January 01, 2022

பதிவு-7-கொக்கொக்க- திருக்குறள்

 பதிவு-7-கொக்கொக்க-

திருக்குறள்

 

துரியோதனனுக்கு

பட்ட

செஞ்சோற்றுக்

கடனைத்

தீர்ப்பதற்காகப்

போரிட்டு

மடியவில்லை

கர்ணன்

தன்னுடைய

மானத்தைக்

காத்த

துரியோதனனுக்காகப்

போரிட்டு

மடிந்தான்

கர்ணன்

துரியோதனனுக்குப்

பட்ட நன்றிக்

கடனை

அடைப்பதற்கு

தனக்குக்

கிடைத்த

குருஷேத்திரப் போர்

என்ற

வாய்ப்பைச்

சரியாகப்

பயன்படுத்திக்

கொண்டு

துரியோதனனுக்காக

உயிரை

விட்டான்

கர்ணன்

 

குருஷேத்திரப்

போரில்

துரியோதனனுக்காகப்

போரிட்டு

மடிந்தான்

கர்ணன்

 

வாய்ப்பு

என்பது

எவ்வளவு

முக்கியமானது

என்பதையும்

வாழ்க்கையில்

கிடைத்த

வாய்ப்பை

சரியாக

பயன்படுத்தினால்

மட்டுமே

நாம்

வாழ்க்கையில்

வெற்றி பெற

முடியும்

என்பதையும்

யார் உணர்ந்து

அந்த வாய்ப்பை

சரியான விதத்தில்

பயன்படுத்திக்

கொள்கிறாரோ

அவர்கள் தான்

காலத்தை

வென்று

சரித்திரத்தில்

நிற்க முடியும்

 

இது தான்

வாய்ப்பு என்று

புரிந்து

கொள்ளாதவர்கள்

வாய்ப்பை

சரியாகப்

பயன்படுத்திக்

கொள்ளாதவர்கள்

அனைவரும்

வாழ்க்கையில்

தோல்விதான்

அடைந்து

இருக்கிறார்கள்

 

"மீனுக்காக

வொறுமையாகக்

காத்திருந்து

வாய்ப்பு வந்தவுடன்

கொக்கு எப்படி

மீனை குறி

தவறாமல்

குத்தி பிடித்து

செல்கிறதோ

அதைப் போல

வாய்ப்பு

வரும் வரை

பொறுமையாகக்

காத்திருந்து

வாய்ப்பு

வந்தவுடன்

அதைச்

சரியாக

பயன்படுத்திக்

கொண்டு

நாம்

எந்த செயலை

செய்ய வேண்டும்

என்று

நினைத்து

இருந்தோமோ

அந்த

செயலைச்

சரியாகச்

செய்து

முடிக்க

வேண்டும்"

என்பதைத் தான்

 

திருவள்ளுவர்

 

"கொக்கொக்க

கூம்பும்

பருவத்து

மற்றதன்

குத்தொக்க

சீர்த்த

இடத்து"""""

 

என்ற

திருக்குறளின்

மூலம்

தெளிவுபடுத்துகிறார்.

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-01-2022

------சனிக்கிழமை

 

/////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment