும் பாண்டவர்கள்
சார்பாக ஒரு
தலைப் பட்சமாகவே
பேசுபவன்
நியாயம் எது என்று
தெரியாமல் பேசுபவன்
தான் சொல்வது தான்
நியாயம் என்று நினைத்துக்
கொண்டு பேசுபவன்
தான் சொல்வதைத்
தான் நியாயம் என்று
அனைவரும் ஏற்றுக்
கொள்ள வேண்டும்
என்று துடிப்பவன்
பாரபட்சமாக
நடந்து கொள்பவன்
பாண்டவர்களைக்
காத்துக் கொண்டிருப்பவன்”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 19-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment