பதிவு-2-ஐயிரண்டு
திங்கள்-பட்டினத்தார்
பட்டினத்தார் :
“நீங்கள்
சொன்னவைகளை
என்னால் செயல்
படுத்த முடியாது
செயல்படுத்துவது
என்பது
இயலாத காரியம்
இருந்தாலும்
உங்களுடைய
வார்த்தைக்கு
மதிப்பு கொடுத்து
உங்களுக்காக அந்த
நாணயத்தை என்
துண்டின் ஓரத்தில்
கட்டி வைத்துக்
கொள்கிறேன்
என்று அந்த
நாணயத்தை
வாங்கிக் கொண்டார்
அதை அவர்
உடுத்தியிருந்த
உடையின் ஓரத்தில்
முடிச்சு போட்டு
வைத்துக்
கொண்டார்”
“பட்டினத்தார்
பல ஆண்டுகள்
பல இடங்களுக்கும்
சென்று பல்வேறு
கருத்துக்களைப்
பரப்பி வந்தார்.
அவ்வாறான
செயல்கள்
நடை பெற்றுக்
கொண்டிருக்கும்
வேளையில்,
ஒரு நாள்
தவநிலையில்
இருக்கும் போது
அவர் உடுத்தி
இருந்த ஆடையில்
முடிந்து வைக்கப்பட்ட
நாணயம் அவிழ்ந்து
கீழே விழுந்தது.”
“அவர் தாய்
இறந்து விட்டார்
என்று அவருக்கு
தெரிந்ததும்,
அவரையும்
அறியாமல்
அவர் மனம்
தடுமாற்றம்
அடைந்தது.
மனம் கலக்கம்
அடைந்தது
துயர மேகங்கள்
அவருடைய இதயத்தை
சூழ்ந்து கொண்டது
உடனே அவர்
அருகில்
இருந்தவர்களிடம்
தன் தாய்
இறந்து விட்டார்
அவரைப் பார்க்க
சென்று வருகிறேன்
என்று சொல்லி
விட்டு
கிளம்பி விட்டார்”
“அவர் தாய்
இருக்கும் இடத்திற்கு
வந்தபோது
அங்கே அவர்
கண்ட காட்சி
அவரை அதிர்ச்சி
அடையச் செய்தது.
அவர் துறவியாகி
எல்லாவற்றையும்
துறந்து விட்டு
சென்று விட்டதால்
சாதி வெறியர்கள்
அவர் குடும்பத்தை
விலக்கி
வைத்திருந்தனர்.
அதனால்
அவர் தாயாரின்
இறந்த உடலுடன்
ஓரிருவர் மட்டுமே
நின்று
கொண்டிருந்தனர்.”
“தன்னுடைய
தாயினுடைய
இறந்த உடலை
பார்த்த
பட்டினத்தார்
மனம் வேதனையுற்று
தன்னையுமறியாமல்
கண்ணிலிருந்து
விழுந்த கண்ணீரை
அடக்க முடியாமல்,
துக்கம் தாளாமல்
தேம்பித் தேம்பி
அழ ஆரம்பித்தார் ;
கதறி அழ
ஆரம்பித்தார் ;
தன்னுடைய
அழுகையை
கட்டுப்படுத்த
முடியாமல் அழ
ஆரம்பித்தார் ;
உடல் என்னும்
கூட்டை விட்டு
இதயம் வெடித்து
வெளியே
விழுந்து விடும்
என்று எண்ணத்
தோன்றும் வகையில்
ஆழ ஆரம்பித்தார் ;
ஆன்மீக வரிசையில்
ஞானத்தைப் பெற்று
சமாதியைச்
சுவைத்து
முக்தி என்ற
மோட்ச நிலையை
அடையக் காத்துக்
கொண்டிருக்கும்
பட்டினத்தார்
தன்னை மறந்து
தாயின் சடலத்தைப்
பார்த்து அழுதார்
அந்த காட்சியைக்
கண்டு மனம்
வேதனையுற்று
தன்னையுமறியாமல்
கண்ணிலிருந்து
விழுந்த கண்ணீரை
அடக்க முடியாமல்,
அவர் தன்
தாயைப்
பற்றி பாடிய
பாடலுக்கு
இணையாக எந்த
ஒரு பாடலும்
இந்த உலகத்தில்
இதுவரை
எழுதப் படவில்லை.
அந்தப் பாடல் தான்
இது தான்
ஐயிரண்டு
திங்கள்
அங்கமெலாம்
நொந்துபெற்று
பையலென்ற போதே
பரிந்தெடுத்துச்
செய்யவிரு
கைப்புறத்தி லேத்திக்
கனகமுத்தம்
தந்தாளை
எப்பிறப்பிற்
காண்பேண் இனி”"""
என்ற பாடலாகும்
----------என்றும்
அன்புடன்
-----------எழுத்தாளர்
K.பாலகங்காதரன்
--------09-05-2021
////////////////////////////////////////////
No comments:
Post a Comment