November 02, 2020

அறிய வேண்டியவை-155

 

ஜபம்-பதிவு-647

(அறிய வேண்டியவை-155)

 

“இத்தகைய

செயல்கள்

அனைத்தையும்

கண்டாலும்,

இதே நிலை தான்

தனக்கும் ஏற்படும்

என்பதை

உணர்ந்திருந்திருந்தாலும் 

தன்னுடைய பாலினத்தை

ஆணிலிருந்து

பெண்ணாக

மாற்றி - தான்

பெண்ணாக மாறி

இந்த உலகத்தில்

வாழும் போது

தனக்கும்

கிடைக்கும் என்பது

தெரிந்திருந்தும்

ஒருவர்

ஆணிலிருந்து

பெண்ணாக

மாறுகிறார் என்றால்

அவர் எத்தகைய

மனதைரியம்

கொண்டவராக

இருக்க வேண்டும்”

 

“இந்த சமுதாயத்திற்கு

பயந்து

இந்த சமுதாயத்தின்

முன்னிலையில்

ஆணாகவும்

இந்த சமுதாயம்

பார்க்காத போது

மறைவாக

பெண்ணாகவும்

வாழாமல்

இந்த சமுதாயத்தில்

எல்லா இடங்களிலும்

பெண்ணாகத்

தான் வாழ்வேன்”

 

“இந்த சமுதாயத்திற்குப்

பயந்து சில

இடங்களில்

ஆணாகவும்

சில இடங்களில்

பெண்ணாகவும்

போலியாக வாழ்க்கை

வாழ மாட்டேன்

 

“இந்த சமுதாயத்தில்

எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாக

பெண்ணாகத்

தான் வாழ்வேன்”

 

“இந்த சமுதாயம்

தன்னை

நல்லவராகவோ

அல்லது

கெட்டவராகவோ

ஏற்றுக் கொள்ள

வேண்டும்

என்பதற்காக

வாழாமல்

இந்த சமுதாயம்

தன்னை

இப்படித் தான்

ஏற்றுக் கொள்ள

வேண்டும்

என்பதற்காக

வாழாமல்

இந்த சமுதாயம்

தன்னை மனிதராக

ஏற்றுக் கொள்ள

வேண்டும்

என்பதற்காக

வாழ்வேன்”

 

“இந்த சமுதாயத்தின்

எல்லா இடங்களிலும்

பெண்ணாகத் தான்

வாழ்வேன்

எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாகத்

தான் வாழ்வேன்

உண்மையாக

வாழ்க்கையைத்

தான் வாழ்வேன்

என்று

இந்த சமுதாயத்தில்

வாழ்ந்து

கொண்டிருக்கும்

மாற்று

பாலினத்தவர்கள்

இந்த சமுதாயத்தில்

தன்னுடைய

வாழ்க்கையை

உண்மையாக

வாழ்பவர்கள்

எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழ்பவர்கள்”

 

“இந்த

மாற்று

பாலினத்தவர்கள்

தான் தன்னுடைய

வாழ்க்கையை

உண்மையாக

வாழ்பவர்களுக்கு

இந்த சமுதாயத்தில்

எடுத்துக் காட்டாக

வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்”

 

“அவர்கள்

இந்த சமுதாயத்திற்கு

உண்மையாக

வாழ்க்கையை

வாழ்பவர்களுக்கு

உதாரணமாக

இருப்பவர்கள்”

 

கர்ணன் :

“எதற்காக இதை

இப்போது சொல்கிறீர்கள்”

 

“இதை சொல்ல

சொல்ல வேண்டிய

அவசியம் இப்போது

என்ன நேர்ந்தது”

 

“இதை சொல்வதற்கு

காரணம் என்ன?”

 

சகுனி :

“இந்த சகுனி

எந்த ஒரு

வார்த்தையையும்

தேவையில்லாமல்

பேசமாட்டான்

என்பது

உனக்குத்

தெரியாதா கர்ணா?”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------02-11-2020

/////////////////////////////////

No comments:

Post a Comment