August 17, 2020

திருக்குறள்-ஒத்தது -பதிவு-3


 திருக்குறள்-ஒத்தது

-பதிவு-3


“கைதி 

சிறையிலிருந்து

வெளியே வந்து 

தனித்து 

செயல்பட்டாலும் 

எப்போது 

வேண்டுமானாலும் 

சிறைக்கு 

போகக்கூடிய 

வாய்ப்பு இருக்கின்ற 

காரணத்தினால் 

கைதி 

விடுதலை ஆகி 

வெளியே வந்தான் 

என்று 

சொல்லக்கூடாது

கைதி 

சிறையிலிருநது 

சுதந்திரம் ஆகி 

வெளியே வந்தான் 

என்று தான் 

சொல்ல வேண்டும்”


3 .உயிர்:

“இறந்தவரை 

இயற்கை 

எய்தினார் 

என்கிறோம்

ஆன்மா உடலை 

விட்டுப் பிரிந்ததால் 

ஆன்மாவானது 

விடுதலை 

அடைந்து விட்டது 

என்கிறோம் “


“உடலை 

இயற்கை 

எய்தியது 

என்றும்

ஆன்மாவை 

விடுதலை 

அடைந்து விட்டது 

என்றும் 

சொல்கிறோம்”


“இயற்கையில் 

பிறந்த 

இந்த உடலானது 

இயற்கையிலிருந்து 

நழுவி வாழ்ந்து 

முடித்து 

விட்ட பிறகு 

இயற்கையோடு 

இயற்கையாக 

ஒன்றாக

இணைந்து 

மீண்டும் பிறக்க 

முடியாத 

நிலையை 

அடைவதைத் தான் 

இயற்கை 

எய்தினார் 

என்கிறோம் “


“உடலிலிருந்து 

ஆன்மா 

பிரிந்து விட்டது 

அதாவது ஆன்மா 

விடுதலை 

அடைந்து விட்டது 

என்று சொன்னால் 

உடலிலிருந்து 

பிரிந்து விட்ட 

ஆன்மாவானது 

உடலிலிருந்து 

தன்னை 

முழுவதுமாக 

பிரித்து கொண்டு 

விட்டது 

என்று பொருள்

உடலுடன் 

தனக்கிருந்த 

உறவை 

அறுத்துக் 

கொண்டு விட்டது 

என்று பொருள்

அந்த ஆன்மா 

தன்னுடைய 

கர்மவினைகளை 

கழித்து விட்டது 

என்று பொருள்

அந்த ஆன்மா 

தன்னுடைய 

பிறப்பின் 

சுழற்சியை 

நிறுத்தி விட்டது 

என்று பொருள்

உடலுடன் அந்த 

ஆன்மாவானது 

மீண்டும் சேராது 

என்று பொருள்

மீண்டும் அந்த 

ஆன்மாவானது 

பிறப்பெடுக்க 

வேறு ஒரு 

உடலைத் 

தேடாது 

என்று பொருள் 

மீண்டும் அந்த 

ஆன்மாவிற்கு 

பிறப்பு 

என்ற ஒன்று 

கிடையாது 

என்று பொருள்

மீண்டும் அந்த 

ஆன்மா பிறக்காது 

என்று பொருள்

இத்தகைய ஒரு 

நிலை இருந்தால் 

மட்டுமே 

இயற்கை 

எய்தினார் 

என்று சொல்ல 

வேண்டும்”


“இறந்த 

அனைவரையுமே 

இயற்கை 

எய்தினர் என்று 

சொல்லக்கூடாது

ஏனென்றால் 

இறந்தவர்களின் 

ஆன்மாவானது 

அதில் 

பதிந்துள்ள 

கர்மாக்களுக்கு 

ஏற்றபடி 

பிறப்பெடுக்க 

வாய்ப்பு இருக்கிறது

இறந்தவர்களின் 

ஆன்மாவானது 

மீண்டும் 

பிறக்காது என்று 

நிச்சயமாக 

சொல்லக்கூடிய 

நிச்சயமான நிலை 

நிலவவில்லை

இறந்தவர்களின் 

ஆன்மாவானது 

மீண்டும் எப்போது 

வேண்டுமானாலும் 

பிறக்கலாம் 

என்ற 

நிச்சயமற்ற தன்மை 

நிலவுவதால் 

இறந்தவர்களை 

இயற்கை 

எய்தினார் 

என்றும் 

அவருடைய 

ஆன்மா விடுதலை 

அடைந்து விட்டது 

என்றும் 

சொல்லக் கூடாது”


-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்


-----------16-08-2020

///////////////////////////


No comments:

Post a Comment