ஜபம்-பதிவு-646
(அறிய
வேண்டியவை-154)
“அவர்கள் தான்”
“ஆணிலிருந்து
பெண்ணாகவும்
பெண்ணிலிருந்து
ஆணாகவும்
மாறியவர்கள்
தான்”
“அவர்கள் தான்”
“மாற்று
பாலினத்தவர்கள்
தான்
இந்த சமுதாயத்தில்
உண்மையாக
வாழ்பவர்களுக்கு
எடுத்துக்காட்டாக
வாழ்ந்து
கொண்டிருப்பவர்கள்
;
தன்னுடைய
வாழ்க்கையை
போலியாக
வாழாமல்
உண்மையாக
வாழ்பவர்கள்
;
தன்னுடைய
வாழ்க்கையை
எல்லா இடங்களிலும்
ஒரே மாதிரியாக
வாழ்பவர்கள்
;”
“தனக்குள் எழுந்த
உணர்வுகளை
உணர்ந்து
அதற்கு உயிர்
கொடுத்து வாழ்பவர்கள் ;
தன்னுடைய ஆசையின்
முக்கியத்துவத்தை
உணர்ந்து
அந்த ஆசையின்
வடிவமாகவே
வாழ்பவர்கள் ;
தாங்கள்
எப்படி வாழ
வேண்டும்
என்று
நினைக்கிறார்களோ
அப்படியே
தன்னை
மாற்றிக்
கொண்டு
தங்களுடைய
வாழ்க்கையை
வாழ்பவர்கள்
“
“இந்த சமுதாயத்தில்
ஆணாகப் பிறந்து
ஆணுக்குரிய உடலுடன்
இருக்கும் ஒருவர்
ஒரு குறிப்பிட்ட
வயதில் அவருடைய
உடலுக்குள்
பெண்ணுக்குரிய
தன்மைகள்
உணர்வுகளாக
பூத்துக் குலுங்கும் போது ;
தனக்குள்
பெண்ணுக்குரிய
மாற்றங்கள்
ஏற்படுவதைக் கண்டு ;
பெண்ணிற்குள்ள
உணர்வுகள் தனக்குள்
மலருவதைக் கண்டு ;
தனக்குள் ஏற்படும்
பெண்ணுக்குரிய
மாற்றத்தை கண்டு ;
தனக்குள் இருக்கும்
பெண்மையின்
உணர்வுகளைக் கண்டு ;
அந்த பெண்மையை
ஆண் என்ற
உடலுக்குள்
மறைத்துக் கொள்ளாமல்
பெண்ணுக்குரிய
உடலாக
தன்னை
மாற்றிக் கொண்டு
பெண் தன்மையை
வெளிப்படுத்த வேண்டும்
என்று நினைக்கும்
அளவில்
இந்த சமுதாயத்தில்
ஏற்கனவே
ஆணிலிருந்து
பெண்ணாகவும்
பெண்ணிலிருந்து
ஆணாகவும்
மாறியவர்களையும்
பார்க்க நேரிடுகிறது “
“இவ்வாறு
மாறியவர்கள்
அடையும் கஷ்டம்
நிறைந்த வாழ்க்கையை
பார்க்க நேரிடுகிறது”
“அவர்களை
இந்த சமுதாயம்
எப்படி புறக்கணிக்கிறது
என்பதை பார்க்க
நேரிடுகிறது”
“அவர்களை
இந்த சமுதாயம்
எப்படி
இழிவு படுத்துகிறது
என்பதை
பார்க்க நேரிடுகிறது”
“பெற்றோர்களாலும்,
உடன்பிறந்தவர்களாலும்,
சுற்றத்தார்களாலும்,
நண்பர்களாலும்,
உறவினர்களாலும்
ஆதரிக்கப்படாமல்
புறக்கணிக்கப்பட்டு
தனியாக
இந்த சமுதாயத்தில்
அனாதையாக
விடப்பட்டு வாழ்ந்து
கொண்டிருப்பதைக்
காண நேரிடுகிறது”
“வசிப்பதற்குக் கூட
வீடில்லாமல்,
வாழ்வதற்கு
வேலை இல்லாமல்,
உண்ண உணவிற்கு
வழியில்லாமல்,
உடுத்துவதற்கு
நல்ல உடை
இல்லாமல்,
அன்பு காட்டுவதற்கு
நல்ல மனம்
படைத்தவர்
இல்லாமல்,
கனிவுடன் பேசுவதற்கு
கருணை இதயம்
கொண்டவர் இல்லாமல்,
உதவி செய்தவற்கு
உயர்ந்த குணம்
இல்லாதவர்கள்
இல்லாமல் அவர்கள்
படும் கஷ்டத்தைப்
பார்க்க நேரிடுகிறது”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------02-11-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment