பதிவு-1-கொக்கொக்க-
திருக்குறள்-
"கொக்கொக்க
கூம்பும்
பருவத்து
மற்றதன்
குத்தொக்க
சீர்த்த
இடத்து"""""
-------திருக்குறள்-490
------திருவள்ளுவர்
"மீனுக்காக
வொறுமையாகக்
காத்திருந்து
வாய்ப்பு வந்தவுடன்
கொக்கு எப்படி
மீனை குறி
தவறாமல்
குத்தி பிடித்து
செல்கிறதோ
அதைப் போல
வாய்ப்பு
வரும் வரை
பொறுமையாகக்
காத்திருந்து
வாய்ப்பு
வந்தவுடன்
அதைச் சரியாக
பயன்படுத்திக்
கொண்டு நாம்
எந்த செயலை
செய்ய வேண்டும்
என்று நினைத்து
இருந்தோமோ
அந்த செயலைச்
சரியாகச் செய்து
முடிக்க வேண்டும்"
என்பது தான்
இந்தத்
திருக்குறளுக்கு
சொல்லப்படும்
கருத்து ஆகும்.
வாய்ப்பிற்காகக்
காத்துக்
கொண்டிருக்கக்
கூடாது
வாய்ப்பை நாமே
உருவாக்க வேண்டும்
என்று சிலர்
சொல்வார்கள்
இந்த கருத்து
தவறான கருத்தாகும்
வாழ்க்கையில்
எதிர்ப்படும் வாய்ப்பைப்
பயன்படுத்திக்
கொள்ளத் தான்
முடியுமே தவிர
எந்த ஒரு
வாய்ப்பையும்
யாராலும்
உருவாக்க முடியாது
நாம் அலுவலகத்தில்
வேலை நேரத்தில்
வேலை செய்து
கொண்டிருக்கிறோம்.
ஒரு சினிமாவை
பார்க்க வேண்டும்
என்ற ஆசை
நமக்கு ஏற்படுகிறது
சினிமா பார்க்க
வேண்டும் என்ற
ஆசை நமக்கு
ஏற்பட்டதால்
அலுவலகத்திற்கு
விடுப்பு போட்டு
விட்டு நாம்
சினிமா பார்க்க
செல்கிறோம்.
சினிமாவைப்
பார்ப்பதற்காக
அதாவது
ஒரு செயலை
செய்வதற்காக நாமே
ஒரு வழியைத்
தேர்ந்தெடுக்கிறோம்
அந்த வழியைப்
பின்பற்றுகிறோம்
அதை
செயல்படுத்துகிறோம்
இந்தச் செயல்
எதைக் காட்டுகிறது
என்றால்
நாம் ஒரு செயலைச்
செய்வதற்காக
ஒரு சூழ்நிலையை
நாமே உருவாக்கிக்
கொள்கிறோம்
என்பதைக் காட்டுகிறது.
வாய்ப்பை
உருவாக்கிக்
கொள்வதைக்
காட்டவில்லை
ஏனென்றால்,
வாய்ப்பை நம்மால்
உருவாக்க முடியாது.
நாம்
CIVIL SERVICE
EXAM தேர்வு
எழுதி நேர்காணலில்
வெற்றி பெற்று
உயர்ந்த அதிகாரி
பதவி ஏற்று
அனைவருக்கும்
நல்லது செய்ய
வேண்டும் என்று
விருப்பப்பட்டு
டிவியில் தேவையற்ற
நிகழ்ச்சிகளை பார்க்காமல்
தரமற்ற சினிமாக்களில்
நேரங்களை
செலவிடாமல்
அவசியம் ஏற்பட்டால்
ஒழிய வெளி
இடங்களுக்கு செல்லாமல்
நண்பர்களுடன்
வீண் அரட்டை
அடிக்காமல்
நேரத்தை பயனற்ற
விஷயங்களில்
செலவிடாமல்
மற்றவர்களுக்கு
தேவையற்ற
அறிவுரைகளை
சொல்லிக் கொண்டு
இருக்காமல்
மொபைலில் அவசியமற்ற
கருத்துக்களை அனுப்பிக்
கொண்டு இருக்காமல்
மற்றவர்களுக்கு
தொல்லை கொடுக்காமல்
மற்றவர்களுடைய
மனதைக்
காயப்படுத்தாமல்
மற்றவர்களை
வருத்தப்பட வைக்காமல்
மற்றவர்களை
கவலைப்பட வைக்காமல்
நூலகம் சென்று
படிக்கிறோம்
காகிதத்தில் எழுதி
எழுதி படிக்கிறோம்
குறிப்புகள் எடுத்து
படிக்கிறோம்
பல்வேறுபட்ட
புத்தகங்களை வாங்கி
படிக்கிறோம்
இரவு பகல்
பார்க்காமல் படிக்கிறோம்
படிக்கிறோம்
படிக்கிறோம்
தொடர்ந்து படிக்கிறோம்
விடாமல் படிக்கிறோம்
படித்துக் கொண்டே
இருக்கிறோம்
-------என்றும் அன்புடன்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------01-01-2022
------சனிக்கிழமை
/////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment