August 30, 2020

அறிவிப்பு-பதிவு-1

 அறிவிப்பு-பதிவு-1

 

அன்பிற்கினியவர்களே!

 

நான்

என்னுடைய மனைவி

என்னுடைய சீடர்கள்

என்னுடைய நண்பர்கள்

என் மேல் அன்பு

கொண்டவர்கள்

ஆகிய அனைவரும்

அவர்கள் தாங்கள்

கற்றுக் கொண்ட

கல்விக்கு

ஏற்றபடி

அவர்கள் தாங்கள்

கற்றுக் கொண்டுள்ள

கலைக்கு

ஏற்றபடி

அவர்கள் தாங்கள்

செய்யும் தொழிலுக்கு

ஏற்றபடி

அவர்கள் தங்களுக்கு

கிடைத்திருக்கும்

வசதிக்கு

ஏற்றபடி

அவர்கள் தாங்கள்

வகிக்கும்

துறையில் உள்ள

விஷயங்களுக்கு

ஏற்றபடி

 

பசித்த வயிற்றுக்கு

உணவு அளித்து

உதவிகள் செய்தல்

ஏழை எளிய

மாணவர்கள்

கல்வி பயிலுவதற்கு

உதவிகள் செய்தல்

மருத்துவ உதவிகள்

தேவைப்படுவோருக்கு

மருத்துவ

உதவிகள் செய்தல்

விளையாட்டுத்

துறையில் உதவி

தேவைப்படுபவர்களுக்கு

உதவிகள் செய்தல்

யோகா கற்றுக்

கொள்ள

உதவிகள் செய்தல்

உடற்பயிற்சி

செய்வதற்கு

உதவிகள் செய்தல்

ஆன்மீக வழியில்

செல்வதற்கு

உதவிகள் செய்தல்

போன்ற உதவிகளை

தங்களை

நாடி வந்து

தங்களுடைய

துன்பத்தை நீக்க

உதவி செய்ய

வேண்டும்

என்று உதவி

கேட்பவர்களுக்கு

அவர்களுடைய

தேவையை மனதில்

கொண்டு

அவர்களுடைய

தேவையை

பூர்த்தி செய்து

அவர்களுடைய

துன்பங்களை நீக்கி

அவர்களுக்கு

உதவிகள் பல

செய்து வருகின்றனர்

 

தனியாக இருந்து

கொண்டும்

என்னுடன் இணைந்து

கொண்டும்

இவர்கள் செய்யும்

சமூக சேவைகளை

இனிவரும் காலங்களில்

இவர்கள் அனைவரையும்

ஒன்றாக இணைத்து

ஒன்றாக

செய்ய வைக்க

வேண்டும் என்றும்

நாடி வந்து

உதவி தேவை

என்று கேட்பவர்களுக்கு

மட்டுமல்லாமல்

உதவி தேவைப்படுபவர்கள்

யார் என்று கண்டறிந்து

அவர்களுக்கும்

உதவிகள் செய்ய

வேண்டும் என்றும்

இந்திய அரசின்

அரசியலமைப்புச்

சட்டத்தில் கொடுத்துள்ள

சட்ட விதிகளின் படி

உதவிகள் செய்ய

வேண்டும் என்றும்

அரசிடம் அனுமதி

பெற்று முறைப்படி

உதவிகள் செய்ய

வேண்டும் என்றும்

இனி வரும்

காலங்களில்

இந்த சமுதாயத்திற்கு

செய்யப் போகும்

சமூக சேவைகளை

அறக்கட்டளை

மூலமாக செய்ய

வேண்டும் என்றும்

அதற்கு ஒரு

அறக்கட்டளையை

தோற்றுவிக்க

வேண்டும் என்றும்

முடிவெடுத்தோம்

 

அறக்கட்டளைக்கு

ஒரு பெயரைத்

தேர்ந்தெடுத்தோம்

FOUNDER/

MANAGING TRUSTEE

தலைமையின் கீழ்

ஐந்து

TRUSTEES

ஆக மொத்தம்

ஆறு பேர்களைக்

கொண்டு அந்த

அறக்கட்டளையை

நடத்துவது எனவும்

அதில் உறுப்பினர்களாக

சேருவோரையும்

சேர்த்து கொண்டு

சமூக சேவை

ஆற்றுவோம்

என்றும் முடிவெடுத்தோம்

 

---------என்றும் அன்புடன்

--------K.பாலகங்காதரன்

 

---------30-08-2020

///////////////////////////////////////////////

No comments:

Post a Comment