January 23, 2022

பதிவு-12-வினைவலியும்- திருக்குறள்

 பதிவு-12-வினைவலியும்-

திருக்குறள்-

 

படகானது

அலெக்சாண்டிரியா

கரையை

அடைந்தவுடன்

அப்போலோடோரஸ்

(APPOLLODORUS)

கயிற்றால் கட்டி

சுருட்டி

வைக்கப்பட்டிருந்த

ஒரு கம்பளத்தை

கைகளில் ஏந்தியபடி

ஜுலியஸ் சீசர்

தங்கியிருந்த

மாளிகையை நோக்கி

நடந்து அதனை

அடைந்தார்

 

ரோமபுரி வீரர்கள்

அவரை தடுத்து

நிறுத்தி

எங்கிருந்து

வந்திருக்கிறாய்

என்ன கொண்டு

வந்திருக்கிறாய்

கம்பளத்தில் என்ன

இருக்கிறது

என்று கேட்டனர்

 

அதற்கு

அப்போலோடோரஸ்

(APPOLLODORUS)

எகிப்து மகாராணி

கிளியோபாட்ரா

உங்கள் மாமன்னர்

ஜுலியஸ் சீசருக்கு

பரிசு அனுப்பி

வைத்திருக்கிறார்

அதை அவரிடம்

ஒப்படைக்க வேண்டும்

அதுவும் தனிமையில்

ஒப்படைக்க வேண்டும்

அதுவும் ரகசியமாக

ஒப்படைக்க வேண்டும்

என்றார்

 

எகிப்து மகாராணி

கிளியோபாட்ரா

பெயரைக் கேட்டவுடன்

ரோமபுரி வீரர்கள்

விலகி வழி

விட்டனர்

 

கிளியோபாட்ரா

பெயரைச் சொல்லி

யார் வந்தாலும்

அவர்களுக்கு

தொந்தரவு

கொடுக்காமல்

சோதனை எதுவும்

செய்யாமல்

அனுமதிக்க

வேண்டும் என்பது

ஜுலியஸ் சீசரின்

கட்டளை

 

அதனால்

ரோமபுரி வீரர்கள்

அப்போலோடோரஸ்

(APPOLLODORUS)

அவர்களை

எந்தவிதமான

சோதனையும்

செய்யாமல்

அவரை

அனுமதித்தனர்

 

ஜுலியஸ் சீசர்

அறைக்குள் சென்றவன்

மாமன்னர் அவர்களே

எங்கள் மகாராணி

கிளியோபாட்ரா

அவர்கள்

தங்களிடம்

இந்தப் பரிசை

ஒப்படைக்கச்

சொன்னார் என்று

சொல்லி விட்டு

சுருட்டி வைக்கப்பட்டு

கயிற்றால்

கட்டப்பட்டிருந்த

கம்பளத்தை

மெதுவாக தரையில்

வைத்து விட்டு

சென்று விட்டார்

 

கம்பளத்தை கட்டி

வைத்திருந்த கயிற்றை

தன்னுடைய வாளால்

அறுத்து அதன் ஒரு

முனையைப் பிடித்து

மேல்நோக்கி இழுத்தார்

ஜுலியஸ் சீசர்

 

கம்பளத்துக்குள் இருந்து

தரையில் உருண்டு

ஜுலியஸ் சீசரின்

காலடியில் வந்து

படுத்த நிலையில்

கிடந்தார்

கிளியோபாட்ரா

 

கிளியோபாட்ராவின்

அழகில் மயங்கி

தன்னை மறந்த

நிலையில் நின்று

கொண்டிருந்த

ஜுலியஸ் சீசரைப்

பார்த்து படுத்துக்

கிடப்பவர்களை

தூக்கி விட

வேண்டும் என்ற

எண்ணம் உங்களுக்கு

இல்லையா

படுத்து கிடப்பவர்களை

அப்படியே விட்டு

விடுவீர்களா

தூக்கி விட

மாட்டீர்களா என்றார்

கிளியோபாட்ரா

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------22-01-2022

-------சனிக்கிழமை

//////////////////////////////////////////////

No comments:

Post a Comment