August 16, 2020

திருக்குறள்-ஒத்தது -பதிவு-1

 

திருக்குறள்-ஒத்தது

-பதிவு-1

 

“ஒத்தது அறிவான்

உயிர்வாழ்வான்

மற்றையான்

செத்தாருள்

வைக்கப்படும்”

 

------திருக்குறள்

------திருவள்ளுவர்

 

“இந்த உலகத்தில்

வாழும் அதிகமான

மக்களால்

உச்சரிக்கப்படும்

இரண்டு வார்த்தைகள்”

 

ஒன்று   : சுதந்திரம்

இரண்டு : விடுதலை

 

“சுதந்திரம் என்றால்

என்ன என்பதைப்

பற்றி ஓரளவிற்கு

மக்கள் தெரிந்து

வைத்திருந்தாலும்

சுதந்திரம்

என்பதற்கான

முழுமையான

பொருள்

என்ன என்று

தெரியாமல் தான்

பலபேர் இன்றும்

இந்த உலகத்தில்

வாழ்ந்து கொண்டு

இருக்கிறார்கள்”

 

“சுதந்திரத்தைப் பற்றி

ஓரளவிற்கு

தெரிந்து

வைத்திருக்கும்

மக்கள்

விடுதலை

என்றால் என்ன

என்பதைப்

பற்றி தெரியாமல்

தான் இருக்கின்றனர்”

 

“சுதந்திரத்திற்கும்

விடுதலைக்கும்

சிறிதளவு

வித்தியாசம்

தான் இருக்கிறது”

 

“ஏதேனும் ஒன்றின்

கட்டுப்பாட்டிற்குள்

இருந்து கொண்டு

செயல்பட

வேண்டும்

அவ்வாறு

செயல்பட்டால்

அதற்குப் பெயர்

சுதந்திரம்“

 

“எந்த ஒன்றின்

கட்டுப்பாட்டிற்குள்ளும்

இல்லாமல் தனித்து

செயல்பட வேண்டும்

எந்த

ஒன்றிலிருந்து

பிரிந்து

வந்ததோ

அந்த ஒன்றில்

மீண்டும்

இணையாமல்

இருக்க வேண்டும்

நிச்சயமான

தன்மை

நிலவ வேண்டும்

நிச்சயமற்ற

தன்மை

நிலவக் கூடாது

அவ்வாறு

இருந்தால் மட்டுமே

அதற்குப் பெயர்

விடுதலை”

 

1,மகன் :

“ஒரு பெரிய

பணக்காரர் பல

கம்பெனிகளை 

உண்டாக்கி வைத்து

வியாபாரம்

செய்து வருகிறார்

அந்த கம்பெனிகளை

நிர்வகிக்கும்

பொறுப்பை

தன்னுடைய ஒரே

மகனிடம்

ஒப்படைத்து

இருக்கிறார்

மகனும் தந்தை

தன்னிடம்

ஒப்படைத்த

கம்பெனியை

திறம்பட எவ்வித

குறைபாடும்

இல்லாமல்

நடத்தி வருகிறார்

கம்பெனியை

வைத்துக் கொண்டு

எப்படி வியாபாரம்

செய்வது என்று

அறிவுரை

சொல்வது மட்டுமே

தந்தையின் வேலை

தந்தையின்

அறிவுரையைக் கேட்டு

அதனைச்

செயல் படுத்துவது

மகனின் வேலை

தந்தையின்

கட்டுப்பாட்டிற்குள்

இருந்து கொண்டு

மகன்

செயல்படுகிறான்

அதனால்

இதற்குப் பெயர்

சுதந்திரம்”

 

“தந்தையை

விட்டு மகன்

பிரிந்து சென்று

கம்பெனியை

வைத்துக் கொண்டு

வியாபாரம்

செய்கிறான்

இப்போது மகன்

தந்தையின்

கட்டுப்பாட்டிற்குள்

இல்லை

மகன் தந்தையின்

அறிவுரையை

கேட்டு நடக்க

வேண்டிய

அவசியம் இல்லை

மகன் இங்கே

யாருடைய

கட்டுப்பாட்டிலும்

இல்லை - மகன்

எந்த ஒன்றின்

கட்டுப்பாட்டிலும்

இல்லை

கம்பெனிகளை

வைத்துக் கொண்டு

எப்படி வியாபாரம்

செய்வது

என்பதைப் பற்றி

மகன் தனியாக

சிந்திக்கிறான்

அதனை தனியாக

இருந்து

செயல்படுத்துகிறான்”

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------16-08-2020

/////////////////////////////////////////

No comments:

Post a Comment