July 19, 2020

அறிய வேண்டியவை-பதிவு-106


              ஜபம்-பதிவு-598
        (அறிய வேண்டியவை-106)

கிருஷ்ணன் :
“பெரியண்ணா
துரியோதனன்
சம்மதம் தெரிவித்து
விட்டால் அனைரும்
சம்மதம் தெரிவித்து
விட்ட மாதிரி தான்
கதாயுத சண்டைக்கு
நீங்கள் தான் நடுவராக
இருக்க வேண்டும்
எங்களுடைய
விருப்பத்தை
நீங்கள் தான்
நிறைவேற்ற வேண்டும் “

பலராமர் :
“அப்படியே ஆகட்டும்
கிருஷ்ணா”

துரியோதனன் :
(தர்மரைப் பார்த்து
பேசுகிறான்)

“இந்த இடம் முழுவதும்
இரத்த ஆறாக
இருக்கிறது
சகதி அதிக அளவில்
இருக்கிறது - இந்த
இடம் சண்டை
செய்வதற்கு ஏற்ற
இடம் இல்லை
சண்டை செய்வதற்கு
ஏற்ற இடம்
புகழ் பெற்ற
சமந்த பஞ்சகம்
என்ற இடம்
சமந்த பஞ்சகம்
என்ற இடம்
அந்த இடத்தைப்
புனிதமான இடம்
என்று கூறுவார்கள்
சமந்த பஞ்சகம்
என்ற இடத்திற்கு
சென்று அங்கு
சண்டையிடுவோம்
வாருங்கள் “

பலராமர் :
“சமந்த பஞ்சகம்
இடத்தில் இறந்தால்
இறந்தவர் நிச்சயமாக
சுவர்க்கம் போவார்கள்
நாம் அங்கு செல்வோம் “

(அனைவரும்
தங்கள் தங்கள்
வாகனங்களில்
ஏறிச் சென்றார்கள்
துரியோதனன்
வேட்டையாடக்
கிளம்பும் ஒரு
சிங்கத்தைப் போல
தன்னுடைய
கதாயுதத்தைத்
தன்னுடைய தோளில்
தானே சுமந்து கொண்டு
தன்னந்தனியாக
சிங்கமென நடந்து
சென்று கொண்டிருந்தான்

குருஷேத்திரத்திற்கு
மேற்கு முகமாகவும்
சரஸ்வதி நதிக்குத்
தென் புறமாகவும்
அமைந்துள்ள
சமந்த பஞ்சக மடுவின்
கரையில் உள்ள
புனிதமான இடத்தை
அனைவரும்
அடைந்தார்கள்)

(துரியோதனன்
பலராமரிடம் ஆசி
பெற வருகிறான்
பலராமரின் காலில்
விழுந்து வணங்குகிறான்)

பலராமர் :
“துரியோதனா நீ
என்னுடைய
பிரதம சிஷ்யன்
உன் மேல் எனக்கு
தனிப்பட்ட அன்பு
என்றுமே எனக்கு உண்டு “

“கதாயுத சண்டை
நீ போடும்
போதெல்லாம்
உன்னுடைய
திறமையைக் கண்டு
நான் வியந்து
இருக்கிறேன்
உன்னுடைய
வேகத்தைக்
கண்டு நான்
மலைத்திருக்கிறேன்
உன்னுடைய
பலத்தைக்
கண்டு நான்
பூரிப்படைந்திருக்கிறேன்
இருந்தாலும்
துரியோதானா
நீ என்னுடைய
பிரதம சிஷ்யன்
என்றாலும்
உன் மேல் எனக்கு
தனிப்பட்ட அன்பு
உண்டு என்றாலும்
நீ வெற்றி பெற
வேண்டும் என்ற
ஆசியை என்னால்
வழங்க முடியாது
துரியோதனா ?”

துரியோதனன் :
“தாங்கள் என்னுடைய
கதாயுதச் சண்டையை
காண வந்ததை நான்
பெரும் பாக்கியமாகக்
கருதுகிறேன் – தாங்கள்
வந்ததே எனக்கு
மகிழ்ச்சி “

(பீமன் பலராமரை
வணங்குகிறான்
பலராமர் பீமனை
ஆசிர்வதிக்கிறார்)

பலராமர் :
“பீமா இருவருமே
என்னுடைய
நம்பிக்கைக்குரிய சீடர்கள்
இருவருமே
என்னுடைய
அன்பிற்குரிய சீடர்கள்
இருவருமே
கதாயுத சண்டை
போடுங்கள்
திறமை யாருக்கு
இருக்கிறதோ அவர்
வெற்றி பெறுவார்”

(பஞ்ச பாண்டவர்கள்
பலாரமர் கிருஷ்ணன்
ஆகியோர் சுற்றி
நின்று வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்க
துரியோதனனுக்கும்
பீமனுக்கும்
கடுமையான
கதாயுதச் சண்டை
நடந்து கொண்டிருந்தது
கதாயுதச் சண்டையில்
துரியோதனனின்
கையே ஓங்கி இருந்தது
துரியோதனனின்
திறமையே
வெளிப்பட்டுக்
கொண்டிருந்தது
துரியோதனனின்
பலத்திற்கு
ஈடுகொடுக்க முடியாமல்
பீமன் தடுமாறிக்
கொண்டிருந்தான்)

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 19-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment