பதிவு-13-வினைவலியும்-
திருக்குறள்-
அழகாக இருப்பவர்
நாவிலிருந்து
எவ்வளவு தைரியமான
வார்த்தைகள்
வெளிவருகிறது என்று
கிளியோபாட்ராவின்
அழகு, தைரியம்
ஆகியவற்றைக்
கண்டு வியந்தார்
ஜுலியஸ் சீசர்
கை கொடுத்த
சீசரின் கையைப்
பிடித்து எழுந்த
கிளியோபாட்ரா
கால் தடுமாறி
கீழே விழப்போன
கிளியோபாட்ராவை
ஜுலியஸ் சீசர்
தாங்கிப் பிடித்தார்
தடுமாறி விழப்போன
என்னை தாங்கிப்
பிடித்தீர்களே
தடம் மாறிப்போன
இதயங்களைக் கொண்ட
என்னுடைய
எதிரிகளிடமிருந்து
என்னுடைய
நாட்டை மீட்டு
என்னிடம்
ஒப்படைப்பீர்களா என்ற
கிளியோபாட்ராவின்
வீரம் நிறைந்த
சாதுர்யமான
வார்த்தைகளைக்
கேட்டு மதி
மயங்கினார்
ஜுலியஸ் சீசர்
ஜுலியஸ் சீசர்
தன்னுடைய
வாழ்க்கையில்
எத்தனையோ
பெண்களிடம் உறவு
வைத்து இருக்கிறார்
அவர்கள் அனைவரும்
அழகாக மட்டும் தான்
இருந்திருக்கிறார்கள்
முதன் முறையாக
அழகு தைரியம் வீரம்
ஆகியவற்றைக்
கொண்ட அழகிய
பெண்ணான
கிளியோபாட்ராவைப்
பார்த்தார்
கிளியோபாட்ராவின்
பார்வை
ஜுலியஸ் சீசரின்
இதயத்தைத் துளைத்து
இயங்க விடாமல்
செய்தது
கிளியோபாட்ராவின்
பார்வை
ஜுலியஸ் சீசரின்
நுரையீரலுக்குள்
புகுந்து மூச்சு
விடாமல் செய்தது
சிந்தை தடுமாறினார்
ஜுலியஸ் சீசர்
கிளியோபாட்ரா
ஜுலியஸ் சீசரை
காதலினால்
வீழ்த்தினார்
கண்கள் கலந்தன
மனங்கள் கலந்தன
உணர்வுகள் கலந்தன
உயிர்கள் கலந்தன
ஜுலியஸ் சீசரினுள்
காதல் எழுந்து
விட்டதால் அவர்
கிளியோபாட்ராவின்
நினைவிலேயே
இருந்தார்
கிளியோபாட்ராவுக்காக
எதையும் செய்யத்
துணிந்தார்
கிளியோபாட்ராவின்
காலடியில்
வீழ்ந்து கிடந்தார்
ஜுலியஸ் சீசர்
கிளியோபாட்ராவின்
காலடியில்
வீழ்ந்து கிடந்தார்
என்று எழுதாமல்
ரோமபுரி நாட்டின்
வரலாற்று ஆசிரியர்கள்
கிளியோபாட்ரா
ஜுலியஸ் சீசரை
மயக்கினார் என்று
எழுதி ஒரு சிறந்த
அறிவாளியான
திறமையான
ராஜ தந்திரியான
பல்வேறு
சிறப்புகளைப் பெற்ற
கிளியோபாட்ராவை
தவறாக சித்தரித்து
எழுதி விட்டார்கள்
கிளியோபாட்ராவின்
காதலால் காலடியில்
வீழ்ந்து கிடந்த
ஜுலியஸ் சீசர்
கிளியோபாட்ராவின்
கட்டளைக்கு அடிபணிந்து
கிளியோபாட்ராவின்
எதிரியான
பொதினேஸைக்
கொன்றார்
-------என்றும் அன்புடன்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------22-01-2022
-------சனிக்கிழமை
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment