ஜபம்-பதிவு-653
(அறிய
வேண்டியவை-161)
துரியோதனன் :
“பீஷ்மர்
நாளை
நடைபெறப்போகும்
நிகழ்வை தடுத்து
நிறுத்துவதற்கு
தேவையான
நடவடிக்கையை
மேற்கொண்டு
தடுத்தி நிறுத்தினால்
பாண்டவர்களுக்கு
எதிராக எந்த
ஒரு தகாத செயலும்
நடைபெறக்கூடாது
என்று முயற்சி
செய்தால்
கோபத்தில்
அவையை விட்டு
வெளியே சென்றால்?”
சகுனி :
“பீஷ்மர் நம்
பக்கம் இல்லை
என்று அர்த்தம்.
போர் என்று
வந்து விட்டால்
பீஷ்மர்
பாண்டவர்களின்
சார்பாகவும்,
நமக்கு
எதிராகவும்
சண்டையிடுவார்
என்று அர்த்தம்”
துரியோதனன் :
“அப்படி என்றால்
துரோணர்”
சகுனி :
“துரோணர் தன்
மகன் அஸ்த்தாமன்
மேல் அதிக அளவு
அன்பு வைத்திருப்பவர்
தன் மகனுக்காகவே
வாழ்பவர்
மகனுக்காக
எந்த ஒரு செயலையும்
செய்யத் துணிபவர்”
“அஸ்வத்தாமன்
உன்னுடைய
நண்பனாக இருக்கிறான்”
“நாளை
நடைபெறப் போகும்
பகடை விளையாட்டில்
அஸ்த்தாமன்
நம் பக்கம் தான்
இருக்கிறான்
என்பதை
துரோணர் உணர்ந்து
கொள்ளும்படிச்
செய்ய வேண்டும்”
“அஸ்வத்தாமன்
துரியோதனனின்
நண்பனாக இருக்கிறான்
கெளரவர்களுக்கு
ஆதரவாக இருக்கிறான்
பாண்டவர்களுக்கு
எதிராக இருக்கிறான்
பாண்டவர்களுக்கு
பகையாளியாக
இருக்கிறான்
பாண்டவர்களுக்கு
விரோதமாக இருக்கிறான்
நாளை போர்
என்று வந்து விட்டால்
அஸ்வத்தாமன்
கௌரவர்கள்
சார்பாகத் தான்
போரிடுவான்
துரியோதனனுக்காக
உயிரையே
கொடுப்பான் என்பதை
துரோணர்
அறியும் படிச்
செய்ய வேண்டும்”
“அப்படி செய்து
விட்டால்
துரோணர் தன்
மகன் எந்த பக்கம்
இருக்கிறானோ அந்த
பக்கத்திற்கு தான்
ஆதரவாக
இருக்க வேண்டிய
சூழ்நிலை
ஏற்பட்டு விடும்
அதாவது
கௌவர்கள்
பக்கம் தான்
இருந்தாக வேண்டும்
கௌரவர்கள் பக்கம்
இருந்து தான் போர்
புரிய வேண்டும்
துரியோதனனுக்கு
ஆதரவாக போர்
புரிய வேண்டும்”
“தன் மகனுக்கு
எதிராக நின்று
போர் புரிய முடியாது
கௌரவர்கள் பக்கம்
அஸ்வத்தாமன்
இருக்கும் போது
துரோணர் எப்படி
பாண்டவர்கள் பக்கம்
நின்று கொண்டு
தன் மகனுக்கு
எதிராக ஆயுதத்தை
எடுத்து சண்டையிட
முடியும்
துரோணரால்
சண்டையிட
முடியாது “
“துரோணருக்கு
மகன் பாசத்தை
காட்டி நாளை
நடைபெறப்போகும்
பகடை விளையாட்டிலும்
அதைத் தொடர்ந்து
பாண்டவர்களுக்கு
எதிராக
நடைபெறப் போகும்
நிகழ்விலும்
துரோணரால் ஒன்றும்
செய்ய முடியாமல்
அந்த அவையில்
அமர்ந்திருந்தார்
என்றால்
துரோணர் நம்
பக்கம் தான்
என்பதை நாம்
முடிவு செய்து
கொள்ளலாம்”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------14-11-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment