August 17, 2020

திருக்குறள்-ஒத்தது -பதிவு-2


 திருக்குறள்-ஒத்தது

-பதிவு-2


“எந்த ஒன்றின் 

கட்டுப்பாட்டிற்குள்ளும் 

இல்லாமல் மகன் 

செயல்பட்டாலும் 

அதனை விடுதலை 

என்று சொல்ல 

முடியாது

ஏனென்றால் எந்த 

சமயத்திலும் மகன் 

தன் தந்தையுடன் 

இணைந்து 

தன்னுடைய 

தந்தையின் 

கட்டுப்பாட்டிற்குள் 

இருந்து 

செயல்படலாம் 

இத்தகைய ஒரு 

நிச்சயமற்ற

தன்மை இங்கே 

நிலவுகிறது”


“மகன் தந்தையுடன் 

சேரமாட்டான் என்று 

நிச்சயமாக 

சொல்லமுடியாது 

அதாவது 

இங்கே மகன் 

தந்தையுடன் 

சேர மாட்டான் என்று 

நிச்சயமான தன்மை 

நிலவவில்லை 

மகன் தந்தையுடன் 

எந்த நேரத்திலும் 

சேரக்கூடிய 

வாய்ப்பு 

இருக்கிறது என்ற 

நிச்சயமற்ற

தன்மையே 

நிலவுகிறது”


“ஆகவே மகன் 

தந்தையை விட்டு 

பிரிந்து சென்று 

தனியாக 

கம்பெனியை 

வைத்துக் கொண்டு 

வியாபாரம் 

செய்வதை 

விடுதலை என்று 

சொல்ல முடியாது”


2.கைதி :

“கைதி ஒருவன் 

சிறைக்குள் 

இருக்கிறான்

கைதி சிறைக்குள் 

இருக்கும் வரை 

சிறையின் 

கட்டுப்பாட்டிற்குள் 

இருந்து 

செயல்படுகிறான் 

அதனால் 

இதற்குப் பெயர் 

சுதந்திரம் “


“சிறையில் இருந்து 

வெளியில் வந்து 

விட்ட கைதி 

எந்த ஒன்றின் 

கட்டுப்பாட்டிற்குள்ளும் 

இல்லாமல் தனித்து 

செயல்பட்டால் 

அதற்குப் பெயர் 

விடுதலை

அதனால் தான் 

சிறையில் இருக்கும் 

கைதி வெளியில் 

வந்தால் விடுதலை 

ஆனான் என்கிறோம்”


“சிறையிலிருந்து 

வெளியே 

வரும் கைதி 

விடுதலை ஆகி 

வருகிறான் என்று 

சொல்வதற்கு 

காரணம் 

அவன் மீண்டும் 

ஒரு தவறை 

செய்து அந்த 

சிறைக்குள் 

செல்லக்கூடாது என்ற 

காரணத்திற்காகத் தான்

அதாவது 

சிறையிலிருந்து

வெளியே வந்தவன் 

மீண்டும் அந்த 

சிறைக்குள் 

செல்லக் கூடாது 

என்பதற்காகதத் 

தான் விடுதலை 

என்கிறோம்”


“கைதியானவன் 

தனித்து 

செயல்படக்கூடிய

தன்மையைப் 

பெற்றிருக்கிறான் என்ற 

காரணத்திற்காகத் தான் 

கைதியானவனை 

விடுதலை ஆகி 

விட்டான் 

என்கிறோம் 

மீண்டும் சிறைக்கு 

வரக்கூடாது என்ற 

காரணத்திற்காகத் தான் 

விடுதலை 

ஆகி விட்டான் 

என்கிறோம் “


“ஆனால் 

சிறையிலிருந்து 

வெளியே வரும் 

பல பேர் மீண்டும் 

சிறைக்குள் வந்து 

அந்த சிறையின் 

கட்டுப்பாட்டிற்குள் 

இருந்து 

செயல்படுவதால் 

சுதந்திரம் 

அடைகின்றனர் 

சிறையிலிருந்து 

வெளியே வரும் 

கைதிக்கு விடுதலை 

அடைந்தான் என்ற 

வார்த்தையைப் 

பயன்படுத்தக் கூடாது 

சுதந்திரம் 

அடைந்தான் 

என்று தான் 

சொல்ல வேண்டும் “


“கைதி மீண்டும் 

சிறைக்கு 

போகாமல் 

இருந்தால் 

விடுதலை 

என்ற வார்த்தையைப் 

பயன்படுத்தலாம்

ஆனால் 

கைதி மீண்டும் 

சிறைக்கு போகாமல் 

இருப்பான் என்று 

சொல்ல முடியாது

கைதி எப்போது 

வேண்டுமானாலும் 

சிறைக்கு 

போகலாம் 

என்ற 

நிச்சயமற்ற தன்மை 

நிலவுகிறது

கைதி சிறைக்கு 

போக மாட்டான் 

என்ற 

நிச்சயமான தன்மை 

நிலவவில்லை”


-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்


-----------16-08-2020

////////////////////////////

No comments:

Post a Comment