November 14, 2020

அறிய வேண்டியவை-159

 

ஜபம்-பதிவு-651

(அறிய வேண்டியவை-159)

 

சகுனி :

“உள்ளே ஒன்றை

வைத்துக் கொண்டு

வெளியே ஒன்றை

பேசிக் கொண்டு

நம்மிடம் உறவு

வைத்துக் கொண்டு 

நல்லவர்கள் போல்

நடித்துக் கொண்டு

நமக்காக

வாழ்பவர்கள் போல்

செயல்களைச்

செய்து கொண்டு

நம்மேல் அக்கறை

இருப்பது போல்

காட்டிக் கொண்டு

நம்மிடம்

உண்மையான

நட்பு வைத்திருப்பது

போல் அன்பு

செலுத்திக் கொண்டு

இருப்பவர்களிடம்

எச்சரிக்கையாக

இருக்க வேண்டும்”

 

“ஏனென்றால்

இவர்கள் இரட்டை

வாழ்க்கை வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்

எந்த நேரத்திலும்

மாறக்கூடியவர்கள்

எந்த நேரத்திலும்

நம்மை விட்டு

செல்லக் கூடியவர்கள்

நமக்கு பிரச்சினை

ஏற்படும் போது

அவர்களுக்கு

அந்த பிரச்சினை

ஏற்பட்டு விடக்கூடாது

என்று நம்மை விட்டு

ஓடி விடக்

கூடியவர்கள்

இத்தகையவர்கள்

தாங்கள்

வாழ்வதற்காக

நம்மையே காட்டிக்

கொடுக்கவும் தயங்க

மாட்டார்கள்”

 

“இத்தகைய

இரட்டை வாழ்க்கை

வாழும் இந்த

நால்வரிடமும் நாம்

எச்சரிக்கையாக

இருக்க வேண்டும் “

 

துரியோதனன் :

“என்ன செய்ய

வேண்டும் என்று

சொல்ல வருகிறீர்கள்

மாமா அவர்களே!”

 

சகுனி :

“இந்த நால்வரும்

நம்மை விட்டு

பிரிந்து செல்லாமல்

பார்த்துக்

கொள்ள வேண்டும்

இந்த நால்வரும்

கௌரவர்களுக்கு

ஆதரவாக

இருக்க வேண்டும்”

 

“நாளை போர் என்ற

ஒன்று ஏற்பட்டால்

இந்த நால்வரும்

கௌரவர்கள் பக்கம்

நின்று தான்

போரிட வேண்டும்

பாண்டவர்கள்

பக்கம் சென்று

போரிடக் கூடாது”

 

“அவர்கள் நால்வரும்

நமக்கு ஆதரவாக

இருக்கவேண்டும்

நமக்கு ஆதரவாக

போரிட வேண்டும்

எக்காரணத்தைக்

கொண்டும் அவர்கள்

பாண்டவர்கள் பக்கம்

சென்று விடக்கூடாது

இவர்கள் நால்வரும்

நம்முடன் தான்

இருக்க வேண்டும்

என்பதற்காக

ஏற்பாடுகளைச்

செய்து இருக்கிறேன்”

 

துரியோதனன் :

“என்ன ஏற்பாடு

செய்து இருக்கிறீர்கள்

மாமா அவர்களே!”

 

சகுனி :

“பகடை விளையாட்டு”

 

கர்ணன் :

“பகடை விளையாட்டு

என்று சொல்லாதீர்கள்

சூதாட்டம்

என்று சொல்லுங்கள்

அது தான்

பொருத்தமாக இருக்கும்”

 

சகுனி :

“இல்லை கர்ணா

பகடை விளையாட்டு”

 

கர்ணன் :

“சூதாட்டத்தை இப்படியும்

உங்கள் மொழியில்

சொல்லலாம்

போல் இருக்கிறது”

 

துரியோதனன் :

“கர்ணா

சிறிது நேரம்

அமைதியாக

இரு”

 

(கர்ணண்

அமைதியாக

நின்றான்)

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------14-11-2020

/////////////////////////////////

No comments:

Post a Comment