May 09, 2021

பதிவு-3-ஐயிரண்டு திங்கள்-பட்டினத்தார்

 பதிவு-3-ஐயிரண்டு

திங்கள்-பட்டினத்தார்

 

 

  ""ஐயிரண்டு திங்கள்

அங்கமெலாம்

 நொந்து பெற்று""

 

ஐயிரண்டு திங்கள்

ஐந்து இரண்டு

பத்து மாதங்கள்

உடலிலுள்ள

ஒவ்வொரு அணுக்களும்

பல்வேறு இன்னல்கள்

துன்பங்கள் அடைந்து

தாயானாவள்

குழந்தையை

பெற்று எடுக்கிறாள்.

 

இந்த இடத்தில்

ஒவ்வொருவரும்

ஒரு விஷயத்தை

அனைவரும் தெரிந்து

கொள்ள வேண்டும.;

 

ஐம்புலன்கள்

எனப்படுபவை

மெய்,வாய்,கண்,

மூக்கு,செவி

ஆகியவை ஆகும்.

 

அந்த ஐம்புலன்கள்

மூலம்

உணரப்படுபவை

பஞ்ச தன்

மாத்திரைகள்

எனப்படும் .

 

பஞ்ச தன் மாத்திரைகள்

எனப்படுபவை

அழுத்தம்,ஒலி, ஒளி,

 சுவை, மணம்

ஆகியவை ஆகும்.

 

மனிதன் எத்தகைய

செயல்கள் செய்தாலும்,

அவனுடைய

ஐம்புலன்களில்

குறைந்தது

இரண்டோ அல்லது

மூன்றோ தான்

ஒரே சமயத்தில்

வேலை செய்யும்

 

ஐந்து புலன்களும்

ஒரே சமயத்தில்

வேலை செய்வது

என்பது

அரிதான செயல்.

 

ஆணுக்கு

ஒரு முறையும்

பெண்ணுக்கு

இரண்டு முறையும்

ஒரே சமயத்தில்

ஐம்புலன்களும்

வேலை செய்யும்.

 

ஆணுக்கு

தாம்பத்திய உறவில்

ஈடுபடும்போது

ஒரு முறையும்,

பெண்ணுக்கு

தாம்பத்திய உறவில்

ஈடுபடும்போது

ஒரு முறையும்,

குழந்தை

பெறும் போது

ஒரு முறையும்,

ஆக இரண்டு

முறையில் ஐம்புலன்கள்

ஒரே சமயத்தில்

வேலை செய்யும்.

 

தாயானாவள் குழந்தை

பெற்றெடுக்கும் போது

ஐம்புலன்கள்

ஒரே சமயத்தில்

வேலை செய்வது

மட்டுமல்லாமல்,

அவளுடைய

ஒவ்வொரு அணுக்களும்

அதிர்வடைந்து

துன்பத்தை கொடுக்கும் .

 

அத்தகைய பல்வேறு

துன்பங்களுக்கு

இடையில் தாயானாவள்

குழந்தையைப்

பெற்றெடுக்கிறாள்.

 

"பையலென்ற போதே

பரிந்தெடுத்துச்

செய்யவிரு

கைப்புறத்தி லேத்திக்

கனகமுத்தம் தந்தாளை """"

 

குழந்தை பசிக்காக

ஏங்கி அழும் பொழுதோ

அல்லது

விளையாடும் பொழுதோ,

கீழே விழுந்து விட்டால்

தாய் தனது

குழந்தையை பாசத்துடன்

கைகளில் வாரி எடுத்து

கைகளில் ஏந்தி

மார்போடு அணைத்து

என்ன கண்ணா

பசி எடுக்குதா

கீழே விழுந்து

விட்டாயா என்று

கொஞ்சி கன்னத்தில்

முத்தம் தந்து

பசியாற்றுவாள்

 

"எப்பிறப்பிற்

காண்பேண் இனி""""""

 

இவ்வளவு அன்பும்

பாசமும் நிறைந்த

தாயைப் போல

ஒரு கருணை

தெய்வத்தை

எத்தனை கோடி

பிறவி நான்

எடுத்தாலும்

என்னால்

காண முடியுமா

 

என்று மனம்

வருந்தி கண்ணீர்

சிந்தி பாடும் பொழுது

தான் அவர் தாய்

சொன்னது அவர்

நினைவுக்கு வந்தது”

 

“உலகில் உள்ள

எந்த ஒரு

பாசத்தையும்

துறக்கலாம் 

ஆனால் தாய்

பாசத்தை மட்டும்

துறக்க முடியாது

என்ற வார்த்தை

அவர் காதில்

எதிரொலித்தது”

 

“தாயின்

வார்த்தையில் உள்ள

உண்மைகளை

உணர்ந்து கொண்டார்

பட்டினத்தார்”

 

“இந்த உலகத்தில்

உள்ள யாராலும்

தாய்ப்பாசத்தைத்

துறக்க முடியாது

என்ற உண்மையை

தன்னுடைய

அனுபவத்தின் மூலம்

உணர்ந்துகொண்டார்

பட்டினத்தார் “

 

“இப்போது

பட்டினத்தார்

கண்களிலிருந்து

கண்ணீர் வடிந்தது ;

அது தாய்ப்பாசத்தை

உணர்ந்ததால்

வந்த கண்ணீர் ;”

 

அன்னையர் தின

வாழ்த்துக்கள்-

09-05-2021

 

----------என்றும் அன்புடன்

 

-----------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

--------09-05-2021
////////////////////////////////////////////





No comments:

Post a Comment