பதிவு-6-முடிவும்-
திருக்குறள்
விழாவில்
எடுக்கப்பட்ட
புகைப்படங்கள்,
வீடியோக்கள்
ஆகியவற்றை வாங்கி
பத்திரப்படுத்தி
வைக்க வேண்டும்.
அது மட்டுமல்ல
விழாவிற்கான
அழைப்பிதழையும்
பத்திரப்படுத்தி
வைக்க வேண்டும்.
இவைகள் தான்
நாம் விழாவை
நடத்தியதற்கான
ஆவணங்கள்
மற்றும்
நம்முடைய
மறக்க முடியாத
நினைவுகள் ஆகும்.
விழா
நடத்துவதற்கு
முன்பு
விழாவை
இப்படித் தான்
நடத்த வேண்டும்,
இந்த
வரிசையில் தான்
நடத்த வேண்டும்,
என்று
துல்லியமாக
எவ்வளவு தான்
திட்டம் போட்டு
முறைப்படி செய்து
இருந்தாலும்
விழாவை
நடத்தும் போது
நாம் போட்ட
திட்டத்தின் படி
வரிசையாக
நடக்கவே நடக்காது.
நடப்பதற்கு
வாய்ப்பே இல்லை
பல நிகழ்வுகள்
மாறி மாறித் தான்
நடந்து இருக்கும்.
எந்த ஒரு
விழாவை
எடுத்துக்
கொண்டாலும்,
விழாவை நடத்த
வேண்டும் என்று
திட்டம்
போட்டாலும்,
விழாவை
நடத்தினாலும்,
விழாவை நடத்தி
முடித்தாலும்
அதில் இரண்டு
பேர்கள் கண்டிப்பாக
இருப்பார்கள்
ஒருவர் :
அறிவுரை
சொல்பவர்
இரண்டாமவர் :
குறை சொல்பவர்
அறிவுரை
சொல்பவர் யார்
குறை
சொல்பவர் யார்
என்பதைக்
கண்டறியத் தெரிந்து
வைத்திருக்க
வேண்டும்.
வேறுபாடு காண
தெரிந்து வைத்து
இருக்க வேண்டும்
நம்முடைய நலனில்
அக்கறை கொண்டவர்
அறிவுரை சொல்வார்.
நம் மேல்
பொறாமைப்படுபவர்
குறை சொல்வார்.
அறிவுரையில்
வாழ்த்துவதும்
இருக்கும்,
திட்டுவதும் இருக்கும்.
ஆனால்
குறை
சொல்வதில்
குறை சொல்வது
மட்டும் தான்
இருக்கும்.
அறிவுரை
சொல்பவர்களையும்,
குறை
சொல்பவர்களையும்
பேதம் பிரித்து
பார்க்கக்
கற்றுக் கொண்டு
குறை
சொல்பவர்களின்
குறைகளை
காதில் வாங்கிக்
கொள்ளாமல்,
அறிவுரை
சொல்பவர்களின்
அறிவுரைகளைக்
காது கொடுத்து
கேட்டு அதை
செயல்படுத்தினால்
நாம் நடத்தும்
எந்த ஒரு
விழாவாக
இருந்தாலும்
நன்மையாகத்
தான் முடியும்.
------என்றும் அன்புடன்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
------17-11-2021
////////////////////////////////////////
No comments:
Post a Comment