திருக்குறள்-ஒத்தது
-பதிவு-4
4. பழம் :
“மரத்தின்
கிளையில் ஒரு
மாங்காயானது
ஒரு காம்பைப்
பிடித்துத்
தொங்கிக் கொண்டு
இருக்கிறது
அந்த
மாங்காயானது
மரத்தினுடைய
கட்டுப்பாட்டிற்குள்
இருந்து
தனக்கு
தேவையானவற்றைப்
பெற்றுக் கொண்டு
செயல்படுகிறது
இதனை
சுதந்திரம்
என்கிறோம்”
“மரத்திலிருந்து
பிரிந்து சென்ற
மாங்காயானது
அந்த
மரத்திலிருந்து
விடுதலை
பெறுகிறது
அதாவது அந்த
மாங்காயானது
மரத்துடன்
மீண்டும்
இணைய முடியாது
அந்த
மாங்காயானது
மீண்டும்
அந்த மரத்தில்
இணைவதற்கு
வாய்ப்பே இல்லை
அந்த
மாங்காயானது
தனித்து
இயங்கக்கூடிய
தன்மையைப் பெற்று
மாங்காயானது
மாம்பழமாகிறது “”
“மரத்திலிருந்து
பிரிந்து சென்ற
மாங்காயானது
மீண்டும்
மரத்தில் சென்று
இணைவதற்கு
வாய்ப்பே
இல்லாத
காரணத்தினாலும்
மாங்காயானது
தனித்து
இயங்கக் கூடிய
தன்மை
பெற்றிருப்பதாலும்
மரத்திலிருந்து
பிரிந்த
மாங்காயை
விடுதலை
அடைந்தது
எனலாம்”
“மரத்திலிருந்து
பிரிந்து சென்ற
மாங்காயானது
மீண்டும்
இணையாது
என்ற
நிச்சயமான நிலை
நிலவுகின்றது
என்ற
காரணத்தினாலும்
மரத்திலிருந்து
பிரிந்து சென்ற
மாங்காயானது
மரத்தின்
கட்டுப்பாட்டிற்குள்
இல்லை
என்ற
காரணத்தினாலும்
மரத்திலிருந்து
பிரிந்து சென்ற
மாங்காயானது
எந்த
ஒன்றின்
கட்டுப்பாட்டிற்குள்ளும்
இல்லாமல்
தனித்து
செயல்படக்கூடிய
தன்மையைப்
பெற்றிருக்கின்ற
காரணத்தினாலும்
மாங்காயை
விடுதலை
பெற்றது
என்று சொல்லலாம்”
“சுதந்திரம் என்ற
வார்த்தையை
எங்கே
பயன்படுத்த
வேண்டுமோ அங்கு
எல்லாம் விடுதலை
என்ற வார்த்தை
பயன்படுத்தப்பட்டு
வருகிறது
விடுதலை என்ற
வார்த்தையை எங்கே
பயன்படுத்த
வேண்டுமோ அங்கு
எல்லாம் சுதந்திரம்
என்ற வார்த்தை
பயன்படுத்தப்பட்டு
வருகிறது”
“விடுதலை என்ற
வார்த்தையை
எப்போது
பயன்படுத்த
வேண்டும்
என்றால்
ஒன்றின்
கட்டுப்பாட்டிற்குள்
இருந்து பிரிந்து
சென்ற ஒன்று
மீண்டும் அந்த
ஒன்றில் சேராமல்
இருந்தாலோ
பிரிந்து வந்த பிறகு
தனித்து
இயங்கக்கூடிய
தன்மையைப் பெற்று
இருந்தாலோ
மட்டுமே
விடுதலை என்ற
வார்த்தையைப்
பயன்படுத்த
வேண்டும்”
“சுதந்திரமும்
விடுதலையும்
மனிதருடைய
வாழ்வில்
மாறி மாறி வந்து
கொண்டேயிருக்கும்
அனைவரும்
சுதந்திரமாக
இருக்கத்தான்
விரும்புகின்றனர்
ஒரு சிலர் தான்
விடுதலை பெற்று
வாழ வேண்டும்
என்று
சிந்திக்கின்றனர்”
-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்
-----------16-08-2020
/////////////////////////////
No comments:
Post a Comment