November 02, 2020

அறிய வேண்டியவை-156

 

ஜபம்-பதிவு-648

(அறிய வேண்டியவை-156)

 

சகுனி :

“அர்த்தம் இல்லாத

எந்த ஒரு

வார்த்தையையும்

இந்த சகுனி

பயன்படுத்த

மாட்டான் என்பது

உனக்குத்

தெரியாதா கர்ணா”

 

“இந்த சகுனியின்

வாயிலிருந்து

ஒரு வார்த்தை

வருகிறது என்றால்

அதில் ஆயிரம்

அர்த்தங்கள் இருக்கும்

ஆயிரம்

அர்த்தங்களைக் கொண்ட

ஒரு வார்த்தையை

இந்த சகுனி

பேசினான் என்றால்

அதற்கு பின்னால்

மிகப்பெரிய திட்டம்

இருக்கும் என்பது

உனக்குத்

தெரியாதா கர்ணா?”

 

“ஒரு விஷயத்தை

இவ்வளவு தெளிவாக

யோசித்து உனக்கு

சொல்கிறேன் என்றால்

அதன் பின்னால்

உள்ள காரணத்தை

நீ அறிவில்லையா

கர்ணா!”

 

கர்ணா :

“நீங்கள் பேசும்

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தை

என்னால்

புரிந்து கொள்ள

முடியவில்லை

காந்தார அரசே!”

 

சகுனி :

“சகுனியின்

வார்த்தையில்

உள்ள

அர்த்தத்தை

நீ

புரிந்து கொள்ள

வேண்டும்

என்றால்

கர்ணா

நீ

சகுனியாக

இருக்க

வேண்டும்”

 

“நீ

சகுனியாக

மாறாமல்

கர்ணா

உன்னால்

இந்த சகுனியின்

வார்த்தையில்

உள்ள

அர்த்தத்தை

உன்னால்

புரிந்து கொள்ள

முடியாது

கர்ணா !”

 

துரியோதனன் :

“இப்போது

என்ன செய்ய

வேண்டும்

மாமா

அவர்களே!”

 

சகுனி :

“அப்படி கேள்

என் அன்பு

மருமகனே!”

 

“பீஷ்மர்,

துரோணர்,

விதுரர்,

கிருபர்

ஆகிய இந்த

நான்கு பேரும்

உண்மையான

வாழ்க்கையை

வாழ்வதாக

இந்த சமுதாயத்தை

நம்ப வைத்துக்

கொண்டு போலியான

வாழ்க்கையை

வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்”

 

“இவர்கள்

நான்கு பேரும்

போலியாக

தங்களுடைய

வாழ்க்கையை

நடத்திக்

கொண்டிருப்பவர்கள்”

 

“இந்த சமுதாயத்திற்கு

பயந்து

இரட்டை வாழ்க்கை

வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்”

 

“எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழாமல்

வாழ்வதற்கு

தைரியம் இல்லாமல்

போலியாக

வாழ்க்கையை

ஓட்டிக்

கொண்டிருப்பவர்கள்”

 

“இவர்கள்

நால்வரும்

தைரியம்

இல்லாத கோழைகள்”

 

“இந்த சமுதாயத்திற்கு

பயந்து தன்னுடைய

உணர்வுகளை

மறைத்துக் கொண்டு

வாழும் கோழைகள்”

 

“தன்னுடைய

உணர்வுகளை

எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வெளிப்படுத்தி

வாழ முடியாத

கோழைகள்”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------02-11-2020

/////////////////////////////////

No comments:

Post a Comment